Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

நெகேமியாவின் புத்தகம் வேதபாடம் 8 Expository commentary on the book of Nehemiah .
உங்கள் சிந்தனைக்கு.
நெகேமியாவின் புத்தகம் வேதபாடம் 8
Expository commentary on the book of Nehemiah .
நெகேமியா புத்தகம் என்பது 66 புத்தகங்களில் சுயசரிதை போன்று ஒரு புத்தகம் எதுவென்றால் அது இந்த புத்தகம்தான்‌
It is the most autobiographical of Bible historical books.
இந்த புத்தகத்தில் நெகேமியா தான் அரசனுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த காலத்திலிருந்து எருசலேம் நகரின் மதில்கள் கட்டப்பட்டு இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்த நிகழ்வு வரைக்கும் நடந்த காரியங்களை இந்த புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறார்.
அவன் தான் சந்தித்த பலவகையான எதிர்ப்புகள் மிரட்டல்கள், பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவாக எழுதி இருக்கிறார்.
நெகேமியா மீதுபலவகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தாலும் அதில் இரண்டு வகையான குற்றச்சாட்டுகள் மிகவும் கொடூரமானது..
1. நெகேமியா அரசனுக்கு விரோதமாக கலகம் செய்கிறான்
2:19
2. நெகேமியா இஸ்ரவேலின் ராஜாவாக மாறப்போகிறான்.
இப்படி குற்றம் சாட்டியவர்கள்
ஓரோனியனான சன்பல்லாத்து, அம்மோனிய அலுவலகனான தொபியாவு மற்றும், அரபியனான கேஷேம்
இந்த குற்றச்சாட்டுகளின் ஆழத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அன்றைய காலகட்டத்தில் பெர்சிய பேரரசு மிகப்பெரிய வல்லரசாக திகழ்ந்தது.
அப்படிப்பட்ட அந்த வல்லரசின் பேரரசனான அர்த்தசஸ்டாவுக்கு
நம்பிக்கைக்கு பாத்திரமானவனாக திகழ்ந்தவன்தான் இந்த நெகேமியா. அர்த்தசஸ்டா நெகேமியாவை இஸ்ரவேல் பகுதிக்கு ஆளுநராக நியமித்து எருசலேமின் மதில்களை புதுப்பிக்க அனுமதி வழங்கினார்.
நெகேமியாவின் மேல் முழு நம்பிக்கை வைத்து அவன் நமக்கு துரோகம் இழைக்க மாட்டான், நமக்கு விரோதமாக யூதர்களை தூண்டிவிட்டு கலகம் செயல் மாட்டான் என்ற நம்பிக்கையில் இந்த மிகப்பெரிய பொறுப்பை அவனிடம் கொடுத்தான். பொதுவாக யூதருடைய மனப்பான்மையை அந்த மன்னன் நன்கு அறிந்து இருப்பான். யூதர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ஆக்கப்பட்டதையும் அறிந்திருப்பான்.
அப்படி இருந்தும் ஒரு யூதனையே தான் கைப்பற்றிய அந்த இடத்திற்கு ஆளுநராக ‌நியமித்து என்பது அரசன் நெகேமியாவின் மேல் வைத்த அபாரமான நம்பிக்கையை காட்டுவதாகும்.
இந்த நம்பிக்கையை கெடுக்கும் வகையில்தான்
நெகேமியா அர்த்தசஸ்தாவுக்கு எதிராக கலகத்தை தூண்டுகிறான் என்கிற குற்றச்சாட்டை நெகேமியாவின் மேல் அவனுடைய எதிரிகள் சாட்டினார்கள்.
இது மாதிரியான ஒரு குற்றச்சாட்டை தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்
யூதர்கள் சுமத்தினார்கள்.லூக்23:1-5

எதிரிகள் சகரியா 3:8,4:6-10,6:10-14,ஆகாய்‌ 3:21-23
சொல்லப்பட்ட வாக்கியங்களுக்கான‌ அர்த்தத்தை தவறாக புரிந்து கொண்டு
“உம்மைக் குறித்து இதை பிரசித்தப்படுத்தும்படி, எருசலேமின் இறைவாக்கு உரைப்போரையும் நியமித்திருக்கிறீர்" என்று குற்றம் சாட்டினார்கள்.
நெகேமியா 6:7
ஒரு சாதாரண மனிதனாக இருந்தால் இந்த குற்றச்சாட்டுகளை பார்த்து பயந்து நடுங்கியிருப்பான்.
ஆனால் நெகேமியா அண்ட் எதிர்ப்புகளுக்கும் பயமுறுத்தலுக்கும் சற்று பணியாமல் அவர்களுக்கு
, “நீர் சொல்வதன்படி ஒன்றும் நடக்கவில்லை; இது உம்முடைய வெறும் கற்பனையே” இன்று மட்டுமே பதில் அளித்தான்.
நெகேமியா 6:8
காரணம் அவன் உண்மையானவனாக தன்னை நியமித்து அரசனுக்கும் இந்த விளங்கினான்‌
தனக்கு இந்த பெரிய ஊழியத்தை கொடுத்த ஆண்டவருக்கும் விசுவாசம் உள்ளவனாக காணப்பட்டார்.
ராஜாவுக்கு காட்ட வேண்டிய விசுவாசத்தையும் தேவனுக்கு காட்ட வேண்டிய விசுவாசத்தையும் சமநிலைப்படுத்தி தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றிய மிகப்பெரிய ஒரு அரசு ஊழியன் நெகேமியா.
எதிரியினுடைய மிரட்டலுக்கு இம்மி அளவு கூட பணியவில்லை.
இன்றைக்கும் அரசாங்கத்தில் உயர் பதவியில் இருக்கிற அதிகாரிகள் இந்த மனநிலையில் காணப்பட வேண்டும். ஆனால் கடவுள் ஆசிர்வாதத்தை நன்கு பெற்றுக் கொண்டு பல அதிகாரிகள் அரசாங்கத்திற்கு காட்ட வேண்டிய விசுவாசத்தை காட்டுவார்கள் .ஆனால் அந்த இடத்தில் தேவனுக்கு கொடுக்க வேண்டிய கனத்தை கொடுக்காமல் சமரசம் செய்து விட்டு விடுவார்கள்.
விசுவாசத்தையும் அரசாங்கத்திற்கு காட்ட வேண்டிய உண்மையுள்ளையும் சமநிலையோடு அரசாங்கத்தின் வேலை பார்க்கிற கிறிஸ்தவ விசுவாசிகள் செயல்பட வேண்டும் என்பதை இந்த பதிவு நோக்கம்.
நெகேமியாவும் தன்னுடைய அளவை உயரத்தை அறிந்து அதற்கேற்றபடி அரசனுக்கும் கடவுளுக்கும் உண்மையாக விளங்கினார்.
இப்படிப்பட்ட நெகேமியா போல விசுவாசிகள் தமிழக அரசாங்கத்திலா உருவாக நாம் ஜெபிக்க கடமைப்பட்டிருக்கிறோம் ஜெபிப்போம்.