Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

Belivers have the right to know the basic christian theology


*Belivers have the right to know the basic christian theology .இது விசுவாசிகளின்* *உரிமை* .

ஆதி திருச்சபையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவர்கள் அப்போஸ்தலர்களுடய உபதேசத்தில் தரித்திருந்தது.
(அப்போ 2:42)

அதாவது அவர்கள் *புதிய ஏற்பாடு உபதேசத்தில் உறுதியாக இருந்தார்கள்.பழைய* *ஏற்பாடு வார்த்தைகளை ஒப்பிட்டு புதிய* *ஏற்பாடு அப்போஸ்தல உபதேசங்களை* *புரிந்து கொண்டார்கள்.*
*
வேதத்தின் அடிப்படையான உபதேசங்களை கற்று கொள்வது என்பது எல்லா விசுவாசிகளுக்கும் உள்ள உரிமையாகும்.
*இறையியல் அறிவு என்பது எதோ போதகர்கள், தலைவர்கள் என்று இவர்களுக்கு மட்டும் உள்ள தனிப்பட்ட சொத்து* *அல்ல* .

*ஒவ்வொரு விசுவாசியும் ஒரு இறையியல் மாணவன்தான்* .

எனவே தங்களிடம் உள்ள விவாசிகளுக்கு அடிப்படை இறையியலை போதிக்க ஒவ்வொரு* போதகரும், ஆயரும் கடமைப்பட்டுள்ளனர் .

*Every pastor is obligated to teach the basic Christian theology to his congregation and every believer has the* *right to get such teachings from his pastor.*
While the believer is _supporting the pastor financially the pastor inturn is. bound to give what he learnt from the Bible college._

II கொரி 11:3 இல் பவுல் பயந்த காரியங்கள் இன்று நடந்து கொண்டிருக்கிறது.
இறையியல் இருளுக்குள் விசுவாசிகளை தள்ளி அவர்கள் பின்னாளில் எது தவறு ,எது சரி என்று புரிந்து கொள்ள முடியமால் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் போல் உபதேச குழப்படிக்குள் சிக்கி தவிக்க போதகர்கள் காரணமாகிவிடுகிறார்கள்.

இன்றைய விசுவாசிகள் சத்தியத்துக்கு விலகி கட்டுக்கதைகளுக்கு செவிசாய்க்க கிறிஸ்துவ தலைவர்கள்தான் காரணம்.

தவறான உபதேசங்கள் வெள்ளம் போல் வரும் போது அதை சபை தலைவர்கள் கண்டுகொள்ளாமல் விடுவது மிகவும் ஆபத்தானது.
ஆதி திருச்சபைகளில் ‘GNOSTICISM'போன்ற உபதேசங்கள் எழும்பினபோதும் சரி , புதிய ஏற்பாட்டு நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் 'MARCION' போன்ற மிகவும் வஞ்சகமான சாத்தானின் கூலியாள் தோன்றினபோதும் சரி அப்போது உள்ள அப்போஸ்தலர்கள், தலைவர்கள் ஒன்றுகூடி எதிர்த்து தங்களுக்கு போதிக்கப்பட்ட அப்போஸ்த்தல உபதேசங்களை பாதுகாத்தார்கள்.
பின்பு மார்ட்டின் லூதர் போன்றவர்களும் அதை உயர்த்தி பிடித்தார்கள். இன்று நிலைமை அவ்வாறு இல்லை,ஆனால் ஆயர்கள் போதகர்கள் தங்களிடம் உள்ள ஆத்துமாக்களுக்காவது போதித்து அவர்களை பாதுகாத்து கொள்ளவேண்டும்.
சரியான சத்தியங்களை விசுவாசிகளுக்கு போதித்தால் மட்டுமே எதிர்காலத்தில் சபையினுடைய வீழ்ச்சியை பாதுகாக்க முடியும்.

அடிப்படை சத்தியங்களை போதிக்காமல் செழிப்பின் உபதேசத்தை வலியுறுத்தி போதித்த காரணத்தினால் தான் மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்தவம் வீழ்ச்சி அடைவதற்கு முக்கிய காரணம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
*எல்லா விசுவாசியும் இறையியலின் ஆனா, ஆவன்னா* *THEOLOGY பாடத்தை கற்று கொள்ள முயற்சிக்க* *வேண்டும்* .
*
இறையியல் என்பது இந்துக்கள் சொல்வது போல சிதம்பர ரகசியம் அல்ல. Knowledge of theology is not luxury.
It is a dire necessity for every born again Christian.
விசுவாசிகளும் அடிப்படை அப்போஸ்தல உபதேசங்களை போதிக்க, போதகர்களை ஆயர்களை வேண்டிக்கொள்ளவேண்டும்.
சாதாரண விசுவாசிக்கும் உரிய மதிப்பளித்து அவர்களை இறையியல் பாடத்தில் பண்டிதராக்குங்கள். இறையியல் பாடத்தை மகிழ்ச்சிகரமாக மாற்றுங்கள்.
.இந்த இடத்தில் WILLIAM BARCLAY என்ற வேத பண்டிதர் சொன்ன வார்த்தைகளை குறிப்பிட விரும்புகிறேன்
‘I *decided I must dedicate my life to making scholarship available for the laymen ,so that he may know better his Bible ,his God and his* *Saviour* .
அவரின் விருப்பத்தை போல் எல்லா போதகர்களும் ஆயர்களும் விரும்பி செயல் பட்டால் அதுதான் திருச்சபைகளின் விடுதலை நாள் .
அந்நாள் எந்நாளோ?
Ezekiel shanmugavel