யாரிடம் விசுவாசிகள் உதவி கோரக்கூடாது?
*யாரிடம் விசுவாசிகள் உதவி கோரக்கூடாது?*
இந்த உலக வாழ்க்கையில் சில வேளைகளில் சில மனிதர்களிடம் நாம் உதவி கேட்கக் கூடிய சூழ்நிலைகள் வரும். உதவிகள் கேட்பதை தவறு என்று சொல்ல முடியாது.
அவர்கள் நமக்கு உதவி செய்யும்போது அதை மனித தயவாக எடுத்துக் கொள்ளலாம்.
*ஆனாலும் யாரிடம் உதவி கேட்க வேண்டும் என்கிற ஒரு புரிதல் நமக்கு* *மிகவும்* *அவசியம்.யாரிடம்* *விசுவாசிகள் உதவிகள்*
*கேட்கக் கூடாது என்கிற உறுதியும் நமக்கு தேவை.*
ஆபிரகாமும் ,
எலிமெலேக்கு அவன் மனைவி நகோமியும்
இந்த தவறை செய்தார்கள். தேவன் வாக்குறுதி கொடுத்த கானான் தேசத்தில் பஞ்சம் வந்தபோது அந்த இடத்தில் கடவுளை சார்ந்து நின்று அந்தப் போராட்டத்தில் வெற்றி கொள்ள முடியாமல் எகிப்து தேசத்திற்கு ஆபிரகாம் பசியை போக்க சென்றார்.
அங்கே அவர் அடைந்த அவமானங்கள் அநேகம்.
அதேபோல் நகோமியும் அவள் கணவனும் அப்பத்தின் வீடாகிய பெத்தலகேமில் வறுமை ஏற்பட்ட பொழுது கர்த்தரை சார்ந்து நிற்காமல் மோவாபியதேசத்திற்கு சென்றார்கள் ..
வேதத்தில் யார் இந்த மோவாபியர் என்று பார்க்க வேண்டும்
“ *மோவாப் என் கழுவும் பாத்திரம்* "
சங்கீதம் 60:8
மோவாபியரின்
ஆணவம் பெரிதே!
அகந்தையும், பெருமையும், இறுமாப்பும் உடையவர்கள்;
அவர்களுடைய தற்புகழ்ச்சிகள் எல்லாம் வெறுமையானவையே.
ஏசாயா 16:6
அம்மோனியராவது மோவாபியராவது பத்தாம் தலைமுறைவரைக்கும் உள்ள அவர்களுடைய சந்ததிகளாவது யெகோவாவின், சபைக்குள் வரக்கூடாது.
உபாகமம் 23:3
*இப்படி கடவுள் வெறுக்கிற கடவுளால் தண்டிக்கப்பட்ட மக்களிடம் நகோமியும் அவளது குடும்பமும் தஞ்சமடைந்து..*
*அதனால் அந்த குடும்பம் அடைந்த இழப்புகள்தான் அதிகம்.*
தன் கணவனையும் இரண்டு பிள்ளைகளையும் அந்த தேசத்தில் பறி கொடுத்தாள்.
எந்த இனத்தோடு பெண் எடுக்கக் கூடாது என்று கடவுள் கட்டளையிட்டாரோ அந்த இன பெண்களை தங்களுடைய இரு மகன்களுக்கும் திருமணம் செய்து கொடுத்தார்கள். உபா7:1-11
விளைவு அந்தப் பெண்களும் விதவையானார்கள்.
எண்ணாகமம் 25 வது அதிகாரத்தில் மோவாபிய பெண்களோடு இஸ்ரவேல் மக்களின் ஆண்கள் இணைந்ததின் விளைவாக 24000 நபர்கள் அழிந்து போனதை இங்கே நாம் நினைவு கூற வேண்டும்.
பஞ்சத்திலிருந்துஉயிர் தப்பி பிழைக்க மோவாபியர்களின் தேசத்திற்கு சென்றார்களோ அங்கே நகோமி தன் கணவனையும் இரண்டு பிள்ளைகளையும் பறி கொடுத்தாள் நகோமி.
எவ்வளவு பெரிய இழப்பு
*சோதனையான காலகட்டத்தில் கர்த்தர் வாக்குறுதி கொடுத்து கொண்டு வந்த தேசத்தில் நிலத்து* *நிற்காமல் கடவுளால் தண்டிக்கப்பட்ட* *தேசத்தில் தஞ்சமடைந்தார்கள்* .
விசுவாசிகளாகிய நாம் கற்றுக் கொள்ளும் பாடம்.
இந்த ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவனை அறிந்த பிள்ளைகளுக்கு கடவுளைப் பற்றியஒரு வைராக்கியம் வேண்டும்.
*நாம் ஒருபோதும் நமது மார்க்கத்தை மதிக்காத, எதிர்க்கிற, அழிக்க* *நினைக்கிற எந்த ஒரு தனி மனிதரிடமோ, இயக்கத்திடமுமோ* உதவி *கூறக்கூடாது. அதில் கடவுள் பிரியப்படுவதில்லை.*
பசியோ, பட்டினியோ தனிமையோ, பிரிவுகளோ, எந்த சூழ்நிலைகள் இருந்தாலும் நாம் ஒருபோதும் நமது ஆண்டவரை புறக்கணிக்கிற வெறுக்கிற நபர்களிடமோ அல்லது தவறான உபதேசத்தை போதிக்கிற போலி விசுவாசிகளிடமோ ஊழியக்காரர்களிடமும் ஒருபோதும் தஞ்சமடைய கூடாது.
அதைவிட ஆண்டவருக்கு அவமானத்தை தேடி கொடுக்கக்கூடிய காரியம் ஒன்றும் இல்லை.
*சோதனைகள் நடுவில் தேவன் வைத்த இடத்தில் தரித்து நிற்பதே வெற்றியின் இரகசியம்.*
*நமக்கு கர்த்தரை பற்றி உள்ள ஒரு வைராக்கியம் கட்டாயம்* தேவை. இப்படிப்பட்ட கிருபையை நமக்கு தேவன் தருவாராக
எசேக்கியல் சண்முகவேல்
. When trouble comes to our lives, we
can do one of three things: endure it, escape it, or enlist
it. If we only endure our trials, then trials become our
master, and we have a tendency to become hard and
bitter. If *we try to escape our trials, then we will prob ably miss the purposes God wants to achieve in our*
lives. But if we learn to enlist our trials, they will
become our servants instead of our masters and work
for us; and God will work all things together for our
good and His glory (Rom. 8:28.
WIERSBE