கடவுள் குடும்பங்களையும் முன்குறித்திருக்கிறார்.
*கடவுள் குடும்பங்களையும் முன்குறித்திருக்கிறார்.*
யோசுவாவின் புத்தகத்தில்
ராகாப் என்கிற கானானியப பெண் இஸ்ரவேல் ஜனங்களோடே இணைக்கப்படுகிறாள்.
நியாயாதிபதிகள் காலத்தில் ரூத் என்கிற மோவாபிய பெண் இணைக்கப்படுகிறாள்.
இந்த இரண்டு நிகழ்வுகளும் தேவனுடைய திட்டத்தில் உள்ளவைகள். கடவுள் உலக மக்கள் அனைவரையும் நேசிக்கிறார் என்பதையும் தம்மை அண்டி வருகிற எவரையும் புறம்பே தள்ளுவதில்லை என்பதையும் உலகத்திற்கு உணர்த்த இந்த நிகழ்வுகள் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
ராகாபின் மகன் போவாஸ்
ரூத்தின் மகன் ஓபேத்.
அவன் தாவீதின் தகப்பனான ஈசாயின் தகப்பன்.
இந்த நிகழ்வுகளை பார்க்கும்போது அடுத்தடுத்து, தேவன் புறயின பெண்களை இணைத்து உருவான சந்ததி, உலகத்தின் இரட்சகன் பிறப்பதற்கு வழிவகுத்து,
நகோமியின் கணவன் மக்லோனின் பெயர் மறைந்து பெத்லகேமில் போவாஸ், ஓபேத் ஈசாயின் பெயர்கள், யூதர்கள் வரலாற்றில் இடம் பெற்று விட்டன.
வேதம் இதன் மூலம் நமக்கு உணர்த்தும் பாடங்கள்.
*கடவுள் நம்மை மட்டும் அழைக்கவில்லை,முன் குறிக்கவில்லை* .
1.நமது குழந்தைகள் மூலமாகவும் ஒரு திட்டத்தை இந்த உலகத்தில் வைத்திருக்கிறார் என்கிற சிந்தனை பெற்றோர்களுக்கு அவசியம்.
2. நம்முடைய குழந்தைகளை நமக்கு அடுத்த சந்ததியில் தேவனுடைய திட்டத்தில் பங்கு வகிக்கிற பிள்ளைகளாக மாற்றுவதும் ஒரு மிக சிறந்த ஊழியம்.
3. தாவீதின் வரலாற்றைப் பார்க்கும் பொழுது அவன் தன்னுடைய காலத்தில் அநேக வெற்றிகளை சம்பாதித்திருக்கிறார். அனேக சங்கீதங்களை எழுதி இருக்கிறார்.
இஸ்ரவேல் தேசத்திற்க்கென்று ஒரு மிகப்பெரிய ராஜ்ஜியத்தை உருவாக்கினார்.
தன் வாழ்நாள் முழுவதும், தேவனுடைய ஆலயத்தை கட்டுவதற்காக எல்லா முயற்சிகளையும் கைக்கொண்டு ஆலயம் கட்டுவதற்கான செல்வத்தையும் சேர்த்து வைத்தார்.
இந்த காரியங்கள் எல்லாம் மிகச்சிறந்த காரியங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதையெல்லாம் அவன் தேவனுக்காக செய்தான்.
ஆனால் தேவன் அவனுக்கு யாருக்கும் கொடுக்காத ஒரு ஆசீர்வாதத்தை கட்டளையிட்டார்.
மேசியா யூத கோத்திரத்திலிருந்து வருவார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அந்த யூத கோத்திரத்தில் அநேக குடும்பங்கள் இருந்தாலும் கடவுள் தாவீதின் குடும்பத்தை தேர்ந்தெடுத்து அந்த வம்சத்தில் உலகத்தின் இரட்சகராக பிறந்தார் .
இது கடவுள் தாவீதுக்கு கொடுத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்.
நாம் புரிந்து கொள்ளக்கூடிய காரியம் என்னவென்றால் *நாம் தேவனுடைய பரிபூரண சித்தத்தை இந்த உலகத்தில் நிறைவேற்றும்* *பொழுது நிச்சயமாக நமது குடும்பத்தை குறித்து* *அவர் கொண்டிருக்கும் அனாதி தீர்மானங்கள்* நிறைவேறும். நாம் *தனி ஒரு மனிதனாக ஆவிக்குரிய ஓட்டத்தை ஓட அழைக்கவில்லை* . *குடும்பமாக தொடர் ஓட்டத்தை ஓட அழைக்கப்பட்டிருக்கிறோம்* . நான் மட்டும் முன் குறிக்கப்பட்ட நபராக காணப்படாமல் என்னுடைய குடும்பமும் முன்குறிக்கப்பட்ட குடும்பமாக காணப்பட வேண்டும்.
இந்த சிந்தையை விசுவாச குடும்பத்தாருக்கு தேவன் தருவாராக.
எசேக்கியேல் சண்முகவேல்
The greatest thing God did for David was not to give him
victory over his enemies or wealth for the building of
the temple. The greatest privilege God gave him was
that of being the ancestor of the Messiah. David
wanted to build a house for God, but God told him He
would build a house (family) for David (2 Sam. 7).
David knew that the Messiah would come from the
kingly tribe of Judah (Gen. 49:8–10), but nobody
knew which family in Judah would be chosen. God
chose David’s family, and the Redeemer would be
known as “the son of David” (Matt. 1:1).
Wiersbe