Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

Misapplication of Isaiah 45:4

*Misapplication of Isaiah 45:4*
*ஏசாயா 45:4 ன்.சரியான விளக்கம்*

*வேதத்தை தவறாக கையாளுகிற மூன்று முறைகள்.*

1. *Misinterpretation of the scripture*
*தவறான வியாக்கியானம்*

2. *Misapplication of the scripture*
ஒருவருக்குசொல்லப்பட்ட வசனத்தை
இன்னொருவருக்கு பொருத்திப் பார்ப்பது.

3 *.Dislocation of the scripture*
ஓரிடத்தில் சொல்லப்பட்ட நிகழ்வை இன்னொரு இடத்தில் பொருத்திப் பார்ப்பது‌

இதில் கிறிஸ்தவ உலகத்தில் " *Misapplication of the scripture " தான் மிக* *அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.*
*அப்படி தவறாக பயன்படுத்தப்பட ஒன்றுதான் ஏசாயா 45:4.*
இந்த வசனத்தை புதுவருட வாக்குத்தத்தமாக பயன்படுத்தாத சபைகளே கிடையாது.
"வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு நாமம் தரித்தேன்"
ஏசாயா 45:4

இந்த வாக்குத்தத்தம் பாபிலோனிய மன்னனான கோரேசுக்கு கொடுக்கப்பட்டது.

இந்த மன்னன் பிறப்பதற்கு 210 ஆண்டுகளுக்கு முன்பாகவே தேவனால் உரைக்கப்பட்ட வார்த்தை இது.
இன்னும் சொல்ல போனால் சாலமோன் கட்டின ஆலயம் இடிக்கப்படுவதற்கு 140 ஆண்டுகளுக்கு முன்பாக சொல்லப்பட்ட வசனம்.

எதற்காக இந்த வாக்கு இந்த மன்னனுக்கு கொடுக்கப்பட்டது என்றால் இவன் பாபிலோனில் சிறைப்பட்டிருக்கிற யூதர்களை யூத தேசத்திற்கு அனுப்பவும், இடிக்கப்பட்ட எருசலேம் ஆலயத்தை கட்டுவதற்கு பொருளுதவி செய்வதற்கும் இந்த ஒரு வாக்குத்தத்ததை தேவன் கொடுக்கிறார்.
.
தன்னைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன இந்த வசனத்தை கோரேசு இராஜா கேட்டு ஆச்சரியப்பட்டு இஸ்ரேல் ஜனங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி இடிந்து போன தேவாலயம் கட்டுவதற்கான எல்லா பொருளாதார உதவிகளையும் செய்தான் .
எனவே ஏசாயா 45:4ல் சொல்லப்பட்டது என்பது குறிப்பிட்ட ஒரு புறயின அரசனுக்காக கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் .ஆனால் இதை யூதர்களோ, ஏன் கிறிஸ்தவர்களோ அதை பயன்படுத்தி தேவனிடத்தில் உரிமை கோர முடியாது.
அது அவர்களுக்கு பொருந்தாது.
*இன்னும் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஏசையா 44 :28 இல் இருந்து தான் இந்த சம்பவம் தொடங்குகின்றது.*

*ஏசைய45:4 ஐ படிப்பதற்கு முன்பாக 44 :28 யும்* *சேர்த்து படிக்க வேண்டும்‌.*

இப்படி பகுத்தாய்வு செய்து வியாக்கியானம் பண்ணுவது தான் சரியான முறை என்பது என் கருத்து.
தேவன் தம்முடையபிள்ளைகளை ஆசீர்வதிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
ஆனால் தேவையில்லாத வசனங்களை எடுத்து நமக்கு என்றுசொந்தம் பாராட்டுவது தான் தவறு. அதுவும் ஆன்மீக ஆசிர்வாதங்களை அதிக முக்கியத்துவ படுத்துகின்ற தேவனுடைய சபைக்கு இப்படிப்பட்ட உலக ஆசீர்வாதங்களை சொல்லி போதிப்பது சரிதானா என்பது கேள்விக்குறி.

இதோடு சம்மந்தப்பட்ட இன்னொரு காரியம்
*சாதாரணமாக வேதத்தை (Plain Bible) ஐ படிக்கும் போது இவைகள் நமக்கு புரியாது.*
சரியான commentary, study Bible மூலமாக இப்படிப்பட்ட காரியங்களை விளக்கிக் கொள்ளலாம்.
எனவே விசுவாசிகள் வெறும் வேதத்தை(Plain Bible )மட்டும் படிக்கக்கூடாது. அதை புரிந்துகொள்ள ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு விளக்க உரையும் வேத ஆராய்ச்சி வேதமும்மிகவும் அவசியமென்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
*ஒரு விசுவாசிக்கு வேதத்தை சரியான முறையில் புரிந்து கொள்ள அவசியம் தேவையானது மூன்று*
1 . *ஆராய்ச்சி வேதம்.Study Bible*
2. *சிறந்த ஏதாவது ஒரு வேத வியாக்கியான* *நூல்.Bible commentary*
3. *Bible dictionary. வேதாகம அகராதி.*
இந்த மூன்றையும் ஒரு விசுவாசி ஆரம்ப நிலையிலேயே பயன்படுத்த ஆரம்பித்தால் பின் நாட்களில் அவர் பயனுள்ள பாத்திரமாக மற்றவர்களுக்கு வேதத்தை போதிக்கின்ற கருவியாக மாறுவார் எந்த சந்தேகமும் கிடையாது.
இந்த அறிவு போதகருக்கு போட்டியாக அல்ல சபைக்கு பயனுள்ளதாக காணப்படும்.
இதை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தவர் BYM .R . Stanley அவர்கள். இந்த ஆலோசனையை நான் பயன்படுத்தி வருகிறேன்
.
எசேக்கியேல் சண்முகவேல்