Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

ஓர்பாள்,ரூத் ஒரு ஒப்பீடு.
*ஓர்பாள்,ரூத் ஒரு ஒப்பீடு.*

*இருவருமே மோவாப் நாட்டை சேர்ந்த பெண்மணிகள்.*

*இருவருமே யூத தேசத்து ஆண்களை திருமணம் செய்து கொண்டவர்கள்* .

*இருவருமே கணவனை இழந்த ‌கைம்பெண்கள்.*

*இருவருமே நகோமியோடு யூத தேசத்திற்கு திரும்பிப்போக முதல் படியை‌‌ எடுத்து வைத்தவர்கள்.*
*ஆனால் ஓர்பாள்‌, நகோமி கொடுத்த அழுத்தத்தை மேற்கொள்ள‌முடியாமல்* *பின்வாங்கி, தன் தேவர்களிடமே திரும்பி சென்று விட்டாள்* . (ரூத் 1:14,15)

ஆனால் ரூத் பிடிவாதமாக யூதா தேசத்திற்கு போக முடிவு செய்தாள்.

நகோமி கொடுத்த அழுத்தத்தை‌ மேற்கொண்டு வரக்கூடிய விளைவுகளை பொருட்படுத்தாமல் இஸ்ரவேலின் தேவனை நம்பி *தன்னுடைய தீர்மானத்தில் உறுதியாக இருந்தாள்.*

*நகோமி மூன்று தடவை வற்புறுத்தியும் அவளுடைய வற்புறுத்தலுக்கு இணங்கவில்லை.*


*வேதத்தில் எந்த புற இனத்து பெண்மணியும் சொல்லாத ஒரு ஆழமான வார்த்தைகளை சொன்னாள்.*

, “நான் உங்களைவிட்டுப் போகவோ, திரும்பவும் என் வீட்டிற்குப் போகவோ என்னை வற்புறுத்த வேண்டாம்; ஏனெனில் நீங்கள் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீங்கள் தங்கும் இடத்தில் நானும் தங்குவேன்; உங்கள் மக்களே எனது மக்களாயிருப்பார்கள். உங்கள் இறைவனே என் இறைவனாயிருப்பார்.”(ரூத் 1:16.)

நகோமி கொடுத்த அழுத்தத்திற்கு *இல்லை என்கிற பதிலை அளித்தாள்.*

She said no to the pressure of Naomi.

ரூத் ,யூத தேசத்திற்கு
இந்த நகோமியுடன் செல்வதற்கு எந்த சாதகமான சூழ்நிலையும் காணப்படவில்லை.

1. மோவாபிய பெண்ணான ரூத், யூதனை திருமணம் செய்து கொண்டதால் யூத தேசத்தில் ஏற்படக்கூடிய சாதகமற்ற சூழ்நிலையைப்பற்றி கவலைப்படவில்லை.
2. யூத தேசத்திற்கு செல்வதன் மூலம் தனக்கு மறுபடியும் திருமண வாழ்க்கை கிடைத்து அதன் மூலம் சந்ததியை பெறக்கூடிய வாய்ப்பு கிடையாது.
3. ரூத் விக்கிரகத்தை வழிபட்ட பெண்மணி.
4. தன்னுடைய கணவனும் மாமனாரும் இல்லாத சூழ்நிலையில் வாழ்க்கையை நடத்துவதற்கு ஏதும் இல்லாத சூழ்நிலை காணப்பட்டது.
5. மாமியார் நகோமியும், தான் யூத தேசத்திற்கு வருவதில் ஆதரவாக இல்லை.

*இத்தகைய சாதகமற்ற பல சூழ்நிலைகள் இருந்தாலும் அவள் நம்பினது இஸ்ரவேலின் தேவனாகிய யெ கோவாவை மட்டுமே* .

நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்:

இந்த சூழ்நிலையை புறயினத்தை சேர்ந்த ஒருவன் முதன்முதலாக ஆண்டவரை தேடுகின்ற சூழ்நிலைக்கு ஒப்பிடுகிறேன்.

புற இனத்தை சேர்ந்த ஒருவன் முதன்முதலாக ஆண்டவரை பின்பற்ற முற்படும்போது அவன் சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள்.
1. குடும்பத்தில் காணப்படுகின்ற எதிர்ப்பு.
2. சமுதாய புறக்கணிப்பு
3. தான் நம்பிப் போகும் கிறிஸ்தவ மார்க்கத்தில் அவனுக்கு கிடைக்கும் ஆதரவின்மை.
4. *தனக்கு வழி காட்ட வேண்டிய தலைவர்களே இடறலாக மாறக்கூடிய* *சூழ்நிலைகள்* .

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

*ரூத்தைப்போல சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும்* *இயேசுவை மெய்யான தேவன் என்று அறிந்து கொண்டவன் ஒரு நாளும் இந்த இடர்பாடுகளை பொருட்படுத்த மாட்டான்.*

தனிமை, வறுமை, புறக்கணிப்பு ஆதரவற்ற நிலைமை எதுவாக இருந்தாலும் கலப்பையின் மீது கை வைத்துவிட்டு பின்னிட்டு பார்க்க மாட்டான்.

யெகோவாவை மற்றவர்கள் சொன்னதன் மூலமாகத்தான் உறுதியாக பற்றிக் கொண்டவள் ரூத்.

*தேவன் அவளை வெகுவாக கனம் பண்ணி அவளுடைய* *சந்ததியில் நம்முடைய குமாரனை பிறக்கச் செய்தார்.*
சந்ததி உருவாகு வதற்கே வாய்ப்பு இல்லாத அவளுக்கு மிகப்பெரிய கனத்தை அளித்தார்.

அதுபோல் *ஆண்டவரை பின்பற்ற முற்படுகின்ற யாராக இருந்தாலும் புறயினத்தவராக இருந்தாலும் மற்ற எவராக இருந்தாலும் அவர்கள் உறுதியாக தேவனை பிடித்துக் கொள்ளும் பொழுது நிச்சயமாக கடவுள் அவர்களை கைவிட மாட்டார்.*

பத்து தலைமுறையானாலும் யெகோவாவின் சபைக்குள் வரக்கூடாது என்று கட்டளையிட்ட யெகோவா தேவனே தன் தீர்மானத்தை மாற்றி ரூத் என்கிற மோவாபிய பெண்ணின் சந்ததியில் தனது குமாரனை பிறக்கச் செய்தார்‌. ரூத்தின் உறுதியான விசுவாசத்திற்கு இதைவிட வேறு சிறப்பான வெகுமதி என்ன இருக்க முடியும்.
*அதுபோல தேவனுக்காக வைராக்கியமாக இருக்கிற எவரையும்* *தேவன் இந்த உலகிலும் வருகின்ற உலகிலும்* *வெறுமையாக* *நடத்துவதில்லை..*

Law excludes us from God's family, but grace includes us if we put our faith in Christ..W.W.Wiersbe

Ezekiel Shanmugavel