Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

ஏலியின் மறுபக்கம்.
1 சாமுவேல் புத்தகம்
வேத பாடம் 6.


ஏலியின் மறுபக்கம்.
ஏலி வாழ்ந்த காலம் 98 ஆண்டுகள்.
ஏலி வாழ்ந்த காலம் இதுதான்.

அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது
பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை.
(1.சாமுவேல் 3:1)

இஸ்ரவேல் தேசத்தில் பிரதான ஆசாரியர்களின் வரலாற்றை பார்க்கும்பொழுது முதல் முதலாக ஏலிதான் கடவுளுடைய கோபாக்கினை யை சந்தித்தவன்.
காரணம் கடவுளை அதிகமாக நேசிக்காமல், கனம் பண்ணாமல் தன்னுடைய குமாரர்களை அதிகமாக நேசித்து அவர்களுடைய பாவங்களை கண்டும் காணாமல் இருந்ததுதான்.

ஆசரிப்புக் கூடாரத்துக்கு அடுத்த காரியங்களில் அவனுடைய மகன்களுடைய பாவங்கள் கர்த்தரை கோபப்படுத்தியது.
அதன் விளைவு ஒரே நாளில் தன்னுடைய இரு குமாரர்களையும் பெலிஸ்தியர்களுக்கு எதிரான போரில் பறி கொடுத்தான்.
தேவனுடைய பெட்டி எதிரிகளால் கைப்பற்றப்பட்டு விட்டது.4:11.

இந்தக் காரியங்கள் எல்லாம் அவனைப் பற்றிய தான ஒரு பக்க பார்வை.

அதே வேளையில் அவனுடைய இன்னொரு பக்கத்தை பார்க்கலாம்.

சாமுவேல் ஆசரி ப்புக் கூடாரத்துக்கு வந்தபோது அவனுக்கு வயது மூன்று இருக்கும்.
அந்த நாள் முதல் அவனை பராமரித் தது, வழி நடத்தியதெல்லாம் ஏலிதான்.

ஆசரிப்புக் கூடாரப் பணிகளில் அவனை ஈடுபடுத்தி தேவனைப் பற்றிய வழிகளில் நடத்தியது ஏலிதான்.

அவனை எந்த விதத்திலும் கடுமையாக நடத்தியதாக வேதத்தில் சொல்லப்படவில்லை.
1. சாமுவேலை அற்பமாகவோ கனவீனமாகவோ நடத்தவில் லை.

2. கடவுளை கண்டடையக் கூடிய வழியை சொல்லிக் கொடுத்தான்.

3. சாமுவேலிடம், கடவுள் தன் குடும்பத்திற்கு வரக்கூடிய அழிவை சொல்லியதைக்குறித்து அவன் மீது பொறாமைப் படவில்லை.

4.அன்னாளை
யும் அவளது அர்ப்பணிப்பையு ம் புரிந்து கொண்டு சாமுவேலை நடத்தினான்.

5. சாமுவேலை ஒரு மகனைப் போல் நடத்தினான்.
ஏலி என்னதான்
தன் பிள்ளைகளை கண்டிக்காமல் போனாலும் சாமுவேலின் காரியங்களில் நேர்மையாக உத்தமமாக நடந்து கொண்டான்.
இதன் மூலம் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்.

1. நம்மை ஆவிக்குரிய வழிகளில் வழிநடத்தக் கூடியவர்கள், மற்றவர்கள் பார்வையில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை
நம்மை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பது தான் முக்கியம்.

2. தேவன் நம்மை யாரிடத்தில் ஒப்படைக்கிறாரோ யாரிடத்திற்க்கு வழிநடத்தினாரோ அவரிடம் பொறுமையாக அவருடைய அனுபவங்களை ஆவிக்குரிய பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமை.
3. கடவுள் அனுமதிக்கும் காலம் வரை அவரிடம் நாம் பெற வேண்டிய அனைத்து அனுபவங்களையும் பெற வேண்டும்‌.

4. மற்றவர்கள் அவர்களை பொருட்படுத்தாமல் போனாலும் நாம் அவரை மதிக்க வேண்டும்.

5. ஏற்ற நேரத்தில் நம்மை பிரிக்கும் வரை கடவுள் சொல்லுகின்ற காலம் வரை கடவுள் நம்மை உயர்த்தும் வரை அவரிடத்தில் அடங்கி இருக்க வேண்டும்

6. காலத்திற்கு முன் கர்த்தர் நம் வாழ்வில் அனுமதித்த ஆவிக்குரிய தலைவரை விட்டுப் பிரிந்து வருவது நல்லதல்ல.

7. உலகத்தின் பார்வையில் சிறப்பான தலைவர்கள் நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய பாதையில் சரியாக நம்மை நடத்த முடியாமல் போகலாம். அதே வேளையில் கர்த்தர் அனுமதிக்கிற தலைவர்கள் மற்றொரு பார்வையில் சரியில்லாமல் இருந்தாலும் நம்முடைய வாழ்வில் கர்த்தருடைய நோக்கத்தை நிறைவேற்ற அவர்கள் பயன்படுவார்கள்.எசேக்கியல் சண்முகவேல்