Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

இயேசு கிறிஸ்துவின் மீட்பின் பயனை யாரெல்லாம் பெறுவார்கள் ?


இயேசு கிறிஸ்துவின் மீட்பின் பயனை யாரெல்லாம் பெறுவார்கள் ?

கீழ்க்கண்ட வசனங்களை கவனமாக வாசிக்கவும்.

“ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்தி செய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.” எபி 9:15

ஆகையால் அழைக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் இறைவனால் வாக்குப்பண்ணப்பட்ட நித்தியமான உரிமைச் சொத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் நடுவராக இருக்கிறார். ஏனெனில், முதலாவது உடன்படிக்கையின்கீழ், மக்கள் செய்த பாவங்களிலிருந்து, அவர்களை மீட்கும்படியாகவே அவர் மரித்தார்.
எபிரேயர் 9:15
இது இலங்கை மொழிபெயர்ப்பு.

For this reason Christ is the mediator of a new covenant, that those who are called may receive the promised eternal inheritance – now that he has died as a ransom to set them free from the sins committed under the first covenant.
Heb. 9:15,NIV.

இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால்
முதலாம் உடன்படிக்கையின் கீழ் பாவம் செய்தவர்களை மன்னிக்கும்படியாகவும் இயேசு கிறிஸ்து மரித்தார் என்பதுதான்.

WILLIAM BARCLAY என்கிற மிகப்பெரிய வேதப்பண்டிதர் இதைப் பற்றி எழுதும்பொழுது இந்த வார்த்தை எபிரேய நிருபத்தில் உள்ள மிக முக்கியமான பகுதி. அதுவும் மிகவும் கடினமான, விளங்கிக் கொள்ள முடியாத பகுதி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

உண்மையிலேயே இதனுடைய அர்த்தம் என்ன?
நாம் அனைவரும் எண்ணுகிற மாதிரி இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணம் பாடுகள் அவரை, விசுவாசிக்கிறவர்களுக்கு(புதிய உடன்படிக்கையின் கீழ்) மட்டும்தான் நித்திய சுதந்திரத்தை வழங்கும் என்று எண்ணுகிறோம்.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைக்கிற புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் மட்டுமே நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வார்கள் என்பது நாம் சாதாரணமாக நம்புகிற ஒரு காரியம்.

ஆனால் இது முழு உண்மை அல்ல.

இதைப்பற்றி WARREN WIERSBE என்கிற மிகப்பெரிய Bible commentator இவ்வாறு எழுதுகிறார்.
“There was no final and complete redemption under OT Covenant. Their transgression were covered by the blood of animals , but not cleansed until the sacrifice of Christ on the cross".
( பழைய உடன்படிக்கையின்படி யூதர்களுக்கு கிடைத்தது முழுமையான மீட்பு இல்லை.
அவர்களின் மீறுதல்கள் விலங்குகளின் இரத்தத்தால் மூடப்பட்டிருப்பதே அல்லாமல் , அவர்கள் பாவங்கள் சிலுவையில் கிறிஸ்து பலியிடப்படும் வரை கழுவப்படவில்லை.)

“The efficacy of Christ ‘s atonement was retrospective as well as prospective “R .W . PINK
அதாவது R.W.Pink கருத்துப்படி
இயேசு கிறிஸ்துவின் மீட்பின் பயன் முன்தேதியிட்டு அல்லது கிறிஸ்து அளிக்கும் பலனை எதிர்நோக்கி யூதர்களுக்கும் குறிப்பாக தெரிந்து கொள்ளப்பட்ட யூதர்களுக்கும் வழங்கப்படுகிறது

கீழ்க்காணும் வேத வாக்கியங்கள் மூலம் இதை புரிந்து கொள்ள
முடியும்.
(2 பேதுரு 1:19,20,
எபி 4:21,
1கொரி  10:3,4,
ரோம 3:25.)

எனவே
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால்தான் மீட்கப்படுவார்கள் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

it was just as efficacious in taking away the transgressions of the believers before it was actually shed, as it is of cleansing believers today, nineteen centuries after it was shed. R.W .PINK

மேலும் எபி 11:40 ல் இதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

"இறைவனோ நமக்காக அதிலும் மேன்மையான ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். இதனால் அவர்களும்(அதாவது யூதர்களும்), நம்முடன் ஒன்று சேர்ந்துதான் நிறைவு பெறமுடியும்."
எபிரேயர் 11:40.
(இலங்கை மொழிபெயர்ப்பு)

The efficacy of Christ‘s atonement was retrospective as well as prospective.. R .W . PINK –Heb 9:15.
எனவே இயேசு கிறிஸ்துவினால் மீட்பின் பயன் நமக்கு மட்டுமல்ல தெரிந்து கொள்ளப்பட்ட யூதர்களுக்கும் பொருந்தும் என்பதுதான்.