Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

We need the model of the Church at Ephesus of the 1st century

முதலாம் நூற்றாண்டு எபேசு பட்டிணத்து சபையே
இன்றைய காலக் கட்டத்தின் முக்கிய ஆவிக்குரிய தேவை.

எபேசு பட்டணத்து சபையின் சிறப்பு என்னவென்றால் உபதேசங்களை சீர்தூக்கிப் பார்த்து அதை போதிப்பவர்கள் சரியானவர்களா என்று புரிந்து போலிகளை நிராகரித்த செயல்தான்.

*இன்றைய காலக் கட்டத்தின் முக்கிய ஆவிக்குரிய தேவை என்னவென்றால்* *எபேசு சபை பின்பற்றின அந்த முன்மாதிரி தான்.*

எந்த சபை அடிப்படை உபதேசங்களை பாதுகாக்கிறதோ, துர் உபதேசங்களுக்கு எதிராக எதிர்த்து நிற்கிறதோ அந்த சபை கால வரலாற்றில் நீடித்து நிற்கும்.

*அடிப்படை உபதேசம் இல்லாமல் கட்டப்பட்ட எந்த* *சபையும் துர் உபதேசங்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிடும்.*
இதற்கு உதாரணம்க்ஷ வரலாற்றில் பல உண்டு.
ஆதி திருச்சபை வரலாற்றில் எபேசு சபை இதற்கு ஒரு நல்ல உதாரணம். இந்த எபேசு சபை கட்டப்படுவதற்கு காரணமாயிருந்தவர் மிஷனரி பவுல்.
*ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் இந்த இடத்தில் தங்கி இந்த சபையை ஸ்தாபித்தார் .*
அதற்குப் பிறகு அந்தப் பொறுப்பை தீ மோத்துவிடம் ஒப்புவித்தார்.

அதற்குப் பிறகு அப்போஸ்தலர் யோவான் சபையின் வளர்ச்சியில் பங்கு பெற்றதாக அறியமுடிகிறது.
*இப்படி பவுல், யோவான், போன்ற மிகப்பெரிய பரிசுத்தவான்களால் கட்டப்பட்ட சபை* *எபேசு சபை.*
*அது அடிப்படை உபதேசத்தில் மிகவும் ஆழமாக கட்டப்பட்டது.*
இந்த சபையை குறித்து தான் ஆண்டவர் வெளிப்படுத்தின விசேஷத்தில் மிகவும் பாராட்டி இருக்கிறார்.

' நீ எவ்வளவு உழைத்திருக்கிறாய், எவ்வளவு மனவுறுதி காட்டியிருக்கிறாய் என்பதை அறிவேன். தீயவர்களின் போக்கை நீ சகிக்கிறதில்லை என்பதும் எனக்குத் தெரியும், அப்போஸ்தலர்களாய் இல்லாதிருந்தும் சிலர் தங்களை அப்போஸ்தலர்களாக்கிக்கொண்டார்கள்.
அவர்களைப் பரிசோதித்து, அவர்கள் பொய்யர்கள் என்று கண்டறிந்தாய். மனவுறுதியோடும் நீ விளங்குகிறாய். என் பெயரின் பொருட்டு எவ்வளவோ தாங்கிக் கொண்டாய். ஆயினும் தளர்ச்சியுறவில்லை." வெளி 2:2-3

I know thy works, and thy labour, and thy patience, and how thou can not bear them which are evil: and thou hast tried them which say they are apostles, and are not, and hast found them liars:
And hast borne, and hast patience, and for my name's sake hast laboured, and hast not fainted.

பல வருடங்கள் கடந்த பிறகு கூட இந்த சபையை குறித்து St. Ignatius of Antioch என்பவர் பாராட்டி எழுதி இருப்பதாக வரலாற்று குறிப்புகள் சொல்கிறது.

“You all live according to truth, and no heresy has a home among you: indeed, you do not so much as listen to anyone if they speak of anything except concerning Jesus Christ in truth”

( *நீங்கள் அனைவரும் சத்தியத்தின்படி வாழ்கிறீர்கள், உங்களுக்குள்* *எந்த தவறான உபதேசமும் இல்லை: உண்மையில், உண்மையாக* *இயேசு கிறிஸ்துவின் போதனைகளை தவிர வேறு எதையும் பேசினால்*
*நீங்கள் கேட்கும் நிலையில் இல்லை.)*

என்ன அருமையான சாட்சிபாருங்கள்.
இப்படிப்பட்ட சாட்சியை இன்றைய சபைகளை குறித்து நாம் சொல்ல முடியுமா ?
சபையின் உபதேச கோளாறுகள் வெட்கக்கேடாக இருக்கிறது.
துர் உபதேசங்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து இருந்தால் இந்த அளவுக்கு துர் உபதேசங்கள் பெருகி இருக்காது. முளையிலேயே கிள்ளி எறியக் கூடிய தைரியமுள்ள தலைவர்கள் நம்ம் மத்தியில் காணப்படாதது கொடுமையிலும் கொடுமை.

*இன்றைக்கு சபைகள் 10 ஆண்டுகள் 20 ஆண்டுகள் கூட தாக்குப் பிடிப்பதில்லை.*
*கட்டப்படுகின்ற சபைகள் ஒரு தலைமுறையை தாண்டி* *போவதில்லை.*
அடுத்த தலைமுறை வருவதற்குள்ளாகவே பலவித குழப்பங்கள் பிரச்சனைகளால் சூழ்ந்து *கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது* . முக்கிய காரணம் உபதேச கேடுகள்.
தகப்பனார் எந்த போதனையை சொல்லி ஆரம்பித்தாரோ அந்த போதகத்தை பின்னால் வருகிற அவருடைய பிள்ளைகள் போதிப்பதில்லை.

பின் அவரது பேரன்கள் தாத்தா, தகப்பன் போதித்த போதனையை ஆதரிப்பதில்லை.

இப்படி தலைமுறைக்கு தலைமுறை சபையில் உபதேசங்கள் மாறி கொண்டிருந்தால் அந்த சபை எப்படி நிலைத்து நிற்கும்? இந்த சிந்தனைகளை மிகுந்த பாரத்தோடுஉங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

*எந்த சபைகள் உபதேசத்தால் கட்டப்படுகிறதோ அந்த சபைகள் காலத்தால் ஓரளவுக்கு நிலைத்து நிற்கும்.*

*இன்றைய வாலிபர்களுக்கு அடிப்படை கிறிஸ்தவ உபதேசங்களை, கோட்பாடுகளை, போதிப்பதற்கு பதிலாக அவர்களை நடனமாடுவதற்கும், ஆடுவதற்கும் ஆராதனை என்ற பெயரில் பயிற்சி கொடுப்பது மிகவும் ஆபத்தான காரியம். எசக்கியேல் சண்முகவேல்*