இரண்டு வகையான பயங்கள்
*இரண்டு வகையான* *பயங்கள்* .
*Courage isn’t necessarily the absence of fear; it’s the overcoming of fear by transforming it into power*
*விசுவாசிகள் பயப்படலாமா?.*
இதைப் பற்றி
விசுவாசிகள் மத்தியில் ஒரு தவறான கண்ணோட்டம் காணப்படுகிறது என்று நான் கருதுகிறேன்.
*பயப்படுகிறவனை கோழை என்றும், கர்த்தரை நம்பாதவன்* என்றும் கர்த்தரோடு இல்லாதவன் என்றும் பட்டம் கட்டி விடுவார்கள்.*
விசுவாசி என்றாலே பயப்படாமல் இருப்பான், தைரியமாக இருப்பான், அஞ்சாமல் இருப்பான் என்று விசுவாசிகள் மத்தியில் பேசப்படுகிறது.
நடைமுறையில் பார்க்கும் பொழுது பயம் எல்லோருக்கும் வரும்.
ஏன் இயேசு கிறிஸ்துவுக்கு பின்பு மிகப்பெரிய அப்போஸ்தலனாக கருதப்படுகிற பவுலும் பயந்ததாக பார்க்கலாம் .
அவர் கூறிய வார்த்தைகளை பாருங்கள்.
"நாங்கள் மக்கெதோனியாவை வந்துசேர்ந்த போதும், எங்கள் உடலுக்கு எவ்வித ஆறுதலும் இல்லாதிருந்தது. எல்லாப் பக்கங்களிலும் கஷ்டங்களே எங்களைச் சூழ்ந்திருந்தன; வெளியே முரண்பாடுகளும், உள்ளே *பயங்களும்* ஆட்கொண்டிருந்தன".
2 கொரிந்தியர் 7:5.
கிதியோனும் அதுபோல்தான்.
அவன் கர்த்தருடைய அழைப்பை நடுக்கத்துடன் ஏற்றுக் கொண்டான்.
காரணம் அவன் மேற்கொள்ள போகும் மீதியானியர்கள் பெருந்திரளானவர்கள்.
போர்க்களப்பயிற்சி பெற்றவர்கள். அவர்களுடைய படையில் திரளான ஒட்டகங்கள் காணப்பட்டது.
கிதியோனோ போர் வீரன் அல்ல .ஒரு விவசாயி. எனவே இந்த விவசாயி அப்படிப்பட்ட மீதியானியர்களோடு போராடுவதற்கு கடவுள் தன்னை அழைத்த போது அதை ஏற்றுக்கொள்ள தயங்கியதில் எந்த தவறும் இல்லை. எனவேதான் ஆண்டவர் அவனுக்கு பல அடையாளங்களை காண்பித்து அவனை பலப்படுத்தினார்
எனவே பயம் எல்லோருக்கும் வரும். ஆனால் அந்த பயத்தை நாம் எப்படி சந்திக்கிறோம் என்பதுதான் முக்கியம். இரண்டு வகையான பயங்கள் உண்டு.
ஒன்று நம்மையும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையையும் முடக்கிவிடும்.
இன்னொன்று நாம் அதை மேற்கொண்டுஅந்த பயத்தை வெற்றி கொள்ளை செய்யும்.
There is a fear
that paralyzes and a fear that energizes.
பயம் கண்ணீர் எல்லாம் மனித இயல்புகள். எல்லோருடைய வாழ்க்கையிலும் இவைகள் வரத்தான் செய்யும்.
கண்ணீர் சிந்தாத மனிதர்களையும் பயப்படாத மனிதர்களையும் இந்த உலகில் காண்பது மிக அரிது.
நமக்கு பயம் வரும்போது அது எப்படி மேற்கொள்கிறோம்? எப்படி சமாளிக்கிறோம் என்பதில்தான் நாம் விசுவாசியாக இருக்கிறோமா அவிசுவாசியாக இருக்கிறோமா என்பது தெரியும்.
*பயங்கள் வரும்போது அதை கர்த்தருடைய சமூகத்தில் எடுத்து சென்று கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்து வசனத்தினால் நம்மை தேற்றிக்கொண்டு ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறி செல்கிறவனே உண்மையான விசுவாசி.*
பயங்கள் நம்மை நெருக்கும் பொழுது அதற்கு அடிமையாகி வசனத்தை மறந்து ஆண்டவரே மறந்து ஆண்டவரை விட்டு வழி விலகி போகிறவன்தான்
பயமுள்ள விசுவாசி.
எனவே பயங்கள் அச்சங்கள் வரும்போது அதைக் கண்டு நாம் கவலைப்படாமல் தேவன் ஆளுகை செய்கிறவர், எல்லாம் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது ,அவருடைய அனுமதி இல்லாமல் எந்த காரியமும் நம் வாழ்க்கையில் நடைபெறாது என்று நம்பிக்கையோடு பிரச்சனைகளை சமாளிக்க தேவன் நமக்கு கிருபை தருவாராக
Safety is not found in the absence of danger, but in the presence of God.எசேக்கியேல் சண்முகவேல்