Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

இறைவனின் காலப்பகுப்பு ஆட்சி முறை ஏன் அவசியம்?

*இறைவனின் காலப்பகுப்பு ஆட்சி முறை ஏன் அவசியம்?*
*Why Dispensationalism should be preached in the church?*

லேவியராகமம் புத்தகம் 11 முதல் 15 வரை உள்ள அதிகாரத்தில் எவைகள் தீட்டுள்ள காரியங்கள், எவைகள் அசுத்தமானவைகள்,
எவைகளை உட்கொள்ளலாம் எவைகளை உட்கொள்ளக்கூடாது என்பது பற்றிய பல காரியங்களை இந்தப் பகுதியில் பார்க்கலாம்.

இந்தப் பகுதியில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படையான மூன்று காரியங்கள்.
1. *இந்த இடத்தில் ஆண்டவர் சொன்ன கட்டளைகள் யூதர்களுக்கு* *மட்டுமே பொருந்தும்.*

2. இவைகளை நாம் கடைபிடிப்பதன் மூலம் நம்முடைய பரிசுத்த வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பது அர்த்தமல்ல.

இவைகளை கடைபிடிப்பதினால் நாம் பரிசுத்த
முள்ளவர்களாக தேவனுக்கு முன்பாக காணப்பட முடியாது
3. ஆண்டவரின் சிலுவை மரணத்திற்ப் பிறகு இந்தக் கட்டுப்பாடுகள் காலாவதியாகிவிட்டது.
இவைகள் கிருபையின் காலத்திற்கு எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.

1கொரி8:8 ன்படி ‌ உணவு முறைகள் நம்மை ஒருபோதும் தேவனுக்கு முன்பாக உத்தமர்களாக மாற்ற முடியாது.

தீட்டு என்பதைப் பற்றியுள்ள பழைய ஏற்பாட்டு சத்தியங்கள் புதிய ஏற்பாட்டுக்கு ஒருபோதும் ஒத்து வராது. மாற்கு 7:15

இதில் நாம் கற்றுக் கொள்ளக் கூடிய காரியங்கள்.

யூதர்களுக்கு சொல்லப்பட்ட அனைத்து காரியங்களும் புதிய ஏற்பாட்டு சபைக்கு பொருந்தும் என்று சொல்வது அபத்தமான காரியம்.

இவைகள் மாத்திரமல்ல, தசமபாகம், ஆசாரியத்துவம்
போன்ற உபதேசங்கள் காலாவதியான உபதேசங்கள். ஆசாரியத்துவம் மாற்றப்பட்டுவிட்டது.
புதிய ஆசாரியத்துவம் உருவாக்கப்பட்டு விட்டது.

*ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தேவன் தம்முடைய நிர்வாகத்தை, ஜனங்களை நடத்திய* *விதத்தை நாம் சரியாகப் புரிந்து கொண்டால்*
*தான் எவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும், எவைகளை* *எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிற தெளிவு நமக்கு கிடைக்கும்.*
" *உலகத்தை நிரப்புங்கள்" என்று சொன்ன ஆண்டவர் அதே காலக்கட்டத்தில்* *குடும்பத்திற்க்குள் திருமணம் செய்து கொள்வதையும் அனுமதித்தார்* .
*அதன்படி யார் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம்*

இந்த அனுமதியை குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு மட்டுமே தேவன் கொடுத்தார்.

ஆனால் நோவாவினுடைய பெருவெள்ளத்திற்கு பிறகு இந்த அனுமதி கிடையாது.
இதே போல்தான் நாம் வேதத்தை பகுத்தாய்வு செய்து *எந்த ஆசீர்வாதம் நமக்கு பொருந்தும், எவைகள் பொருந்தாது என்பதை* *உணர்ந்தால் நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய சிக்கல்கள் ஒருபோதும் ஏற்படாது* .

*இந்தக் காரியங்களை புரிந்து கொள்ள Dispensational theologyஐ பற்றிய ஒரு அடிப்படை அறிவு நமக்கு தேவை.*

யுகங்களின் அடிப்படையில் வேதத்தை பகுப்பாய்வு செய்தால் மட்டுமே வேதத்தை நாம் நிதானித்து போதிக்கிற போதகராகவோ மேய்ப்பராகவோ விசுவாசியாகவோ கூட இருக்கலாம்.
*Dispensationalists சொல்லுகிற அனைத்தையும் நாம்* *ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை* . *ஆனால் அவற்றின் அடிப்படை காரியங்களை நாம் உணர்ந்து கொள்வது அவசியம்.*

*Dispensational theologyஐ இந்த சபைகளில் அதிகமாக போதிக்கப்படுவதில்லை. சபை செழிப்பின் உபதேசத்திற்குள்* *சென்றதற்கு இதுவும் ஒரு காரணம் என்பதை* *நாம் மறக்கவோ மறுக்கவோ முடியாது.*
*நாம் வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப்* *போதிக்கிறவனாயும் நம்மை தேவனுக்கு முன்பாக உத்தமனாக* *நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிருக்க* *அழைக்கப்பட்டிருக்கிறோம்*
*என்பதை மட்டும் வேத*
*வசனத்தை போதிக்கிறவர்கள் ஒருபோதும் மறக்க கூடாது*
2 தீமோத்தேயு 2:14.
எசேக்கியல் சண்முகவேல்