கிதியோனும் தன் ஜனங்களுக்கு இடறல் உண்டாக்கிய ஏபோத்தும்.
*கிதியோனும் தன் ஜனங்களுக்கு இடறல் உண்டாக்கிய ஏபோத்தும்.*
இவர் 40 ஆண்டு காலம் இஸ்ரவேலின் ராணுவ பொறுப்பை ஏற்றுக் கொண்டு வழி நடத்தினார்.
ஆண்டவருடைய அழைப்பை மிகுந்த தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டார். தன்னுடைய அழைப்பை பல்வேறு அடையாளங்கள் மூலமாக உறுதி செய்து கொண்டார்.
இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை ஆளும்படியாக கிதியோனை அழைத்த பொழுது அந்த சிங்காசனத்தை மறுதலித்தார்.
இவைகள் எல்லாம் அவருடைய நல்ல செயல்களுக்கு அடையாளம்.
இவர் இறுதிக் காலத்தில் செய்த ஒரு தவறான காரியம் இஸ்ரேல் ஜனங்களை விக்கிரக ஆராதனைக்கு நேராக வழி நடத்தியது..
*He refused the crown but accepted the gold.*
ஆளுகையை மறுதலித்த கிதியோன் அதற்குப் பதிலாக தங்கத்தினாலான கடுக்கன்களை கேட்டார் .
மீதியானியர்கள் தங்கள் காதுகளிலும் மூக்குகளிலும் நகைகளை அணிந்திருப்பார்கள்.
ஆதி24:47 மீதியானவர்களை வெற்றி பெற்ற யூதர்கள் அந்த தங்கத்திலான அணிகலன்களை கொள்ளையடித்திருப்பார்கள். *எனவே தான் செய்த பணிக்கு ஊதியமாக கொள்ளையிட்ட* *அந்தத் தங்கத்தில் பங்கு கேட்டார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.*
கிதியோன்
அதன் மூலம் பெற்ற தங்கத்தை உருக்கி அதைக் கொண்டு ஆசாரியர்கள் அணியக்கூடிய ஏபோத் மேலாடையை உருவாக்கினார்.
*Whether this ephod was an embellished version of*
the garment used by the *high priest (28:6), or some*
*kind of standing idol (* *see Judg. 17:5; 18* :14, 17), we
can’t tell, but it was used in worship and became a snare
to Gideon and the people.Wiersbe
*இந்தஏபோத் தங்கத்திலான மேலாடையாகவும் இருக்கலாம் அல்லது சிலையாகவும்* *இருக்கலாம்..*
*மேலாடை என்று பார்த்தால்*
இந்த ஆடை *பிரதான ஆசாரியர் மட்டுமே அணியக்கூடிய* மேலாடை.*
சிலை என்று பார்த்தால் அது உருவ வழிபாடாக மாறிவிடுகிறது
".அவர்கள் கொடுத்த தங்கத்தைக் கொண்டு கிதியோன் ஒரு ஏபோத்தைச் செய்து தனது பட்டணமான ஒப்ராவிலே வைத்தான். ஆனால் மிகவிரைவில் இஸ்ரயேலர் எல்லோரும் ஏபோத்தை வணங்கி வேசித்தனம் பண்ணினார்கள். இது கிதியோனுக்கும், அவன் குடும்பத்திற்கும் கண்ணியாய் இருந்தது.
நியாயாதிபதிகள் 8:27
*தேசத்தில் ஆவிக்குரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டிய *கிதியோன் கொள்ளையிட்ட பணத்தில் தான் செய்த பணிக்கு கூலியை கேட்டு திருப்தி அடைந்து விட்டான். ராணுவ தலைவராக இருந்த 40 ஆண்டுகள் காலத்தில் எந்தவித ஆவிக்குரிய முயற்சிகளையும் தன்னுடைய ஜனங்களுக்காக கிதியோன் எடுக்கவில்லை..*
*அதற்குப் பதிலாக தனது ஜனங்களுக்கு இடறலாக* *ஏபோத்தை உருவாக்கி பல தலை முறைகளுக்கு இடறலை உண்டு பண்ணினார்.*
இன்றைக்கும் நம்முடைய சபைகளில் அனேக தலைவர்கள் இந்த மனநிலையில்தான் காணப்படுகிறார்கள். உலகத் தேவைகளுக்காக மார்க்க பணிகளை செய்து அதற்கேற்ற ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களது ஆவிக்குரிய வளர்ச்சியை பற்றி அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள்.
*இவர்கள் இக்கால கிதியோன்கள்.*
*விசுவாசிகளிடம் உலக நன்மைகளை செல்வங்களை பெற்றுக்கொண்டு* *அதற்கு பிரதீபலனாக எந்த ஆவிக்குரிய வளர்ச்சியையும் தங்களுடைய ஜனங்களுக்கு வழங்காமல் இருக்கிறார்கள்.*
கடவுள் கிதியோனை
மீதியானியரை மேற்கொள்ள
பயன்படுத்தினாலும் அவனுடைய இறுதி அவ்வளவு பிரகாசமாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
*நம்முடைய ஆரம்ப ஓட்டம் அல்ல நாம் அதை எப்படி முடிக்கிறோம் என்பதே முக்கியமானது.*
எசக்கியேல் சண்முகவேல்