யாக்கோபு 1:13-15 ன் உண்மையான விளக்கம்
சோதனை என்று தமிழ் வேதாகமத்தில் சொல்லப்படும் வார்த்தை’' Peirasmos'’ என்ற கிரேக்க மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று வேத அறிஞர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் அந்த வார்த்தைக்கு Trial and Temptation என்ற இரு அர்த்தங்கள் உண்டு.
யாக்கோபு1:12 ல் சொல்லப்படும் வார்த்தை "சோதனை "(Trails).
இந்த இடத்தில் சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஆனால் 1:13-15ல் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
"சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
யாக்கோபு 1:13-15
யாக்கோபு 1:13-15 ல் சொல்லப்படும் இடத்தில் Temptation என்கிற அர்த்தத்தில் தான் சொல்லப்படுகிறது.
"சோதனை" என்கிற வார்த்தை வரக்கூடாது.
"Temptation'' என்று புரிந்து கொண்டால்தான் அந்த பகுதியை விளங்கி கொள்ள முடியும்.
“Temptation” என்பதற்கு சரியான அர்த்தம் “பாவம் செய்யத் தூண்டுதல்” என்பதாகும்{ராஜரிகம் அவர்கள் மொழிபெயர்ப்பு}
1:13-15 ல்
“சோதனை”(Trial or Test) என்று எடுத்துகொண்டால் தவறான அர்த்தங்களை உண்டாக்கும்.
சோதனையை நாம் எதிர்நோக்க வேண்டும்.
*Temptation ஐ எதிர்க்கவேண்டும்.*
*நமக்குள் இருந்து வருவது "Temptation".*
*வெளியில் இருந்து வருவது (பரீட்சை,சோதனை,Trial)*
*சோதனை(Trials) விசுவாசத்தின் பயிற்சியில் நம்மை உறுதிப்படுத்தும்.*
*சோதனை,பரீட்சை தேவனிடத்தில் இருந்து அல்லது தேவனின் அனுமதியோடு வரும்.*
*Temptation ஐ சாத்தான் கொண்டுவருவான்* .
*Temptations should be resisted, but trails are to be welcomed.*
*Temptation is an enticement to sin which arises from within.*
*Trail is a testing of faith which is from some external circumstance such as persecutions.**
*Trail is an outside enemy, whereas temptation is an internal enemy.*
எசேக்கியேல் சண்முகவேல்