நம்முடைய பாரங்கள், வருத்தங்கள், கவலைகள் இரண்டு வகைப்படும்.
*நம்முடைய பாரங்கள், வருத்தங்கள், கவலைகள்* *இரண்டு வகைப்படும்.*
ஒன்று மற்றவரிடம் அந்த பாரங்களை பகிர்ந்து கொண்டு நம்முடைய மனசோர்வை கொஞ்சம் நீக்கி கொள்ளலாம். அல்லது அவர்களிடம் நம்முடைய பாடுகளுக்காக விண்ணப்பம் பண்ண கேட்டுக் கொள்ளலாம்.
இந்த பாரங்கள் தனிப்பட்ட காரியங்களுக்காகவும், ஊழியங்களுக்காகவும் இருக்கலாம்.
இப்படிப்பட்ட பாரங்களை நாம் நம்பும் நபர்களிடம் சொல்லும் போது அதை அவர்கள் ஓரளவுக்கு புரிந்து கொண்டு உணர்ந்து கொண்டு அதற்காக ஜெபிக்கக்கூடும்
இதில் எந்தத் தவறும் இல்லை.
இப்படிப்பட்ட கவலைகளை மற்றவர்களிடம் சொல்லுவதினால் எந்த விதத்திலும் நம்முடைய மதிப்பு தாழ்ந்து விடாது.
அதே வேளையில் சில பாரங்கள் ,கவலைகள் நாம் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத காரியங்களாக இருக்கும்.
இந்த பாரத்தின் வலியை, ஆழத்தை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள முடியாது.
மேலும் அவர்களிடம் சொல்லுவதன் மூலம் நமக்கு எந்த பலனும் கிடைக்காது. அது சில நேரங்களில் ஆபத்தாக முடிந்து விடும்.
இந்த ஆவிக்குரிய உலகத்தில் யாரையும் நம்பி அப்படிப்பட்ட பாரங்களை மற்றவரிடம் சொல்லி நாம் ஆறுதல் அடைய கூடாது. ஏனென்றால் அவர்கள் இதனுடைய வலியை ஆழத்தை உணர்வை புரிந்து கொள்ள முடியாது.
இதை நாம் மட்டுமே சுமக்க வேண்டும் அதுதான் கர்த்தர் விரும்புகிறார்.
பாரங்களை ஏன் நம்முடைய குடும்ப உறுப்பினர்களும் குறிப்பாக நம்முடைய மனைவியோ கணவனோ கூட அதை சரியாக உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள முடியாது.
இப்படிப்பட்ட நேரங்களில் நாம் கர்த்தரிடம் சொல்லி மன்றாடுவதை தவிர வேறு வழி இல்லை. இந்த பாரங்களை மற்றவரிடம் சொல்லும்போது சில நேரங்களில் அது நம்முடைய ஆவிக்குரிய தரத்தை குறைத்து விடுவதாக இருக்கும்
அந்த வலியினுடைய ஆழத்தை அவர்கள் புரிந்து கொள்ளாமல் நம்மை அற்பமாக நினைக்க கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம்.
இயேசு கிறிஸ்து கல்வாரியில் சுமந்த பாரங்கள் வேதனைகள் அவர் மட்டுமே சுமந்தார்.
யாரிடமும் பங்கிட்டு கொடுக்கவில்லை. வெளிப்படையாகவும் முழுவதுமாக சொல்லவில்லை.
கெத்சமனே தோட்டத்தில் கூட சீசர்களை ஜெபிக்க அழைத்து சென்றாரே தவிர அவர்களிடம் தான் சந்திக்கப் போகிற வேதனையை அணு அளவாவது சொல்லி ஜெபிக்க கேட்டுக்கொள்ளவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளை விசுவாசிகள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தேவன் அனுமதிப்பார் .
அப்படிப்பட்ட நேரத்தில் நாம் யாரிடமும் சொல்ல முடியாத சூழ்நிலைகள் இருக்கும் அதைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டாம்.
அவர் நம்முடைய பாரங்களை விசாரிக்கிறவர் என்று வசனம் சொல்லுகிறது.
விசாரிக்கிற கடவுளிடம் நாம் சொல்லும் போது தான் நமக்கு விடிவு காலம் கிடைக்கும்.
நம்முடைய காரியங்களை விசாரிக்கிற பலர் அதற்காக ஜெபிப்பதற்கு பதிலாக நம்முடைய பாடுகளை பரப்புகிற செயலாளராக அனேக நேரங்களில் மாறிவிடுவார்கள்.
இயேசுவைப் போல மாற வேண்டும் என்றால் இந்த வழியிலும் விசுவாசிகளை அழைப்பார்.
நம்மை அழைத்தவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே.
அவரே நம்முடைய உணர்வுகளை வலிகளை பாரங்களை முழுவதுமாக அறிந்தவர் அவர் நமது பட்சத்தில் இருக்கிறபடியால் அவர் நம்பத்தகுந்தவர்.
நமக்கு விடுதலை கொடுக்கிறவர்.
.அப்படி இருக்க நிலையில்லாத மனிதர்களிடம் சொல்லி எந்த பயனும் இல்லை.
இப்படி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவர்களுக்கு முன்னோடியாக இருப்பவர் நம்ம இரட்சகன் இயேசு கிறிஸ்து இருக்கிறார்.
அவருடைய பாடுகளுக்கு பங்குள்ளவர்களாக மாறிவிடுகிறோம் .
எனவே எல்லோரிடமும் எல்லாவித கவலைகளையும் சொல்லி நாம் நம்முடைய தனித்துவத்தை இழக்க வேண்டாம்.
எசேக்கியேல் சண்முகவேல்