The Alter of Incense and the ministry of the High Priest .
*ஆசாரியப்பணியும், தூப பீடமும்.*
*
ஆசாரியப் பணியில் தூபபீடம் மிக முக்கியமானது.
ஆசரிப்பு கூடாரத்தில் தூபபீடம் பரிசுத்த ஸ்தலத்தில் காணப்படும்.
அங்கு காணப்படும் பொருட்களில் மிகவும் பெரிய பொருள் இதுதான்.
இந்த தூபபீடத்தில் ஆசாரியன் காலையிலும் மாலையிலும் நறுமணத்தூளை எரித்து தூபம் காட்ட வேண்டும்.
இந்த தூப பீடத்திற்கான நெருப்பு தணல் பலிபீடத்திலிருந்து எடுக்கப்பட்டு அந்த நெருப்பின் மூலமாக தூபபீடத்தில் நறுமணத்தூள் எரிக்கப்பட வேண்டும்.
இந்த தூப பீடத்தில் நறுமணத்தூள் எரிக்கப்படுவது என்பது எதைக் குறிக்கிறது என்றால் நம்முடைய ஜெப வாழ்க்கையை குறிப்பதாகும்.
சங்கீதம் 141:2 தாவீது இப்படி எழுதுகிறார்.
"என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது."
அப்படி தூபம் காட்டும்பொழுது யூதர்கள் வெளியில் ஜெபித்துக் கொண்டிருப்பார்கள் .லூக்1:10
வெளி 5:8,8:3 ல் பரலோகத்தில் உள்ள பலிபீடத்தில் செலுத்தப்படும் தூபங்கள் பரிசுத்தவான்களின் ஜெபம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய ஏற்பாட்டில் விசுவாசிகள் அனைவருமே ஆசாரியர்கள்.
இந்த ஆசாரிய பணியை நிறைவாக நிறைவேற்ற நாம் காலையிலும் மாலையிலும் நம்மை பலிபீடத்தில் ஒப்புக்கொடுத்து அந்த அர்ப்பணிப்பின் மூலமாக ஜெபமாகிய தூப வர்க்கத்தை காலையிலும் மாலையிலும் மட்டுமல்ல எப்பொழுதும் இடைவிடாமல் கர்த்தருக்கு முன்பு செலுத்த பணிக்கப்பட்டு இருக்கிறோம்.
1தெச 5:17
மேலும் இந்த தூபபீடம் மகா பரிசுத்தமானது.
இந்த தூப பீடத்தில் உள்ள நறுமணத்தூள் இரவும் பகலும் தொடர்ந்து எரிந்துகொண்டிருக்க வேண்டும்.
எனவே நம்முடைய ஜெப வாழ்க்கை என்பது ஏதோ வாரத்தில் ஒரு நாள் சபையில் ஜெபிப்பதோ, அல்லது பெரிய ஜெப கூட்டத்தில் கலந்து கொள்வதோ, அல்லது எப்பொழுதாவது ஜெபிப்பதோ, அல்லது நேரம் கிடைக்கும் போது ஜெபிப்பதோ, அல்லது நமக்கு சோதனைகள் கஷ்டங்கள் வரும் போது தேவனை தேடுவதும், ஜெபிப்பதோ அல்ல.
அது ஒவ்வொரு நாளும் கடைபிடிக்க வேண்டிய முக்கிய ஆவிக்குரிய பணியாகும்.
*நம்முடைய வேதவாசிப்பு வேத தியானம்* *எவ்வளவு முக்கியமானதோ அதுபோல ஜெப வாழ்க்கையும்* *அவ்வளவு முக்கியமானது* .
*வேத தியானத்தையும் ,ஜெப வாழ்க்கையும்* *நாம் சமநிலைப்படுத்தி ஆவிக்குரிய வாழ்க்கையை நடத்தினால் உண்மையாகவே நாம் வெற்றியுள்ள* *வாழ்க்கை வாழ முடியும்.*
படிக்க: யாத்30:1-10,34,லேவி16:12,13.