ரூத்தின் புத்தகம் வேத பாடம் 5.
*ரூத்தின் புத்தகம்*
வேத பாடம் 5.
*நகோமியின் இரண்டு பக்கங்கள்.*
நகோமியின் வாழ்க்கையை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.
*முதல் பகுதி.*
பஞ்சத்திற்கு பயந்து அந்நிய தேசத்திற்கு சென்ற நாள் முதல்
தன் மருமகள் ரூத் வயல்வெளிகளில் சிதறி கிடக்கும் கதிர்களை பொறுக்குவதற்காக போவாசின் வயலுக்கு தற்செயலாக சென்ற அந்த நிகழ்வு வரை ஒரு பகுதியாக பார்க்கலாம்.
*இரண்டாவது பகுதி.*
போவாசு ரூத்தை வயல்வெளியில் சந்தித்த நிகழ்விலிருந்து தொடங்குகிறது.
நகோமியினுடைய முதல் பகுதி கசப்பான அனுபவங்களும், ஏமாற்றங்களும், வறுமையும், இழப்புகளும், மரணங்களும் கொண்டது.
இரண்டாவது பகுதி யேகோவா தேவன் தன்னுடைய குடும்பத்தில் கிரியயை ஆரம்பித்ததை உணர்ந்த பகுதி.
நகோமியின் வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும் பொழுது பலர், அவளை அவிசுவாசமுள்ள பெண்ணாகவும் தன்னுடைய மருமகள் இருவரும் ஆண்டவரை அறிய தடையாக இருந்த பெண்ணாகவும், ஆண்டவர் மீது மிகவும் வருத்தத்துடன் இருந்த பெண்மணியாகவும் சித்தரிக்கிறார்கள் . இது தவறு .
எல்லா விசுவாசிகளைப் போல அவளும் பல வித கலக்கங்களுக்கும் புலம்பல்களுக்கும் ஆட்பட்ட பெண்மணியாக காணப்பட்டாள்.
தாங்கள் வாழ்கின்ற இடத்தில் வறுமை காணப்பட்டபடியால் புறதேசத்திற்கு சென்றது அவளது பிழை அல்ல.
தன்னுடைய கணவன் அழைத்துச் சென்றபடியினால் அவள் சென்றாள்.
தேவன் வெறுக்கிற ஒரு நாட்டிற்கு சென்றது அவளுடைய தவறல்ல.
தன்னுடைய கணவனையும் இரண்டு மகன்களையும் இழந்ததினால் தேவன் மீது வருத்தம் அடைந்ததில் எந்த தவறும் இல்லை.
பெரிய தீர்க்கதரிசியான எரேமியாவே தன்னுடைய ஊழியம் அங்கீகரிக்கப்படமால் அவமானப்பட்டதை உணர்ந்து "தான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாக" (எரோ 20:14) *என்று புலம்பிய காட்சியை இந்த இடத்தில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.*
*அப்படிப்பட்ட தீர்க்கதரிசியே தேவன் மேல் சலித்துக் கொள்ளும் போது* *சாதாரண பெண்மணி நகோமி கடவுள் மேல்* *வருத்தப்பட்டதில் எந்த தவறும் இல்லை என நான் கருதுகிறேன்.*
தன் குடும்பத்தின் மீது தேவனுடைய தயவுள்ள கரம் இல்லை என்று நினைத்து எனது இரண்டு மருமகள்களையும் தன்னோடு கூட தன் தேசத்திற்கு திரும்பி வருவதை விரும்பாமல் இருந்திருக்கலாம்.( 1:13)
She was a practical woman.
கடவுளின் கரம் தனக்கு சாதகமாக இல்லாததை உணர்ந்திருக்கும் பொழுது ஏன் தேவையில்லாமல் இரண்டு பெண்களை அழைத்து அவர்களையும் கஷ்டப்படுத்த வேண்டும் என்று நியாயமான உணர்வுடன் சொல்லி இருக்கக் கூடும்.
*எனவே தேவன் மீது வருத்தப்பட்டதிலும் இரண்டு மருமகள்களும்* *தன்னோடு வருவதை விரும்பாமல் இருந்ததிலும் எந்த* *தவறும் இல்லை என்று* நான் நினைக்கிறேன்.
ஆனால் ரூத் பிடிவாதமாக,
“நான் உங்களைவிட்டுப் போகவோ, திரும்பவும் என் வீட்டிற்குப் போகவோ என்னை வற்புறுத்த வேண்டாம்; ஏனெனில் நீங்கள் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீங்கள் தங்கும் இடத்தில் நானும் தங்குவேன்; உங்கள் மக்களே எனது மக்களாயிருப்பார்கள். உங்கள் இறைவனே என் இறைவனாயிருப்பார்.”
(ரூத் 1:16 ) என்று சொன்ன பிறகு அதற்கு மேல் அவளை வற்புறுத்த வில்லை. இது நகோமினுடைய முதல் பகுதி.
அடுத்த பகுதி ரூத் போவாசின் நிலத்திற்கு தற்செயலாக சென்றதையும் போவாஸ் அவள் சந்தித்ததையும் அறிந்த பிறகு தேவனுடைய கரம் தனது குடும்பத்தின் மீது சாதகமாய் இருப்பதை உணர்ந்து கொண்டாள். பின்பு அவளுடைய மனநிலை மாறியது. அவளுக்கு சரியான ஆலோசனைகள சொல்லி போவாஸ் ,ரூத் திருமணத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தாள்.
பின்பு போவாஸ் *ரூத்துக்கு பிறந்த ஓபேத்தை தன் மடியில் எடுத்து வளர்த்து ஒரு நல்ல* *பாட்டியாகவும் தாயாகவும்* *மாறினாள். 4:16*
நகோமியின் ஆரம்பம் வறுமையாலும், இழப்புகளாலும் மரணத்தாலும் சூழப்பட்டிருந்தாலும் முடிவு மகிழ்ச்சியலும் சந்தோஷத்தினாலும் முடிந்தது.
நகோமியும் கடவுளின் திட்டத்தில் ஒரு பங்கு என்பதை மறந்து விடக்கூடாது.
*நம்முடைய வாழ்க்கையிலும் இரண்டு பகுதிகள் உண்டு.* ஆவிக்குரிய ஆரம்ப வாழ்க்கை போராட்டங்கள், இழப்புகள் இவைகளால் சூழப்பட்டிருந்தாலும் கர்த்தர் ஏற்ற நேரத்தில் அவர்களை மாற்றி நாம் அடைந்த துன்பத்திற்கும் பாடுகளுக்கும் பதிலாக இரட்டத்தனையான சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் தருவார் என்பதே நம்முடைய நம்பிக்கை.
நம்முடைய தேவன் எந்நாளும் நம்மை வருத்தத்துக்கு நேராக நடத்த மாட்டார் .
பாடுகள் அனுபவிக்க, ஒரு காலத்தை தீர்மானித்திருக் கும் பொழுது அதற்கு சமமாக மகிழ்ச்சியான காலங்களையும் குறித்து வைத்திருக்கிறார்.
அதைக் கடவுள்நமது வாழ்க்கையில் தருவார்.
*அவர் நம்முடைய சக்திக்கு மேலாக ஒரு நாளும் சோதிக்க மாட்டார். நகோமியின் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பு இறுதி நாட்களில் மகிழ்ச்சியாக மாறியது.*
நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் கசப்பான அனுபவங்களையும் தேவன் நிச்சயமாக மகிழ்ச்சியாக மாற்றுவார்.
அந்த நம்பிக்கையோடு கூட இந்த ஆவிக்குரிய
ஓ ட்டத்தை ஓட நமக்கு தேவன் கிருபை செய்வாராக.
எசேக்கியேல் சண்முகவேல்