Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

Men fall in private long before they fall in public.
Men fall in private long before they fall in public.”

“Doctrine is useless if it is not accompanied by a holy life. It is worse than useless; it does positive harm. Something of ‘the image of Christ’ must be seen and observed by others in our private life, and habits, and character, and doings.”   J. C. Ryle:

உபதேசத்தை அதிகமாய்  போதிப்பவர்களுக்கு இந்த வார்த்தை ஒரு மிகப் பெரிய எச்சரிப்பு.

*சாட்சி இல்லாதவர்களின் உபதேசத்தினால் கிறிஸ்தவத்திற்கு எந்த பயனும் இல்லை.*

இதைப் பற்றிபவுல் எழுதின எச்சரிப்பை நோக்கி பார்க்க வேண்டும்.

ஒரு மூப்பர் அல்லது இன்றைய வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் போதகர் அல்லது மேய்ப்பர் இவர்களுக்குள்ள தகுதிகளில் மிக முக்கியமானதாக இதை பவுல் குறிப்பிடுகிறார்

" ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களை கண்டனம்பண்ணவும் வல்லவனாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற *உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்."*
*தீத்து* 1:9

தான் போதிக்கிற போதனைக்கேற்றபடி வசனத்தை கை கொள்ளாவிட்டால் அந்த மேய்ப்பரை போல் மாய் மாலமான மனிதன் உலகத்தில் யாரும் இருக்க முடியாது. இவர்கள் வெள்ளடிக்கப்பட்ட கல்லரைகள்

எத்தகைய ஆரோக்கிய உபதேசங்களை போதித்தாலும் அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கை ஆரோக்கியம் அற்றிருந்தால் அந்த ஊழியத்தில் கர்த்தர் எப்படி மகிமைப்படுவார்?
*நாம் பேசும் உபதேசமும் நாம் வாழும் வாழ்க்கையும் ஒத்துப் போகாவிட்டால் அந்த வாழ்க்கை ஒரு இடறலான வாழ்க்கை. கடவுள்* தாமே *நம்முடைய தேசத்தில் சொல்லும் செயலும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க கூடிய* *போதகர்களை தருவாராக.*

யாரும் பார்க்க முடியாத நேரத்தில் கடவுள் மட்டுமே பார்க்கக்கூடிய நேரத்தில் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதே பரிசுத்தத்தின் சரியான அளவு.
எசேக்கியல் சண்முகவேல்