Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

சிம்சோனின் பெற்றோர் கற்றுக் கொடுக்கும் பாடம் என்ன?
*சிம்சோனின் பெற்றோர் கற்றுக் கொடுக்கும் பாடம் என்ன?*
வேதத்தில் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று கடவுளிடத்தில் கேட்டு வளர்த்த முதல் குடும்பம் மனோவாவின் குடும்பம்.

*அதுமாத்திரமல்ல பெற்றோர்களாகிய தாங்களும் எப்படி இருக்க வேண்டும்* *என்கிற கட்டளையை கடவுளிடத்தில் பெற்றுக் கொண்ட* *முதல் குடும்பமும் மனோவாவின் குடும்பம் தான்.*

*இப்படி கர்த்தருடைய கட்டளைகளின்படி குழந்தைகளை வளர்த்து தாங்களும் ஆண்டவர் கூறிய* *அறிவுரைகளின் படி நடந்து உருவாக்கப்பட்ட குழந்தை தான் சிம்சோன்‌‌* .

பெற்றோர் தங்கள் கடமைகளை செய்து முடித்து விட்டார்கள்.
ஆனால் சிம்சோன் கர்த்தருடைய சித்தத்தை, கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் இறங்கின‌ நோக்கத்தை வீணடித்து விட்டான்.

அதற்கான காரணங்கள்.
1.கடவுளுடைய கற்பனைகளை அறிந்து அதன்படி நடக்கவில்லை.
அப்படி அறிந்திருந்தால் புறயின மக்களோடு திருமண உறவை வைத்துக்கொள்ள விருப்பப்பட்டி ருக்க மாட்டான்.
புறயினத்தோடு‌ திருமண உறவு செய்து கொள்வதை கடவுள் அங்கீகரிக்கவில்லை.
யாத்34:12-16,
உபா7:1-3
சிம்சோன் அதையும் மீறி பெலிஸ்திய பெண்ணே தனக்கு பொருத்தமானவள் என்று அவனே தீர்மானித்து விட்டான்.
மனைவியை தேடக்கூடிய உரிமையை தேவனிடம் விட்டு விடாமல் அந்த முடிவைத் தானே தன் கையில் எடுத்துக் கொண்டான்.
இது அவன் செய்த முதல் ஆரம்ப தவறு.

2.பெற்றோர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றவில்லை.

பெலிஸ்திய பெண்ணோடு உறவு கொள்வது கடவுளுக்கு விருப்பமில்லாத காரியம் என்று சொன்ன அவனது பெற்றோர்களுடைய விருப்பத்தை நிராகரித்தான்.

3. கர்த்தர் எதையெல்லாம் தொடக்கூடாது, புசிக்கக் கூடாது, குடிக்கக் கூடாது என்று கட்டளையிட்டாரோ அந்தக் கட்டளையை மீறினான்.
திராட்சத் தோட்டம் வழியாக சென்றான்.எண்ணா.6:1-4
இறந்து போன
சிங்கத்தினுடைய சரீரத்தை தொட்டான். இறைவனுடைய கட்டளைப்படி இறந்து போன மிருகத்தினுடைய சரீரத்தை தொடக்கூடாது.

இறந்து போன சிங்கத்தின் சரீரத் திலிருந்து கிடைத்த தேனை அவன் சாப்பிட்டான்.
இது தீட்டான காரியம்.
4.பெலிஸ்தியரோடு ஏற்பட்ட
விரோதத்தை தனிப்பட்ட காரியமாக கருதினான். அதை ஒரு குழுவாக இணைத்து அவர்களோடு போராடவில்லை.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
சிம்சோனுடைய இத்தகைய காரியங்கள் அவனுடைய பெற்றோருக்கு எவ்வளவு மன வருத்தத்தை கொடுத்திருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடியும்.

*பெற்றோர்கள் தங்கள் கடமைகளை சரியாக செய்தாலும்* *பிள்ளைகள் அதை சரியாக புரிந்து கொள்ளாமல் கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றாமல்* *இருக்கிற காரியம் பெற்றோர்களை* *மிகவும் பாதிக்கின்ற ஒன்று.*

கர்த்தருடைய சித்தத்தின்படி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் பின்னாட்களில் அதைப் புரிந்து கொள்ளாமல் கர்த்தருக்கு தூரமாக இருப்பதும், கர்த்தருடைய சித்தத்தை செய்யாமல் இருப்பதும் போன்ற காரியங்கள் பெற்றோர்களுக்கு கொடுக்கின்ற மிகப்பெரிய அநீதிகளில்
மிகவும் கொடியது.
பெற்றோர்களுக்கு உள்ள ஒரே திருப்தி தங்கள் கடமைகளை முடித்து விட்டோம் என்பதுதான்.

அதுபோல இன்றைக்கும் சில *கிறிஸ்தவ குடும்பங்களில் பெற்றோர்கள் என்னதான் கர்த்தருக்குள் பிள்ளைகளை வளர்த்தாலும் பின்னாட்களில் அவர்கள் கர்த்தரை விட்டு விலகிப் போவதும், கர்த்தருக்கு தூரமாக இருப்பதும் போன்ற காரியங்களை கண்கூடாக பார்க்கலாம்.*

*அனேக நேரங்களில் நாம் மேலேழந்த வாரியாக பெற்றோர்களை குறை சொல்லி அவர்களுடைய அர்ப்பணிப்பை தியாகத்தை மட்டம்* *தட்டி பேசி விடுகிறோம்.*

ஏதேன் தோட்டத்தில் கூட ஆதாம் ஏவாளை மிகப்பெரிய நோக்கத்தோடு கடவுள் அவர்களை படைத்தார்.
ஆனால் அவர்கள் கர்த்தரை விட்டு வழி விலகிப் போகவில்லையா? அதற்காக ஆண்டவரை குறை சொல்ல முடியுமா?

இன்றைக்கும் மனோவாவின் குடும்பத்தைப் போல பல குடும்பங்கள் சபைகளில் காணப்படுகின்றன.

அவர்களது வலியை வேதனையை புரிந்து கொள்ளாமல் பெற்றோர்களை நாம் ஒரு போதும் பரிகாசம் பண்ணக்கூடாது.

*சிம்சோனின் பெற்றோரைப் போல நாமும் நம்முடைய கடமைகளை உத்தமமாக, நேர்மையாக செய்வோம். விளைவுகளை கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுப்போம். தெய்வீக சமாதானம் கர்த்தர்* *நமக்குத் தருவாராக.*. Ezekiel Shanmugavel