மோசேயின் முகத்திரை நமக்கு உணர்த்தும் பாடம் என்ன?
*மோசேயின் முகத்திரை நமக்கு உணர்த்தும் பாடம் என்ன?*
படிக்க யாத் 34:29-35,2 கொரி 3:13-18
மோசே 80 நாட்கள் தேவனுடைய சமூகத்தில் இருந்து கடவுளோடு பேசியதால் அவன் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்தது.
ஆனால் மோசே அதை அறியவில்லை.
ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மோசேயைப் பார்த்தபோது, அவன் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்ததைக் கண்டு அவனை அணுகிச் செல்ல அஞ்சினார்கள்.
ஆனால் மோசே அவர்களைக் கூப்பிட்டபடியினால்ஆரோனும் மக்கள்கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் அவரை நோக்கி வந்தனர். மோசேயும் அவர்களிடம் பேசினார்.
மோசே அவர்களோடு பேசி முடித்தபின் தன் முகத்தின் மேல் ஒரு முக்காடு போட்டுக் கொள்வார்.
அதே வேளையில் எப்பொழுதெல்லாம்
*மோசே ஆண்டவரோடு உரையாடும்படி சமூகத்திற்கு செல்வாரோ அப்பொழுதெல்லாம் முக்காடு* *இல்லாமல் தேவ சமூகத்திற்கு செல்வார்.*
ஆனால் *இஸ்ரவேலின் தலைவரோடு பேசும் போது முக்காடு போட்டுக் கொள்வார்.*
இதை ஏன் மோசே இப்படி செய்தார்.?
*தேவ சமூகத்திற்கு செல்லும் போது அவர் முகம் ஒளிமயமாய் தோன்றியது* .
காலம் செல்ல செல்ல அந்த முகத்தின் ஒளி மயம் மறைந்துவிடும் .
ஒருவேளை தனது முகப்பிரகாசம் மறைவதை தலைவர்கள் கண்டால் அது அவர்களுக்கு இடறலாக இருக்கும் என்று இப்படி செய்தார்.
இதைத்தான் *பவுல் 2 கொரி3:13-18 தெளிவாக விளக்குகிறார்* . " *நாம் எல்லோரும் முக்காடு இடப்படாத முகங்களுடன்,* *கர்த்தருடைய மகிமையைப் பிரதிபலிக்கிறோம். இவ்விதமாக* மகிமையான நிலையிலிருந்து, மகிமையின்மேல் மகிமையை அடைந்து, அவருடைய சாயலாக மாற்றமடைகிறோம். இது கர்த்தரிடமிருந்தே வருகிறது. அவரே ஆவியானவர்."
2 கொரிந்தியர் 3:18. *மறைந்து போகும் ஒளிமயத்தை மோசே மறைத்தது போல் நாங்கள் மறைக்கவில்லை* *என்று சொல்லுகிறார்* .
இதன் மூலம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன?
இரண்டு பாடங்கள்.
1.நியாயப்பிரமாணத்தை கற்றுக் கொள்வதன் மூலமாக கிடைக்கக்கூடிய மகிமை கடந்து போகக் கூடிய ஒன்று.
ஆனால் நம்முடைய பாவங்களுக்காக மரித்த இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் பொழுது அவர் மகிமை பொருந்தியவராய் நம்மில் தங்கி இருக்கிறார் .இந்த மகிமை அழியாத மகிமை.
இன்னொரு காரியம் என்னவென்றால் *கடந்த காலங்களில் மகிமையாய் கர்த்தருடைய கரத்தில் பயன்பட்ட ஊழியர்கள் அந்த* *மகிமையை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் கர்த்தருக்கு தூரமாக இருக்கின்ற வேளைகளில், கடந்த காலங்களில் தேவன் தங்களை* *பயன்படுத்திய* அந்தப் பெருமையை ,புகழ்ச்சியை சொல்லி, சொல்லி* *தற்பொழுது ஒரு முகமூடியை அணிந்து கொண்டு போலி* *வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.*
மோசே அன்றைக்கு மறைந்து போகின்ற மகிமையை மறைத்து தலைவர்கள் முன்பாக முகமூடி அணிந்தது போல *ஒரு காலத்தில் பிரகாசித்து பின்வாங்கி போன* *ஊழியர்கள், விசுவாசிகள் தற்போது முகமூடி அணிந்த வாழ்க்கை* *வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.*
2.அதே வேளையில் இன்னொரு கருத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இன்றைக்கு அநேகர் நான் *இயேசு கிறிஸ்துவை தரிசித்தேன். தேவ தூதர்களை பார்த்தேன்* .
*தினமும் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்பவருடைய* *முகம் அன்றைக்கு மோசேயின் முகம் ஒளிமயமாக காணப்பட்டது போல்* *இவர்கள் முகம் ஒளிமயமாக காணப்படுகிறதா என்கிற கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்* .
*முகப்பிரகாசம் என்பது* *வெளித்தோற்றம் .*
ஆனால் வசனத்தின் மூலமாக நாம் ஆவியில் மறுரூபமாகும் அனுபவம் அதைவிட உன்னதமானது.
Ezekiel Shanmugavel