இயேசு கிறிஸ்துவும் ஏழைகளும்
*இயேசு கிறிஸ்துவும் ஏழைகளும்* .
ஒரு ஸ்திரீ கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால், ஏழுநாள் தீட்டாயிருப்பாள்.
எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்
பின்பு அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாக செலுத்த வேண்டும் செலுத்த வேண்டும்.
ஒருவேளை
ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர *அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது* , *இரண்டு புறாக்குஞ்சுகளையாவது* , *ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் செலுத்த வேண்டும்*
லேவியராகமம் 12:4-8
ஆண்டவர் ஏழைகளை கருத்தில் கொண்டு இந்த விதிவிலக்கை அவர்களுக்கு கட்டளையாக கொடுத்திருக்கிறார்.
உலகத்தை படைத்த தேவ குமாரன் மரியாளின் வயிற்றில் பிறந்த போது மரியாளும் இந்த ஏழைகளுக்கு அனுமதிக்கப்பட்ட இரண்டு புறா குஞ்சுகளைத்தான் பலியாக மரியாள் செலுத்தினாள்.லூக்2:24
*அந்த அளவுக்கு இயேசு கிறிஸ்து மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார்* நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சத்தியம்.
.
*அவர் ஏழையாகவே பிறந்தார். ஏழையாகவே* வாழ்ந்தார். ஏழையாகவே மரித்தார். ஊழியத்தின் பணத்தைக் கூட தன் கையிலேகூட தொடாமல் தன்னால் காட்டிக் கொடுக்கப்பட்ட யூதாஸ் கையிலேதான் கொடுத்தார்.
அவர் ஒருபோது செல்வந்தர்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
*செல்வந்தர்களை தன் சீசர்களாக கூட சேர்த்துக் கொள்ளவில்லை.*
*செல்வந்தர்களை புகழ்ந்ததில்லை.*
*பணக்காரர்களுக்கு* *உயர்ந்த பொறுப்புக்களை வழங்கியதில்லை.* *செல்வந்தர்களோடு தன் வாழ்நாள் முழுவதும் தன்னை* *அடையாளப்படுத்திக்* கொள்ளவில்லை.
மாறாக அவர் சொன்ன வார்த்தைகளை கவனியுங்கள்.
*ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும்* , *ஒட்டகமானது ஊசியின் காதிலே* *நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.*
லூக்கா 18:25
செல்வங்கள் எப்பொழுதும் சாத்தானோடு அடையாளப்படுத்திக் கொள்ளப்படும் காரியம். அதனால்தான் சாத்தான் செல்வங்கள் எல்லாம் தனக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டதாக சொல்லுகிறான்.லூக் 4:6
இயேசு கிறிஸ்து அவருடைய பிள்ளைகளுக்கு வைத்துள்ள மிக சிறந்த மாதிரி இதுதான்.
நாம் செல்வந்தராக பிறப்பதில் தவறில்லை.
செல்வத்தை சம்பாதிப்பதிலும் தவறில்லை.
ஆனால் நம்முடைய சிந்தையில் எளிமை
காணப்படவேண்டும்.
*ஏழைகளைப் பற்றிய பார்வை மாற வேண்டும் .*
ஏழைகள் என்றாலே கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படாதவர்கள் என்கிற சிந்தனை அகற்றப்பட வேண்டும் .
வீடு இல்லாதவர்கள் ,இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இல்லாதவர்களை பற்றிய நமது பார்வை மாற வேண்டும்.
*நம்முடைய அணுகு முறையில், செயல்பாட்டில், பொறுப்புக்களை* *வழங்குவதில் உறவு முறைகளில், உதவிகள்* *செய்வதில், நாம் ஏழைகளை எப்படி நடத்துகிறோம் என்பது தான் முக்கியம். *பரலோகத்தில் ஏழைகள் *அதிகமாக காணப்பட்டால் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.**
Ezekiel Shanmugavel