Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

நியாயாதிபதிகள் புத்தகம் வேத பாடம் ஏழு.
*நியாயாதிபதிகள் புத்தகம் வேத பாடம் ஏழு.*

நியாயாதிபதிகள் புத்தகத்தில் தேவன் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்களில் மிக முக்கியமான பாடம் எதுவென்றால் தேவன் வரலாற்றை எழுதுகிறார் என்பதே.

According to Dr A.T Pierson *History is His story.*
உலகத்தின் காரியங்களையும் நிகழ்வுகளையும் அவர் தீர்மானம் பண்ணுகிறார்.
அவர் எல்லா நிகழ்வுகளையும் இயக்குகிறார் என்பதை இந்த புத்தகத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.
*God directs history.*

நியாயாதிபதிகள் காலம் அவனவன் தன் விருப்பப்படி வாழ்ந்த காலம்.
அரசர்கள் இல்லாத காலம்.
"அந்நாட்களில் இஸ்ரவேலில் அரசன் இருக்கவில்லை. ஒவ்வொருவனும் தன் பார்வைக்குச் சரியானதையே செய்து வந்தான்."
நியாயாதிபதிகள் 17:6.
மேலும்படிக்க 18:1,19:1,21:25

யோசுவாவின் காலத்தைப் போல
யூதர்களுக்கென்று ஒரு ஒருங்கிணைந்த தனி இராணுவப்படை அந்தக் காலகட்டத்தில் இருக்கவில்லை.
யூதர்களுக்கான ஒருங்கிணைந்த ஒரு தலைவர் காணப்படவில்லை.
மக்கள் சிதறி கிடந்த காலம். யூத ஜனங்களுக்குள் எந்த ஒற்றுமையும் இல்லாத காலம்.
கர்த்தர் எழுப்பின நியாயாதிபதிகளும் அவரவர்கள் வாழ்ந்த இடங்களின்தான் நியாயம் விசாரித்தார்கள். ஆட்சி செய்தார்கள். இராணுவத்தின் தலைவர்களாக காணப்பட்டார்கள். அவர்கள் அந்தந்த இடம் சார்ந்த மக்களுக்கு நியாயாதிபதிகளாகவும்
இராணுவத் தலைவர்களாகவும் காணப்பட்டார்கள்!
எந்த ஒரு நியாயாதிபதியும் ஒருங்கிணைந்த மக்களுக்கு நியாயம் விசாரிக்க
வில்லை. ‌
அப்படிப்பட்ட ஒரு இருண்ட காலம்.
ஆனாலும் அந்த இருண்ட காலத்திலும் தேவனுடைய கிரியை தடைபடவில்லை.

*கடவுள் உலகத் தோற்றத்திற்கு முன்பாக தீர்மானித்திருந்த அந்த நோக்கத்தை* *அந்த இருண்ட காலத்திலும் செயல்படுத்திக் கொண்டே இருந்தார்.*

நியாயாதிபதிகள் காலத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள் எதுவும் தேவனை கட்டுப்படுத்தவில்லை.

இந்த ஒழுங்கற்ற காலக்கட்டத்தில் தான் தேவனுடைய திட்டத்தின்படி மோவாபிய பெண்ணான ரூத்தை தேவன், தான் முன் குறித்த யூதர்களோடு இணைத்தார்.
போவாஸ் ரூத் மூலமாக ஓபேத் பிறந்தான்.
ஓபேத் ஈசாயின் தகப்பன்,
ஈசாய் தாவீதின் தகப்பன்.
இந்த தாவீதின் வம்சத்தில் உலகத்தின் இரட்சகர் இயேசு கிறிஸ்து பிறந்தார்.

இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள கூடிய பாடங்கள்.

1.இந்த உலகத்திலோ, நமது தேசத்திலோ என்ன காரியங்கள் நடந்தாலும் சாதகமற்ற சூழ்நிலைகள் தோன்றினாலும் *அந்த சூழ்நிலைகள் மத்தியிலும் தேவன் தம்முடைய கிரியைகளை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்.*

2. *அவருடைய அனுமதி இல்லாமல் இந்த உலகத்தில் எந்த காரியமும் நடைபெறாது. அவர் முன் குறித்த* நோக்கத்தை உலக நிகழ்வுகள் எதுவும் தடை செய்ய முடியாது.

3 *இறைவன் மனிதனுடைய அரசுகளின்மேல் ஆளுபவர் என்பதையும், அவர்* விரும்பியவனுக்கே அதைக் கொடுப்பார்.
தானி.4:25

4.நம்முடைய பார்வையில் இருண்ட காலமாக இருக்கலாம் ஆனால் தேவனுக்கு முன்பாக எல்லாம் வெளியுரங்கமாக இருக்கிறது.

5.அதுபோல கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுகிற விசுவாசிகளின் வாழ்க்கையில் அவர்கள் கண்களுக்குத் தோன்றுகிற இருண்ட காலங்கள் தேவனுடைய திட்டத்தை தடை செய்ய முடியாது.

6.அந்த இருண்ட காலங்களின் மத்தியிலும் தேவன் தான் முன் குறித்த பிள்ளைகளுடைய வாழ்க்கையில்
தம்முடைய
திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டுதான்‌
இருக்கிறார்.

7 *இந்த உலகம் எப்பொழுதும் தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது.* கடவுளுடைய அனுமதியின்றி எந்த அணுவும் அசையாது. நமக்கு சாதகம் இல்லாத சூழ்நிலையும் இருளான நேரங்களும் அவர் பார்வையில் ஒன்றும் இல்லை.
*God is always in control.*
எசேக்கியல் சண்முகவேல்