விசுவாசியை சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்தல் என்றால் என்ன?
"கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்"
1கொரி 5:5
*ஒரு விசுவாசி 1 கொரிந் 5:1 சொல்லப்பட்ட தேவனை அறியாத ஜனங்களும் வெட்கப்பட கூடிய பெரிய பாவத்தில் விழும்* *போது* *அவனை முதலாவதாக சபையில் இருந்து விலக்கி வைக்கவேண்டும்.*
*அப்போது கர்த்தர் சபையின் மூலமாக அவனுக்கு அளிக்கும் பாதுகாப்பு விலக்கப்படும்.*
ஆண்டவர் அவனை தண்டிக்க சாத்தானுக்கு அனுமதி அளிப்பார்( *God will allow Satan to attack the offender's body).*
*அவன் சாத்தானின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும்* .
*அந்த பாடுகளின் மூலமாக மறுபடியும் மனம்திரும்பி ஆண்டவரோடு* ஒப்புரவாகமுடியும்.
இதுதான் 1 கொரி 5:5 ன் விளக்கம்.
( *அத்தகைய, இந்த மனிதனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுங்கள். அத்தகைய, இந்த* *மனிதனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது அவனுடைய மாம்சம் அழிந்துபோனாலும். கர்த்தரின் நாளிலே அவனது* *ஆவியோ இரட்சிக்கப்படும். அவனுடைய மாம்சம் அழிந்துபோனாலும். கர்த்தரின் நாளிலே அவனது* *ஆவியோ இரட்சிக்கப்படும்).*
இதன் மூலம் வேதம் உணர்த்தும் பாடம் என்னவென்றால் மிகப்பெரிய விபச்சார பாவத்தில் எல்லோரும் அறியும்படியாக ஈடுபடுகின்ற ஒரு சகோதரனை சபையில் இருந்து விலக்கி வைக்க கூடிய அதிகாரம் சபைக்கு இருக்கிறது.
*The church has the power to excommunicate such believer.*
இப்படிப்பட்ட அதிகாரத்தை சபைகள் நடைமுறைப்படுத்துமா என்றால் சந்தேகமே.
ஆனால் குறைந்தபட்சம் அந்த நபரை தனிப்பட்ட முறையில் அழைத்து கண்டிக்கவாவது செய்யலாம்.
இப்படிப்பட்ட பாவத்தில் ஈடுபடுகிறவன் எவ்வளவு பெரிய உயர்வான இடத்தில் இருந்தாலும், எவ்வளவு உயர்வான ஆவிக்குரிய வரங்களை பெற்றிருந்தாலும் ,சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் காணப்பட்டாலும், எவ்வளவு அதிகமாக தேவனால் பயன்படுத்தப்பட்ட மனிதனாக இருந்தாலும், அவர்களை கண்டித்து சபையை விட்டு, ஐக்கியத்தை விட்டு ஒதுக்கி வைக்கக் கூடிய ஆவிக்குரிய தைரியம் உள்ள தலைவர்களை இன்று சபைகளில் காண்பது மிகவும் அரிது. பின் எப்படி ஆதி திருசபையினுடைய எழுப்புதல் நம் காலத்தில் வரும்? சபை தனக்கு கொடுத்த அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருக்கும் போது சாத்தான் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சபையை பாழாக்கி விடுவான்.
இப்படி பலமுள்ள அதிகாரம் உள்ள சபைத் தலைவர்கள் எழும்ப ஜெபிப்பது நமது கடமை . அப்படிப்பட்ட தலைவர்கள் கடினமான முடிவுகளை எடுக்கும்போது அவர்களை ஆதரிப்பது விசுவாசிகளுடைய கடமை.
எசேக்கியேல் சண்முகவேல் .