Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

ஏன் இந்த நியாயாதிபதிகள் புத்தகம்?

*ஏன் இந்த நியாயாதிபதிகள் புத்தகம்?*
.
கடவுள் ஒவ்வொரு புத்தகத்தையும் வேத புத்தகமாக இணைத்து வைத்திருப்பதற்கு ஒரு காரணம் உண்டு.
அந்தக் காரணத்தை நாம் ஆழ்ந்து கவனித்தால்தான் அந்த புத்தகத்தை படிப்பதற்கான பயனை அடைய முடியும்.

இல்லை என்றால் ஒரு கதையைப் போல, ஒரு சரித்திர நிகழ்வை போல படித்து அதை நாம் கடந்து போய் விடுவோம்.


*எந்தவித நோக்கமும் இல்லாமல் ஒரு புத்தகத்தை தேவன் இணைத்திருக்க* *மாட்டார்* .

நியாயாதிபதகள்‌ புத்தகத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் ஆண்டவரை விட்டு வழி விலகிப் போவதும், அதன் காரணமாக அவர்களை கடவுள் புறயின அரசர்களிடம்
ஒப்புக் கொடுப்பதும், பின்பு இஸ்ரவேல் ஜனங்கள் மன்னிப்பு கோர்வதும் அதன் நிமித்தம் அவர்கள் விடுதலை பெறுவதுமான இந்த நிகழ்ச்சிகள் ஒரு சுழற்சி போல வரும்.

நியாயாதிபதிகள் காலம் என்பது *ஏறக்குறைய 335 ஆண்டுகள்* .
அந்நாட்களில் "இஸ்ரயேலில் அரசன் இருக்கவில்லை. ஒவ்வொருவனும் தன் பார்வைக்குச் சரியானதையே செய்து வந்தான்"
இந்த காலகட்டத்தில் தான் கடவுள் 12 நியாயாதிபதிகளை எழுப்பினார்.

இந்த புத்தகம் மூலமாக தேவன் நமக்கு உணர்த்தும் பாடங்கள் சில

1. *எந்த வகையான இருண்ட கால கட்டத்திலும் தேவனால்* *முன் குறிக்கப்பட்டவர்கள் இருக்கத்தான்* *செய்வார்கள்* . அப்படி முன்குறிக்கப்பட்டவர்கள் தான் இந்த 12 நியாதிபதிகள்.
இன்றைக்கும் சபைகள், தலைவர்கள் இருக்கின்ற அலங்கோலங்களை பார்க்கும் பொழுது நாம் அதைரியப்படவேண்டியது இல்லை. இந்த காலத்திலும் தேவனால் முன் குறிக்க பட்ட பிள்ளைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். தேவன் அவர்களைக் கொண்டு கிரியை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்.

2. எப்படிப்பட்ட சாதகமற்ற சூழ்நிலை காணப்பட்டாலும் கடவுள் எல்லாவற்றையும் தம் கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்திருக்கிறார். *God is always in control.*

3. *கடவுள் எப்பொழுதும் தம் ஜனங்களை கை விடுவதில்லை. எத்தனை தடவை நாம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டாலும் அத்தனை தடவையும் மன்னிப்பதற்கு அவர் இரக்கம் உள்ள* *தகப்பனாக இருக்கிறார்.*
4. *கடவுளுடைய பிள்ளைகள் கர்த்தரை விட்டு வழி விலகிபோகும்போது* *அந்த தேசம் எதிரிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்* .
எனவே தேசம் எதிரிகளின் கையில் சிக்கித் தவிக்கும் பொழுது எதிரிகளை குற்றம் சுமத்துவதில் எந்த நியாயமும் இல்லை.

5. *கடவுள் பயன்படுத்திய மனிதர்கள் திறமைசாலிகளாகவோ* *தலைமைப் பண்பு பெற்றவர்களாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.எகூத் இடக்கைப் பழக்கம் உள்ளவன். கிதியோன், சம்கார் போன்றவர்கள்* *விவசாயிகள். இவர்களை* தேவன் பயன்படுத்தியிருக்கிறார்.
6 *கடவுள் எல்லா காலத்திலும் கிரியை செய்து கொண்டு தான் இருக்கிறார்* . நம்முடைய பார்வைக்கு இருண்ட காலமாக இருக்கலாம்.
காலங்கள் அவரை தடை செய்ய முடியாது.
7 *இறுதியாக அவருடைய கிரிகைகள் தொடர்ந்து கொண்டே* *இருக்கும்* . அவருடைய கிரியைகள் இன்னும் முடிந்துவிடவில்லை.
இந்த புத்தகத்தை நாம் ஒரு கதையாக வரலாற்று நிகழ்வாக படிக்காமல் அந்த வரலாறுகள் மூலம் தேவன் நமக்கு கற்பிக்கும் பாடத்தை புரிந்து கொண்டால் நம்முடைய மனக்கண்கள் பிரகாசம் அடையும்.
Ezekiel Shanmugavel