எலியாவின் தேவன்
எலியாவின் தேவன் எங்கே என்று தேவனை நோக்கி கேட்கின்ற கேள்விகளும் பாடல்களும் இன்று அதிகமாக காணப்படுகின்றன.
எலியாவின் தேவன் எங்கும் நிறைந்தவராய் எல்லாம் அறிந்தவராய் சர்வ வல்லமை உடையவராய் இன்றைக்கும் இருக்கிறார்.
கேள்வி அதுவாக இருக்கக்கூடாது. நாம் கேட்க வேண்டிய கேள்வி ஏன் எலியாக்கள் உருவாகவில்லை? என்பதுதான்
. நாம் ஏன் சரியான தலைவராக உருவாகவில்லை.?
எலியாக்கள்என்பவர்கள் வானத்திலிருந்து குதித்து வருபவர்கள் அல்ல.
ஒவ்வொரு விசுவாசியும் தாங்கள் இருக்கின்ற இடங்களில் ,வேலை பார்க்க இடங்களில் எலியாக்களாக மாற முடியும் .
அதை தேவன் விரும்புகிறார்
.
நாம் இருக்கிற இடங்களில் எப்படி எலியாக்களாக மாற முடியும்?
நாம் வேலை பார்க்கிற அலுவலகங்களில் நேர்மையாக இருக்க வேண்டும் .
கையூட்டு வாங்காமல் இருக்க வேண்டும்.
வேலையில் கடமை உணர்ச்சியோடு இருக்க வேண்டும்.
மறுபாலரோடு பேசும் போது கண்ணியமாக நடக்க வேண்டும்.
பரிசுத்த சிந்தையோடு இருக்க வேண்டும்.
ஜாதி இன வேறுபாட்டை நம்முடைய பணியில் காட்டக் கூடாது.
அலுவலகங்களில் கொண்டாடப்படும் புறமார்க்க பண்டிகைகளில் நாம் கலந்து கொள்ளக் கூடாது.
அதிகாரிகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் .
நேரத்தோடு பணிக்கு செல்ல வேண்டும் .
அலுவலகப் பொருட்களை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது .
அலுவலக நேரத்தை நாம் திருடக்கூடாது .
அலுவலக பண விஷயங்களில் நம்முடைய கைகள் சுத்தமாக இருக்க வேண்டும்.
இப்படி நாம் வாழும் பொழுது நாமே நம்முடைய இடத்தில் எலியாக்களாக மாறி விடுவோம்.
கர்த்தருக்காக வைராக்கியமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
சக ஊழியரோடு அன்பாக பழக வேண்டும் .
ஆனால் அவர்களுடைய பழக்க வழக்கங்களில் நாம் ஈடுபடுத்தி சமரசம் செய்து கொள்ளக் கூடாது.
இதை எழுதுகிற நான் 33 ஆண்டுகள் அரசு பணியில் வேலை செய்திருக்கிறேன்.
என்னுடைய மேஜையில் வேதம் எப்பொழுதும் காணப்படும்.
வேலையை தொடங்கும் பொழுது நான் ஜெபிப்பதை மற்ற அலுவலர்ககள் பார்ப்பார்கள்.
நான் கிறிஸ்தவன் என்பதை அடையாளப்படுத்திக் கொள்ள தவறுவதில்லை.
புறம் மார்க்கத்தார் விழாக்களில் முழு அலுவலகமே கலந்து கொண்டாலும் நான் ஒரு நாளும் கலந்து கொண்டதில்லை. . ஒரு நயா பைசா கூட கையூட்டு வாங்கினது இல்லை.
அதற்காக நான் இழந்தது அநேகம்.
என்னைப் பொறுத்த அளவில் 33 ஆண்டுகள் என்னுடைய அலுவலகத்தில் ஆண்டவருடைய முழு நேர பணியாளராக நான் பணியாற்றினேன் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்ள முடியும்.
முழு நேரப் பணி என்பது ஆலயத்தில் மட்டுமல்ல நாம் வேலை பார்க்கும் அலுவலகத்திலும் அது இருக்க வேண்டும்.
எலியாக்களாக மாறுவோம் எலியாவின் தேவனை வேண்டிக் கொள்வோம்.
எசேக்கியல் சமூகமவேல்