ரூத்தின் புத்தகம்
*ரூத்தின் புத்தகம்*
*வேத பாடம் மூன்று.*
*நமது வாழ்க்கையில் நடப்பதெல்லாம் தற்செயலாக நடப்பது அல்ல.*
நாம் இதுவரை கடந்து வந்த பாதைகளை பார்க்கும்பொழுது அவைகள் *எல்லாம் தற்செயலாகவோ அல்லது ஒரு விபத்தாகவோ நடப்பதில்லை.*
*They are not mere accidents . They are God's appointments.*
நமது வாழ்க்கையில் நடைபெறும் எந்த சந்திப்பும், எந்த அறிமுகமும், எந்த நட்பும், எந்த இழப்பும், எந்த இணைப்பும், *எந்த பிரிவும் ஏதோ தற்செயலாக நடந்தது* *இல்லை* .
அவைகள் *எல்லாம் தேவனுடைய திட்டத்தில் முன் குறிக்கப்பட்ட காரியங்கள்.*
இந்த நிகழ்வுகளை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளும்பொழுது, நாம் இறைவனின் திட்டத்தை நிறைவேற்றுகிறோம் அல்லது தேவனுடைய சித்தத்தில் இருக்கிறோம் என்று அர்த்தம்.
நமக்கு பின் நாட்களில் மிகப்பெரிய உதவியாக இருப்பவர்களை ஆரம்ப நாட்களில் அவர்களை தற்செயலாக சந்தித்து இருப்போம்.
ஆனால் அந்த நட்பு நமக்கு பிறகு மிகப்பெரிய ஆசீர்வாதமாக மாறிவிடும்.
*சிறிய அறிமுகங்கள் பின் நாட்களில் மிகப்பெரிய மாற்றங்களை* *நமது வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும்.*
ஒரு மிகச் சிறிய *சந்திப்பு நம்மை இரட்சிப்புக்கு நேராக நடத்திவிடும்* .
ஒருவர் கொடுக்கும் ஒரு சிறிய புத்தகம் நம்முடைய வாழ்க்கையை மாற்றிவிடும்.
ஒருவர் கொடுக்கும் சிறிய அறிவுரை மிகப்பெரிய ஆவிக்குரிய மாற்றத்தை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும்.
இப்படி சொல்லிக் கொண்டே .
போகலாம்.
*இப்படித்தான்* *ரூத்தின் வாழ்க்கை அமைந்தது.*
ரூத் மக்லோனை திருமணம் செய்து கொண்டது, அப்பொழுது ரூத்துக்கு தற்செயலாக நடந்திருக்கலாம்.
(ரூத் 4:10)
ஆனால் அந்தத் திருமணம் தேவனால் முன் குறிக்கப்பட்ட திருமணம் என்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இஸ்ரவேல் மக்கள் கடவுளுடைய பார்வையில் இந்த திருமணம் தேவனுடைய கட்டளைக்கு மாறாக உள்ளது என்று ஒரு வேளை எண்ணி இருப்பார்கள்.
ஆனால் இந்தத் திருமணம் கடவுள் தீர்மானித்த ஒன்று.
*sometimes God will overrule His own commandments for His divine purpose*
அவளுடைய கணவனுடைய மரணம், தன் மாமியாருடன் இஸ்ரவேல் தேசத்திற்கு திரும்பின காரியம்,போவாசின் வயல்வெளிக்கு சென்றது, அவனுடைய கண்களில் ரூத் தென்பட்டது, போவாஸ் அவளைப் பார்த்தது, பேசியது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவைகள் எல்லாம் தற்செயலாக நடந்ததாக நமக்கு தோன்றலாம். ஆனால் இவைகள் அனைத்தும் தேவனுடைய பார்வையில் முன் குறிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் வம்சாவளியில் ரூத்தை இணைப்பது தேவனுடைய சித்தம். அந்தத் திட்டத்தின் அடிப்படையில் எல்லாவற்றையும் தேவன் முன் குறித்து அதை நிறைவேற்றுகிறார்.
"இறைவனின் நோக்கத்தின்படியே அழைக்கப்பட்டு, அவரில் அன்பாயிருக்கிறவர்களுக்கு அவர் எல்லாக் காரியங்களிலும் நன்மையுண்டாகும்படியே செயலாற்றுகிறார்" என்கிற வேத வசனம் நம்மை உற்சாகப்படுத்துகிறது.
(ரோமர் 8:28.)
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை என்பது பலவித புதிய திருப்பங்களால் நிறைந்திருக்கிறது.
புதிய ஆரம்பங்களால் தேவனுடைய சித்தம் நிறைவேற்றப்படுகிறது. தேவன் தாமே நமக்கு இப்படிப்பட்ட புரிதலைத் தருவாராக.
அதே வேளையில் சில நேரங்களில் சாத்தானும் சில தவறான உறவுகளையும், நிகழ்வுகளையும் ஏற்படுத்தி நம்மை திசை மாறச் செய்வான் அதற்கும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
எசேக்கியேல் சண்முகவேல்