1 சாமுவேல் புத்தகம் வேத பாடம் 2.
1 சாமுவேல் புத்தகம் வேத பாடம் 2.
ஏலியும் எல்க்கானாவும்.
*ஒரு தேசத்தினுடைய ஆவிக்குரிய வீழ்ச்சி எங்கே ஆரம்பிக்கிறது என்றால் அந்த நாட்டில் வாழ்கிற ஆவிக்குரிய மக்களுடைய வீடுகளில் இருந்து ஆரம்பிக்கிறது* .
" *The ruin of a nation begins in the homes of its people"-*
An African proverb
*எங்கே பெற்றோர்கள் தங்கள் குடும்பங்களில் ஆவிக்குரிய சந்ததியை எழுப்பத் தவறுகிறார்களோ* *அங்கேயிருந்து அந்த நாட்டினுடைய ஆவிக்குரிய* *வீழ்ச்சி தொடங்குகிறது. இதற்கு* சரியான உதாரணம் ஏலியின் குடும்பம்.
ஏலியின் மகன்கள் பொல்லாதவர்களாயிருந்தார்கள். அவர்கள்
யேகோவாவுக்கு மதிப்பு கொடுக்கவில்லை.
1 சாமுவேல் 2:12
ஏலியின் மகன்களின் இந்த பாவம்
யேகோவாவின் பார்வையில் கொடியதாயிருந்தது. ஏனெனில் அவர்கள்
யேகோவாவின் காணிக்கையை கேவலமாய் எண்ணினார்கள்.
1 சாமுவேல் 2:17
எனவேதான் இவனுடைய காலத்தில் தேவனுடைய பெட்டி பெலிஸ்தியர்களால் கைப்பற்றப்பட்டது.
தேவ மகிமை இஸ்ரவேல் ஜனங்களை விட்டு கடந்து போனது.
அதே வேளையில் பெற்றோரால் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குடும்பத்தின் மூலமாக அல்லது அந்த குழந்தையின் மூலமாக அந்த தேசம் ஆவிக்குரிய வளர்ச்சியை அடையும் என்பதும் வேதத்தில் காணக்கூடிய உண்மை.
*Never underestimate the power of the home or the power of a little child dedicated to God.Wiersbe*
ஆவிக்குரிய வளர்ச்சியின் விளிம்பில் இருந்த, தேவ மகிமை இழந்த அந்த இஸ்ரவேல் மக்களை ஆவிக்குரிய அழிவில் இருந்து காப்பாற்றியது எல்க்கானாவும் அன்னாளின் அர்ப்பணிப்பின் விளைவாக தேவன் கொடுத்த குழந்தை சாமுவேல் தான்.
இந்த ஒரு குடும்பத்தின் அர்ப்பணிப்பு இஸ்ரவேல் தேசத்தின் ஆவிக்குரிய சூழ்நிலையை மாற்றி விட்டது.
சாமுவேல் எல்லாவித அடையாளங்களோடும் யூத தேசத்தின் முதல் தீர்க்கதரிசியாக மாறினார். தேவனால் அடையாளம்
காட்டப்பட்ட
இரண்டு மன்னர்களை அபிஷேகம் பண்ணினான்.
ஒரு மிகப்பெரிய தீர்க்கதரிசிகள் வட்டாரத்தை எழுப்பினான்.
தான் இருந்த காலம் முழுவதும் பிழையில்லாமல் நேர்மையாக கறை படாமல் பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல்தான் முக்கியம் என்பதற்கு அடையாளமாக திகழ்ந்தான்.1 சாமு 15:22
இதற்கெல்லாம் காரணம் அன்னாளின் அர்ப்பணிப்புள்ள ஜெபம்.
*அன்னாளின் ஜெபத்தில் அவளுடைய*
*இருதயம் தேவனோடு பேசியது. வார்த்தைகள் பேசவில்லை. ஜெபத்தில் வார்த்தைகள் பேசுவதை விட* இருதயங்கள் தேவனோடு* *பேச வேண்டும் என்பதற்கு* அன்னாள் ஒரு சிறந்த உதாரணம். 1:13
அன்னாளின் ஜெபத்தின் வேதனைகளை, பாரங்களை, உணர்வுகளை புரிந்து கொள்ளாதவனாகத்தான் பிரதான ஆசாரியன் ஏலி காணப்பட்டான்.
*ஒரு மேய்ப்பனுடைய மிகப்பெரிய தகுதி தன்னுடைய விசுவாசிகளின் கவலைகளை கரிசனையோடு அக்கறையோடு முதலில் கேட்கின்ற நபராக* *இருக்க வேண்டும்.*
ஏலி அன்னாளைப் பற்றிக் கூறிய தவறான வார்த்தைக்கு வருத்தப்படவே இல்லை.
அதைப் பற்றி
விசாரிக்கவும் இல்லை.
ஆனாலும் அந்த தகுதி இல்லாத பிரதான ஆசாரியன் மூலமாக தேவன் அன்னாளோடு பேசி அவளை உற்சாகப்படுத்தினார்.1:17
*எனவே கிறிஸ்தவ குடும்பங்கள் அடுத்த தலைமுறையைப் பற்றி அக்கறையோடு அணுக வேண்டும். எந்த அளவுக்கு உலகத்தின் ஆசீர்வாதங்களை தங்கள் பிள்ளைகள் பெறும்படியாக உழைக்கிறார்களோ அதைவிட பன்மடங்கு தங்கள் பிள்ளைகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் சிறந்து விளங்க தங்களுக்குள்ள அனைத்தையும் இழக்க தயாராக இருக்க வேண்டும். தேவன் இந்த கடைசி காலங்களில் நம்மிடம் எதிர்பார்க்கும் காரியம் இதுவே.*
எசேக்கியேல் சண்முகவேல்