Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

*யோபுவின் புத்தகம் — வேத பாடம் 34* யோபுவிடம் தேவன் கேட்ட 77 *பாகம் இரண்டு
*உங்கள் சிந்தனைக்கு!*

*யோபுவின் புத்தகம் — வேத பாடம் 34*

யோபுவிடம் தேவன் கேட்ட 77
*பாகம் இரண்டு*
கேள்விகள் யோபுவின் பாடுகளை அறிந்த அவனுடைய நான்கு நண்பர்கள் அவனுக்கு ஆறுதல் கூறுவதற்காக வந்தார்கள். அவர்கள் தேவனுடைய மகத்துவத்தையும், நீதியையும், ஞானத்தையும் எடுத்துச் சொன்னார்கள். ஆனால், அவர்களுடைய வார்த்தைகள் யோபுவின் உள்ளத்தை முழுமையாகத் திருப்திப்படுத்தவில்லை.இறுதியில், தேவனே நேரடியாகப் பெருங்காற்றிலிருந்து யோபுவிடம் பேசத் தொடங்கினார் (யோபு 38:1).ஆம். யோபு 38–41 அதிகாரங்களில் தேவன் *யோபுவிடம் சுமார் 77 கேள்விகளைக்* கேட்கிறார் என்று புகழ் பெற்ற வேத அறிஞர் *W.Wiersbe குறிப்பிடுகிறார்* .
ஆண்டவர் கேட்ட கேள்விகளில் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் காரியம் என்னவென்றால் அவர் *யோபுவின் பாடுகளைப் பற்றியோ, யோபுவின் பாடுகளுக்கான காரணத்தைப்* *பற்றியோ ,அவனுக்கு ஏன் இந்த பாடுகளை அனுமதித்தார்* *என்பதை பற்றியோ எதையும் குறிப்பிடாமல் தன்னுடைய* *ஆளுமையை மட்டும் இங்கே குறிப்பிடுகிறார்* என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த பதிவில் கடவுளுடைய படைப்பைக் குறித்த கேள்விகளை பார்த்தோம் இந்தப் பதிவில்
*ஆழம், மரணம், ஒளி மற்றும் இருள் (யோபு 38:16–21 )இவைகளைப் பற்றிய கடவுளின் கேள்விகள்*
1.சமுத்திரத்தின் ஊற்றுகளுக்குள் நீ சென்றிருக்கிறாயா?

2.ஆழத்தின் அடிப்பகுதிகளை நீ பார்த்திருக்கிறாயா?

3.மரணத்தின் வாசல்கள் உனக்குத் தெரியுமா?

4.மரணத்தின் நிழலின் வாசல்களை நீ பார்த்திருக்கிறாயா?

5.பூமியின் அகலத்தை நீ அறிந்திருக்கிறாயா?

6.ஒளி வாசம் செய்யும் இடம் எங்கே என்று உனக்குத் தெரியுமா?

7.இருளின் இருப்பிடம் எங்கே என்று அறிந்திருக்கிறாயா?

8.ஒளியை அதன் எல்லைக்குக் கொண்டுபோக உன்னால் முடியுமா?

9.இருளின் வீட்டிற்குச் செல்லும் பாதையை நீ அறிந்திருக்கிறாயா?

10.இவையெல்லாம் உன் காலத்தில் இருந்ததாக உனக்குத் தெரியுமா?
அடுத்தது
*பனி, ஆலங்கட்டி, மழை இவைகளைப் பற்றிய* *கடவுளின் கேள்விகள்—(* யோபு 38:22–30)
1.பனியின் களஞ்சியங்களுக்குள் நீ சென்றிருக்கிறாயா?

2.ஆலங்கட்டியின் களஞ்சியங்களைப் பார்த்திருக்கிறாயா?

3.யுத்தம் மற்றும் போரின் நாளுக்காக அவற்றை நான் வைத்திருப்பதை அறிவாயா?

4.மின்னலின் பாதை எங்கே என்று உனக்குத் தெரியுமா?

5.கிழக்குக் காற்று பூமியில் எவ்வாறு பரவுகிறது என்பதை நீ அறிவாயா?

6.மழைக்கு ஒரு தந்தை உண்டா?
பனித்துளிகளைப் பெற்றெடுத்தது யார்?

7.பனிக்கட்டி எந்த வயிற்றிலிருந்து பிறந்தது?

8.வானத்திலிருந்து விழும் உறைபனி யாரால் உண்டாகிறது

9.நீரானது கல்லைப்போல் உறைந்து, ஆழத்தின் மேற்பரப்பு உறைந்து போவதை நீ விளக்க முடியுமா?

இந்தப் பதிவின் இறுதியில்
*நட்சத்திரங்கள்* *மற்றும் வானம் இவைகளைப்* *பற்றிய கடவுளின்* *கேள்விகள்* — (யோபு 38:31–38)
1.கிருத்திகை நட்சத்திரக் கூட்டத்தை நீ கட்ட முடியுமா?
2.ஒரியோன் நட்சத்திரக் கூட்டத்தின் கட்டுகளை நீ அவிழ்க்க முடியுமா?
3.நட்சத்திரக் கூட்டங்களை அவற்றின் காலத்தில் எழச் செய்ய முடியுமா?
4.அவற்றை அவற்றின் பாதையில் நடத்த முடியுமா?

5வானத்தின் சட்டங்களை நீ அறிவாயா?

6அவற்றின் ஆட்சியை பூமியில் ஏற்படுத்த முடியுமா?

7.மேகங்களின் எண்ணிக்கையை நீ கணக்கிட முடியுமா?

8வானத்தின் குடங்களைச் சாய்த்து மழையைப் பொழியச் செய்ய முடியுமா?

9.தூசி ஒன்றாகக் குவிந்து சேறாக மாறும்போது அதை நீ கட்டுப்படுத்த முடியுமா?

இந்தக் கேள்விகள் மூலம் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்.
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு புரியாத, விளங்காத, அறிந்து கொள்ள முடியாத பல நிகழ்வுகள் நடைபெறும் பொழுது நாம்" ஏன் "என்று கேள்வி கேட்கத் தூண்டும். நாம் எல்லாவற்றிற்கும் கடவுள் பதிலளிக்க வேண்டும் என்று அநேக நேரங்களில் எதிர்பார்க்கிறோம்.
ஆனால் அது உண்மையான விசுவாசம் அல்ல.
விசுவாசம் என்பது எல்லாவற்றிற்கும் விளக்கம் கிடைத்த பிறகு தேவனை நம்புவது அல்ல; விளக்கம் கிடைக்காத நிலையிலும் தேவனை நம்புவது.
கடவுளுடைய பணியில் எசேக்கியேல் சண்முகவேல்.