Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

*யோபுவின் புத்தகம் — வேத பாடம் 35* யோபுவிடம் தேவன் கேட்ட 77 பாகம் 3
*உங்கள் சிந்தனைக்கு!*

*யோபுவின் புத்தகம் — வேத பாடம் 35*

யோபுவிடம் தேவன் கேட்ட 77
பாகம் 3

*கடவுள் கேட்ட் 77 கேள்விகளில் இறுதிப்பகுதி.*

விலங்குகளின் பராமரிப்பு — யோபு 38:39–41
1சிங்கத்திற்காக இரையை நீ வேட்டையாடித் தர முடியுமா?

2.சிங்கக்குட்டிகளின் பசியை நீ தீர்க்க முடியுமா?
3.காக்கைக் குஞ்சுகளுக்கு உணவு கொடுப்பது யார்?

காட்டு விலங்குகள் — யோபு 39

1.காட்டாடுகள் எப்போது குட்டி போடுகின்றன என்று உனக்குத் தெரியுமா?
2.மான்கள் எப்போது குட்டி போடுகின்றன என்பதை நீ அறிவாயா?
3.அவை எத்தனை மாதங்கள் கர்ப்பமாக இருக்கின்றன
என்பதை நீ கணக்கிட முடியுமா?
4. அவை சினையாயிருக்கும் மாதத்தை கணிக்க முடியமா?

5.காட்டுக் கழுதையை விடுதலையாக்கியது நீயா?
6.அது மனிதர்களின் வயல்களில் வேலை செய்யும்படி அதை கட்ட முடியுமா?
7.காட்டெருமையை உன் தொழிலுக்குப் பயன்படுத்த முடியுமா?
8.அது உனக்காக நிலத்தை உழுமா?
9.அதன் வலிமையை நீ நம்ப முடியுமா?
10.உன் பயிரை அறுவடை செய்ய அது உனக்கு உதவுமா?
11.நெருப்புக்கோழியின் இறக்கைகள் ஏன் அப்படிப் பெருமையாக அசைகின்றன என்பதை நீ அறிவாயா?

12அது குதிரையையும் அதன் சவாரியாளனையும் வேகத்தில் மிஞ்சச் செய்வது யார்?
13குதிரைக்கு வலிமை கொடுத்தது நீயா?
14.அதன் கழுத்துக்கு மயிரை அணிவித்தது நீயா?
15அது வெட்டுக்கிளியைப் போலத் துள்ளுவதற்கு நீ சக்தி கொடுத்தாயா?
16அது போர்க்களத்தில் பயமின்றி நிற்கச் செய்வது நீயா?
17.அது எக்காளத்தின் சத்தத்தைக் கேட்டு போருக்குப் பாய்வதை நீ ஏற்படுத்தினாயா?
18.பருந்து பறப்பது உன் ஞானத்தினாலா?
19.கழுகு உயரமாகப் பறந்து தன் கூட்டைக் கட்டுவது உன் கட்டளையினாலா?

. *யோபுவின் நீதியும் தேவனுடைய அதிகாரமும் — யோபு 40:1–14*
1.சர்வவல்லவரோடு வழக்காடுபவன் அவரைத் திருத்த முடியுமா?
2.தேவனைக் குற்றம் சாட்டுகிறவன் அவருக்கு பதில் சொல்ல முடியுமா?
3.நீ என் நியாயத்தை மறுக்கப் போகிறாயா?
4.உன்னை நீதிமானாக்குவதற்காக என்னைக் குற்றவாளியாக்கப் போகிறாயா?
5.உனக்கு தேவனைப்போன்ற வல்லமை இருக்கிறதா?
6.தேவனைப்போல் இடிமுழக்கத்துடன் குரல் கொடுக்க முடியுமா?
7.நீ பெருமையுள்ளவர்களைத் தாழ்த்த முடியுமா?
8.துன்மார்க்கரை அழித்து அவர்களை மண்ணில் புதைக்க முடியுமா?
அப்படிச் செய்ய உன்னால் முடிந்தால், “உன் வலதுகரம் உன்னை இரட்சிக்கும்” என்று நான் ஒப்புக்கொள்வேன்.

*பெகேமோத் மற்றும் லேவியாதான் — யோபு 40–41*
1.பெகேமோத்தை நீ கொக்கி அல்லது கயிற்றால் பிடிக்க முடியுமா?
2.லேவியாதானைத் தூண்டிலால் பிடிக்க முடியுமா?
3.அவனை கயிற்றால் கட்டி உன் வேலைக்காரனாக வைத்துக்கொள்ள முடியுமா?
4.அவனை அடக்கி, அவனோடு விளையாடி, உன் பிள்ளைகளுக்காக அவனை வாங்கிக்கொள்ள முடியுமா?

*முக்கியமான உண்மை: இந்த 77 கேள்விகளிலும் தேவன் யோபுவிடம், “உன் துன்பத்திற்கு* *இதுதான் காரணம்” என்று சொல்லவில்லை.* அதற்குப் பதிலாக, “படைப்பின் சிறிய விஷயங்களைக்கூட முழுமையாக அறியாத நீ, படைப்பாளியான என்னுடைய ஞானத்தை எப்படி நியாயந்தீர்க்க முடியும்?” என்பதை உணர்த்துகிறார். �

ஒரு வரியில்:
யோபு தேவனிடம் “ஏன்?” என்று கேட்டான்; தேவன் யோபுவிடம் “நீ யார் என்பதை அறிவாயா?” என்று கேள்விகளால் பதிலளித்தார்.
*நமக்கு ஏமாற்றங்கள் இழப்புகள் அவமானங்கள் துரோகங்கள்* *சிந்தனைகள் ஏற்படும் பொழுது ஏன் என்ற கேள்விக்கணைகளை தேவனை* *நோக்கி எழுப்புகிறோம் ‌*
*அந்தக் கேள்விகளுக்கு ஒரு வேளை கடவுள் பதிலளிக்கலாம் சில நேரங்களில். ஆனால்* *அநேக நேரங்களில் அவர் மௌனம் சாதிப்பார்* . ‌ *நம்முடைய கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதிலைக் கொண்டு நாம் நம்முடைய விசுவாச வாழ்க்கையை தொடர முடியாது.*
*கேள்விகள் கேள்விகளாகவே அனேக நேரங்களில் நமது வாழ்க்கையில் காணப்படும்.* *அதற்கான பதில்களை நாம் நித்தியத்தில் தான் பெற்றுக்கொள்ள முடியும்.*
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு குருடனைப் போல் நாம் அவரை பின்பற்ற வேண்டும்.


குருடாய் இருப்பவன் எவன்? என் ஊழியன்தான்! செவிடாய் இருப்பவன் எவன்? நான் அனுப்பும் தூதன் தான்! எனக்கு அர்ப்பணிக்கப்பட்டவன் போல் குருடன் யார்? ஆண்டவரின் ஊழியன்போல் பார்வையற்றவன் யார்?

எசாயா 42:19