Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

விசுவாச வீரர்கள் பட்டியலில் சிம்சோனின் பெயர் எப்படி, ஏன்இடம்பெற்றது.
*விசுவாச வீரர்கள் பட்டியலில் சிம்சோனின் பெயர் எப்படி, ஏன்இடம்பெற்றது.*

நியாயாதிபதிகள் புத்தகத்தில் ஏறக்குறைய 12 பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் இஸ்ரேல் ஜனங்களை நியாயம் விசாரித்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் அவற்றில் கிதியோன், பாராக் சிம்சோன், யெப்தா ஆகிய பெயர்கள் மட்டும்தான் எபிரேயருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் உள்ள விசுவாச வீரர்கள் பட்டியில் இடம்பெற்றிருக்கிறது‌
ஏன் தெபோராள் பெயர்கூட இடம் பெறவில்லை.

*இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட நியாதிபதிகளில் மிகவும் மாமிச பலவீனத்தை வெளிப்படுத்தியவன் சிம்சோன் .*
கடவுளுக்கு பிரியம் இல்லாத வகையில் புறயின பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவளோடு வாழ்க்கை வாழ்ந்தவன்.

பெற்றோர்களுக்கு கீழ்படியாதவன்.

தன்னுடைய கண்கள் இச்சித்ததை அடைய முற்பட்டவன்.
இவனுடைய பெயர் விசுவாச வீரர்கள் பட்டியலில்
இடம்பெற்றிருப்பது பலருக்கு ஒரு சந்தேகத்தை எழுப்புகின்றது.
ஏன் அவனுடைய பெயர் இடம் பெற்றது என்று பார்க்கும் பொழுது சில உண்மைகள் நம்முடைய கண்களுக்கு புலப்படும்.

மூன்று காரணங்கள் அவனுடைய பெயர் விசுவாச வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றதற்கு காரணமாக இருக்கலாம்.

1.நம்முடைய பார்வை வேறு தேவனுடைய பார்வை வேறு.
நாம் சிம்சோன் உடைய வெளித்தோற்றத்தை, செயல்பாடுகளை பார்த்து முடிவு செய்து விடுகிறோம்.

கடவுள் அவனது உள்ளத்தில் சிந்தித்த காரியங்களை நோக்கிப் பார்க்கிறார்.
அவற்றை நாம் நோக்கிப் பார்க்க முடியாது.
"*So if we see people instead of God in that portion of His Word, we miss the point, even though the example of faithful believers can also be* a *blessing to us.* "

*மனிதனுடைய பாவங்களை அளவீடாக வைத்து நாம் எந்த* *ஒரு காரியத்தையும் முடிவு செய்ய வேண்டும் என்றால், தாவீதுடைய குற்றங்களை கடவுள் மன்னித்தாலும்* *அவனுக்கு தேவனுடைய இதயத்தில் கிடைத்த இடத்தை* *மனித சித்தாந்தத்தின்படி ,மனித அளவீடுகளின்படி* *ஏற்றுக்கொள்ள முடியாது.*

ஆனாலும் அவன் கடவுளின் இருதயத்திற்கு ஏற்றவனாக மாறிவிட்டான். அது போல்தான் சிம்சோன்.

2. *சிம்சோன் ஜனங்களை 20 ஆண்டுகள் நியாயம் விசாரித்ததாக பார்க்கலாம்*
அந்த இருபது ஆண்டுகளில் அவனைப் பற்றிய தவறான தகவல்கள் சொல்லப்படவில்லை.

3.. எப்படி திருமுழுக்குநர் யோவான், இறைமகன் ஆகிய இயேசு இவர்களது பிறப்பு தேவ தூதர்கள் மூலமாக முன்னறிவிப்பின் படி நடந்ததோ *சிம்சோனின் பிறப்பும் ‌ கர்த்தருடைய தூதனானவரின்* *முன்னறிவிப்பின் படி நடந்தது. இதுபோன்ற* ஒரு *பிறப்பு இந்த மூவரைத் தவிர யாருக்கும் நேரிடவில்லை. அந்த அளவுக்கு தேவனுடைய திட்டத்தில் பங்கு பெற்றவன் சிம்சோன்.*

*மேலும் கர்த்தருடைய ஆவி சிம்சோன் மேல் பலமாய் இறங்கியதாக இரண்டு இடங்களில் பார்க்கிறோம்.. யம். 14:19,15:7,8,15* .

இதன் மூலம் முதலில் 100 பெலிஸ்தியர்களை அழித்ததாக பார்க்கலாம். பின்பு அநேக எதிரிகளை அழித்ததாக பார்க்கலாம் இறுதியில் அவன் ஜெபத்தை கடவுள் கேட்டுஆயிரத்துக்கு மேலான பெலிஸ்தியர்களை கொன்று தானும் மடிந்ததாக பார்க்கலாம். *மரிக்கும் இறுதி காலத்தில் அவனுடைய ஜெபத்தை* *கேட்டிருக்கும் பொழுது அவனுடைய பெயர்* *விசுவாச வீரர்கள் பட்டியலில் வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.*
தேவன் அழைத்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற முடியாவிட்டாலும் அவன் மூலமாக கர்த்தர் தம்முடைய கிரியையை நிறைவேற்றினார்.
நம்முடைய தேவன் நம்முடைய மூச்சு முடிகின்ற இறுதிக்காலம் வரைக்கும் நம்முடைய ஜெபத்தை கேட்டு அதற்கு பதில் அளிக்கிற கிருபை உள்ள தேவன்.
நாம் கற்றுக் கொள்ளக்கூடிய காரியம்
*வெளியரங்கமான சூழ்நிலைகளை தோற்றங்களை மனதில் வைத்துக்* *கொண்டு ஒரு விசுவாசியின் மீது மதிப்பெண்கள் போடுவதை தவிர்ப்பது நலம்.*
காலங்கள் சூழ்நிலைகளை வெளிப்படுத்துவதற்கு முன்பாக மற்றவர்களை நியாயத்தீர்ப்பு செய்வது நமக்கு நல்லதல்ல‌.
Ezekiel Shanmugavel.