Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 சாமுவேல் புத்தகம்  வேத பாடம் 8

1 சாமுவேல் புத்தகம் 
வேத பாடம் 8

சாமுவேல் தீர்க்கதரிசி தன் தாய் அன்னாளின் வயிற்றில் இருக்கும் போது ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவன்.. 
அதன் பிறகு  அவன்  தன் தாயிடம் பால் குடிப்பது மறந்த பிறகு கடவுளிடம் அர்ப்பணிக்கப்பட்டான்.
 
அது முதற்கொண்டு அவன் அப்போதைய பிரதான ஆசாரியன் ஏலியின் கட்டுப்பாட்டில் வளர்ந்தான்..
பிறகு 12 வயது இருக்கும் பொழுது கடவுள் அவனோடு பேசினார். 


சாமுவேல் ஆசாரியன் ஏலியின் மேற்பார்வையில் யேகோவாவுக்குப் பணிவிடைசெய்துகொண்டிருந்தான்.

சாமுவேல் யேகோவாவினுடைய இறைவாக்கினன் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறான் என்பதை, தாணிலிருந்து பெயெர்செபா வரையுள்ள எல்லா இஸ்ரவேலரும் அறிந்துகொண்டார்கள்.

தொடர்ந்து யேகோவா சீலோவிலே தோன்றி அவர் தமது வார்த்தைகளின் மூலம் சாமுவேலுக்குத் தன்னை வெளிப்படுத்தினார்.
1 சாமுவேல் 3:20-21.
ஏலியும் அவனது இரண்டு மகன்களும் தேவனால் தண்டிக்கப்பட்ட பிறகு இஸ்ரவேல் ஜனங்களின் விருப்பத்திற்கு ஏற்ப சவுலை கடவுளுடைய கட்டளையின்படி அரசனாக அபிஷேகம் பண்ணினார்.9:16

சவுல் அரசனாக இருந்தாலும் அவன் ஆசாரியனாக செயல்பட்டபடியி னால் அவனைக் கடிந்து கொண்டார் 13:1-14

சவுல்,அமலேக்கியரின் அரசனான ஆகாகை  கொலை செய்யாமல் உயிரோடே பிடித்தபடியினால் அவனைக் கடிந்து கொண்டார்.15:10-35

பிறகு தாவீதை அபிஷேகம் பண்ணினார். 
இந்த அளவுக்கு தன்னால் வாழ்நாள் முழுவதும் கடவுளின் சித்தத்தின்படி தன் ஊழியத்தை நிறைவேற்றினார்..
அவன் எவ்வளவு உத்தமமாக வாழ்ந்தான் என்பதை கீழ்க்காணும் வசனங்கள் உறுதிப்படுத்தும்.

 நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண் செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்.
1 சாமுவேல் 12:3.
இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவன் தான் சாமுவேல். 

அவனுடைய காலத்திலேயே அவனுடைய பிள்ளைகள் இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்தபொழுது அவர்கள் வழி விலகிப் போனார்கள்.

அவன் மகன்கள் தகப்பன் சாமுவேலின் வழிகளைப் பின்பற்றவில்லை. அவர்கள் நேர்மையற்ற முறையில் ஆதாயம் பெற விரும்பி இலஞ்சம் பெற்று, நீதியைப் புரட்டினார்கள்.
1 சாமுவேல் 8:3

இதனால் வெறுப்படைந்து இஸ்ரேல் ஜனங்கள் எங்களுக்கு இந்த முறைமை வேண்டாம் எங்களுக்கு அரசனை தாருங்கள் என்று சொல்லக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தினார்கள்.
They did not want a theocracy.
They insisted on a monacracy.

ஆரோனுடைய குமாரர்கள் தேவப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் கர்த்தருடைய கட்டளைகளை அசட்டை பண்ணி கோபாக்கினையை வருவித்துக் கொண்டார்கள்.

ஏலியின் குமாரர்கள் அதனை பாடமாக கற்றுக் கொள்ளாமல் தேவனுடைய தண்டனையை பெற்றுக் கொண்டார்கள். இதற்கு.
ஏலியின் பங்கும் முக்கியமானது. 

ஆனால் சாமுவேல் உத்தமமாக நடந்தாலும் நேர்மையாக வாழ்ந்தாலும் அவனுடைய குமாரர்கள் இறுதியில் அவனுக்கு அவமானத்தைதான் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். 

இது ஒரு சோகமான நிகழ்வு.
புதிய ஏற்பாட்டு காலத்தில் பெற்றோர்கள் பக்தியுள்ள சந்ததியை உருவாக்க அழைக்கப்பட்டிருந்தாலும் சில நேரங்களில் இப்படிப்பட்ட காரியங்கள் கிறிஸ்தவ குடும்பங்களில் ஊழியர்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்து விடுகிறது.

இதை ஏன் கர்த்தர் அனுமதித்தார், ஏன் நடந்தது, தவறு யாருடையது என்பதை எல்லாம் நாம் மேலெழுந்த வாரியாக யாரையும் குறை சொல்ல முடியாது நித்தியத்தில் மட்டுமே அதற்கு விடை கிடைக்கும்.

ஆனாலும் புதிய ஏற்பாட்டின் வாக்குத்தத்தங்களின்படி குடும்பத்தின் இரட்சிப்புக்காக போராடும்பொழுது பிள்ளைகளுடைய இரட்சிப்பை பெற்றோர்கள் போராடி பெற்றுக்கொள்ள முடியும். ஊழியக்காரர்களுடைய பிள்ளைகளுடைய தற்போதைய பின்மாற்றத்தை குறித்து காலத்திற்கு முன்பு பதில் சொல்லக்கூடாது. முடிவு தான் முக்கியம். 

நாம் ஆரோனாக இருந்தாலும் சாமுவேலாக இருந்தாலும் நமது குடும்பத்தில் இது மாதிரி நிகழ்வுகள் நடைபெறும்போது சோர்வடையாமல் போராடி ஜெபிக்கும் போது நிச்சயமாக கர்த்தர் நம் ஜெபத்தை கேட்டு மகிமையான காரியங்களை அவர்களுடைய பிள்ளைகளின் குடும்பத்தில் நிறைவேற்றுவார்.
எசேக்கியேல் சண்முகவேல்