Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 சாமுவேல் புத்தகம் வேத பாடம் ஒன்று.


1 சாமுவேல் புத்தகம் வேத பாடம் ஒன்று.

ஆரம்ப நாட்களில் 1சாமுவேல்,2. சாமுவேல் 1,2 இராஜாக்கள் ஆகிய புத்தகங்கள், இராஜாக்கள் புத்தகம் என்று அழைக்கப்பட்டது.

1,2 சாமுவேல் புத்தகங்கள் ஒரே புத்தகமாகத்தான் யூதர்களுடைய வேத புத்தகத்தில் காணப்படடது. ஆனால் அவைகள் பெரிய புத்தகமாக இருந்தபடியினால் இரண்டாக பிரிக்கப்பட்டது.

நியாயாதிபதிகள் புத்தகத்தில் சிம்சோன் கடைசியாக இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்ததாக சொல்லப்பட்டாலும், கடைசி நியாயாதிபதியாக சாமுவேலைத்தான் சொல்ல வேண்டும். ஏனென்றால்
சாமுவேல் தன் வாழ்நாள் முழுவதும் இஸ்ரவேலருக்குத் தொடர்ந்து நீதிபதியாயிருந்தான்.
1 சாமுவேல் 7:15

இந்த இரண்டு புத்தகங்களின் காலக்கட்டம் ஏறக்குறைய 150 ஆண்டுகள்.

நியாயாதிபதி காலத்தில் அரசியல் அதிகாரமும் கிடையாது‌,
அரசனும் கிடையாது.
யூதர்களுக்கென்று எந்த ஒரு அரசனும் ஏற்படுத்தப்படவில்லை.
ஆசாரியத்துவம் கறைபடிந்து காணப்பட்டது.

ஆனால் இந்தப் புத்தகத்தின்
காலக்கட்டத்தில் தான்
ஆசரிப்புக் கூடாரம் எருசலேம் நகருக்கு கொண்டுவரப்பட்டு ஒருங்கிணைந்த வழிபாடு ஏற்படுத்தப்பட்டது.

*இந்த புத்தகங்களின் காலக் கட்டத்தில்தான்*
*அரசர்கள் நியமிக்கப்பட்டு அரசாங்கம் உருவாக்கப்பட்டது.*

எருசலேமில் ஆசரிப்பு கூடாரம் கொண்டு வரப்பட்டது. தாவீது ஆலயம் கட்டுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும், ஆயத்தங்களையும் செய்தான்.
இந்த காலக்கட்டத்தில்தான் எருசலேம் யூதர்களுடைய தலைநகரமாக மாறியது.

இந்த புத்தகத்தில் தான் தாவீதோடு தேவன் உடன்படிக்கை பண்ணினார்.2சாமு 7:1-17.

இவன்தான் இஸ்ரவேலின் முதல் ‌ தீர்க்கதரிசியாக அறியப்படுகிறார். (Professional prophet ).
அதாவது தீர்க்கதரிசிகளுக்குரிய முழு அடையாளங்களோடு காணப்பட்டவன்.
இவன்தான் முதல் இரண்டு அரசர்களை அடையாளம் காட்டி அபிஷேகம் பண்ணினான்.

*He was first king maker in the history ancient Israel .*

பல தீர்க்கதரிசிகளை உருவாக்கினான்.
சிதறிக் கிடந்த யூதர்களை இணைத்து ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கு பாலமாக திகழ்ந்தான்.
*இவன் ஆரோன் குடும்பத்தில் பிறக்காத லேவியன். ஆனாலும் இவன் ஆசாரியனாக கர்த்தருடைய அனுமதியோடு ஆசாரிய ஊழியத்தை* *நிறைவேற்றினான்.*
*சேனைகளின் கர்த்தர்* ( *Lord of hosts)என்கிற* வார்த்தை 300 தடவை வேதத்தில் வருகிறது.1 சாமுவேல் ‌ புத்தகத்தில் தான் இந்த வார்த்தை முதல் முதல் வருகிறது.1:3.

*The books of 1 and 2 Samuel are part of Christian history.*

*Jesus was king of the Jews in the past, he is king of the Church today, and he will be king of the world in the future, when he* will reign in justice and righteousness, and the kingdom will finally be restored to Israel.
David Pawson