யாக்கோபின் சஞ்சல நாட்கள்.
"நான்.
பரதேசியாய் சஞ்சரித்த நாட்கள் நூற்றுமுப்பது வருஷம், என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது,"
ஆதியாகமம் 47:9
இந்த வார்த்தைகள். உலக வரலாற்றில் தவிர்க்க முடியாத இஸ்ரவேல் கோத்திரத்தின் பிதாவாகிய யாக்கோபின் வார்த்தைகள். உலகத்தின் இரட்சகர் இயேசு கிறிஸ்து யூத குலத்தில் இருந்து தான் தோன்றினார். இத்தனை பெருமைக்குரிய யாக்கோபு தன் தாய் தகப்பனை விட்டு ஆராமை நோக்கி புறப்பட்டபோது அவனுக்கு வயது 70. இரண்டு மனைவிகளுக்காக லாபன் கையில்வாழ்ந்த காலம் 20வருடங்கள். கானான் தேசத்தில் வாழ்ந்த காலம்37 வருடங்கள். தன் வாழ்வில் கடைசி 17 வருடங்களை எகிப்து தேசத்தில் கழித்தான். இதுதான் யாக்கோபின் வாழ்க்கை பயணம். பலருடைய ஆவிக்குரிய பயணம் என்பது ஒரே இடத்தில் தொடங்கி ஒரே இடத்தில் முடிவதாக இருக்காது. அது சஞ்சலங்கள் நிறைந்த வாழ்க்கையாக இருந்தாலும், பல்வேறு நிலைகளைக் கொண்டதாகும். பாதைகள் எப்படியாக இருந்தாலும் பயணங்கள் துயரங்களால் நிறைந்திருந்தாலும் கர்த்தருடைய சித்தத்தை நாம் எப்படி நிறைவேற்றுகிறோம் என்பதில் தான் நம் நம்முடைய வாழ்க்கையில் வெற்றி அடங்கி இருக்கிறது. எசேக்கியல் சண்முகவேல்