Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

மாறாதவைகளே
*தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும்* *மாறாதவைகளே.*
ரோமர் 11:29

*இந்த வாக்குத்தத்தம் யாருக்கு பொருந்தியதோ இல்லையோ ஆரோனுக்கு முழுமையாக பொருந்தி விட்டது* .

ஆரோன்‌ மோசேயின் அண்ணன்.
தேவன் இஸ்ரவேல் ஜனங்களை மீட்பதற்காக‌ மோசேயை அழைத்த பொழுது அவன் பலவித சாக்குப் போக்குகளை சொல்ல ஆரம்பித்தான்.

வேறு வழி இல்லாமல் தேவன் அவனுக்கு உதவியாக‌ ஆரோனை தெரிந்தெடுத்தார்.

ஆரோன் மோசேக்கு வாயாக மாறினான்.
மோசே ஆரோனுக்கு தேவனாய் மாறினான்.

கர்த்தர் மோசேக்கு சொன்ன வார்த்தைகளை மோசே ஆரோனுக்கு சொல்லி, அந்த வார்த்தைகளை ஆரோன் பார்வோனுக்கு சொன்னான்.

இவ்விதமாக இஸ்ரவேல் ஜனங்களை மீட்கும் பணியில் ஒரு மிகப்பெரிய பொறுப்பு ஆரோனுக்கு கிடைத்தது.

அதற்குப் பிறகு ஆசாரிய ஊழியம் செய்யும்படியாக ஆரோனை தேவன் தெரிந்து கொண்டார். அவன் இஸ்ரவேலின் முதல் ஆசாரியனாக ‌ மாறக்கூடிய அழைப்பை பெற்றான்.

இவ்வளவு கனத்தையும் மகிமையும் தேவனிடத்தில் இருந்து பெற்றவன்தான் இந்த ஆரோன்.

ஆனால் மோசே 40 நாள் தேவனோடு சஞ்சரித்து தேவன் எழுதின கற்பலகைகளை பெற்று
திரும்பி வருவதற்குள் இஸ்ரவேல் ஜனங்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களை வழிநடத்ததக்கதாக தெய்வங்களை உண்டு பண்ணுவதற்கு இஸ்ரவேல் பெண்களின் நகைகளை கொண்டுவருமாறு சொன்னவன்தான் இந்த ஆரோன் .
அப்படி கொண்டு வந்த நகைகளை கொண்டு ஒரு கன்றுக்குட்டியை உருவாக்கினான்.
அந்தக் கன்று குட்டிக்கு இஸ்ரவேல் ஜனங்கள் பலிபீடம் கட்டி ஆராதித்தார்கள்.
யாத்32:1-8

*இந்த இடத்தில் ஆரோன் செய்த மிகப்பெரிய பாவத்தை பார்ப்போம்* .

*இஸ்ரவேல் ஜனங்கள் மோசே* *வருவதற்கு* *தாமதமான போது, எங்களை வழிநடத்த தெய்வங்கள் வேண்டும் என்று கேட்ட பொழுது ஆரோன் அவர்களை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும்.*
ஏனென்றால் மோசே இல்லாத அந்த நேரத்தில் மோசேக்கு பதிலாக இருந்தவன் இந்த ஆரோன்.
தேவனுடைய எல்லா வல்லமைகளையும் அற்புதங்களையும் நேராக கண்டவன் .
அப்படிப்பட்டவன் அவர்களை கண்டித்து திருத்துவதற்கு பதிலாக‌ அவர்களுடைய இச்சைக்கு ஏற்றபடி செயல்பட ஆரம்பித்தான்.

இது எவ்வளவு பெரிய தவறு என்று பாருங்கள்.

அவர்களைக் கண்டித்து திருத்த வேண்டிய ஆரோன்
இச்சைகளை நிறைவேற்றிய ஊழியக்காரனாக மாறிவிட்டான்.

பத்து கட்டளைகளில் முதல் இரண்டு மற்றும் ஏழாம் கற்பனைகளை இஸ்ரவேல் ஜனங்கள் மீறுவதற்கு காரணமாகி விட்டான்.

இந்தக் காரியத்தில் தேவன் உணர்த்தும் இரண்டு சத்தியங்கள்.

1. மோசே சொன்னது போல மிகப் பெரிய பாவத்திற்கு காரணமாக இருந்தாலும் தேவன் அதை‌ மறந்து, பொருட்படுத்தாமல், தேவன் ஏற்கனவே அவனை ஆசாரியனாக ஏற்படுத்திய நியமனத்தை ரத்து செய்யவில்லை.
தேவன் ஒருவனுக்கு கொடுத்த கிருபை வரங்களையும் அழைப்பையும்ஒருபோதும் திரும்ப பெற்றது இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.
மிகப்பெரிய‌ இடறலுக்கு காரணமான அந்த ஆரோனை தண்டிக்காமல் அவனுக்கு முன் குறித்த உயர்வை ரத்து செய்யாமல் இருந்தது தேவனுடைய பண்பு.(Divine attributes)

2. எப்படி இந்த கடைசி காலங்களில் விசுவாசிகள் தங்கள் சுய இச்சைகளுக்கு ஏற்ற போதகர்களை திரளாக சேர்த்துக் கொள்வது போல அந்த காலத்திலும் இஸ்ரவேல் மக்கள் ஆசைகளை நிறைவேற்ற ஒரு ஆரோனை தெரிந்து கொண்டார்கள் என்பதுதான் உண்மை.2,தீமோ 4:3
எந்தத் தலைவர்கள் விசுவாசிகளுக்கு ஏற்றபடி ,அவர்களை பிரியப்படுத்தும்படி, அவருடைய இச்சைகளை நிறைவேற்றும் படியான செய்திகளை பேசுகிறார்களோ அவர்கள் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்.

*அதே வேளையில் கடவுள் தான் அழைத்த காரணத்தினாலும் ஊழியக்காரனுடைய தவறுக்காக கடவுள் அவரை தண்டிக்காத நேரத்திலும் அவருடைய ஊழியத்தை அவரிடம் இருந்து எடுக்காத காலகட்டத்திலும் அவர் பேசுவதெல்லாம் உண்மை என்று நம்பி அவரை பின்பற்றி விடக்கூடாது.*
எசேக்கியல் சண்முகவேல்