ஏலியின் வாழ்க்கை சபைக்கு உணர்த்தும் எச்சரிக்கை என்ன?
1 சாமுவேல் புத்தகம் வேத பாடம் 5.
ஏலியின் வாழ்க்கை சபைக்கு உணர்த்தும் எச்சரிக்கை என்ன?
கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
(1 தீமோத்தேயு 3:1)
யாராவது திருச்சபையின் மேற்பார்வையாளனாக இருக்க விரும்பினால், அவன் நல்ல பணியை விரும்புகிறான். அது உண்மையான நம்பத்தகுந்த வாக்கு.
(1 தீமோத்தேயு 3:1)
இது இலகு மொழிபெயர்ப்பு.
கடவுள் சபைக்கு ஐந்து வகை ஊழியங்களை வரங்களாக கொடுத்திருக்கிறார். இவற்றில் சபைக்கு மேய்ப்பராக அல்லது கண்காணிப்பாளராக ஒருவன் இருக்க விரும்பினால் அது நல்லது என்று வேதம் சொல்லுகிறது. இப்படிப்பட்ட ஒரு சிறப்பை ஐந்து ஊழியங்களில் வேறு எந்த ஊழியத்திற்கும் தேவன் அளிக்கவில்லை.
அப்படிப்பட்ட சிறப்பான கனமான ஊழியம் தான் சபைக்குத் தலைவராக இருக்கக்கூடிய ஊழியம். தலைமைப் பண்பு என்பது தேவன் அளிக்கக்கூடிய ஒரு கிருபை.
அதை சரியாக கையாள முடியாவிட்டால் அல்லது தேவன் கொடுத்த அந்த வரத்தை தவறாக பயன்படுத்தினால்
வரக்கூடிய நஷ்டங்கள், இழப்புகள், தண்டனைகள் அதிகம்.
ஏலியின் வாழ்க்கையை நாம் சற்று ஆராய்ந்து பார்ப்போமென்றால் சபைத் தலைவர்கள் அறிந்து கொள்ளக்கூடிய மிகப்பெரிய எச்சரிப்பை நாம் பார்க்கலாம்.
வேதத்தில் ஏலியைப் பற்றி தேவன் கூறிய வார்த்தைகளை பாருங்கள்.
என் வாசஸ்தலத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என் பலியையும், என் காணிக்கையையும், நீங்கள் உதைப்பானேன்? என் ஜனமாகிய இஸ்ரவேலின் காணிக்கைகளி லெல்லாம் பிரதானமானவைகளைக் கொண்டு உங்களைக் கொழுக்கப்பண்ணும்படிக்கு, நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன் என்கிறார்.
(1.சாமுவேல் 2:29)
அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன்.
(1சாமுவேல் 3:13)
"அதினிமித்தம் ஏலியின் குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியினாலாவது காணிக்கையினாலாவது நிவிர்த்தியாவ தில்லை என்று ஏலியின் குடும்பத்தைக் குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார்.
(1சாமுவேல் 3:14)
இவ்வளவு கோபத்துடன் எந்த பிரதான ஆசாரியனுடன் தேவன் பேசியதாக வேதத்தில் நான் பார்க்கவில்லை.
அதேபோல் தேவன் ஏலிக்கும் ஏலியின் குடும்பத்திற்கும் அளித்த தண்டனையையும் பார்க்க வேண்டும்.
அப்பொழுது என் உறைவிடத்தில் நீ துன்பத்தைக் காண்பாய். இஸ்ரவேலருக்கு நன்மை செய்யப்பட்டாலும், உன் குடும்பத்தில் முதியவன் ஒருவனும் ஒருபோதும் இருக்கமாட்டான்.
(1சாமுவேல் 2:32)
‘உன் மகன்களான ஓப்னிக்கும், பினெகாசுக்கும் நேரிடுவது உனக்கு ஒரு அடையாளமாயிருக்கும். அவர்கள் இருவரும் ஒரே நாளில் சாவார்கள்.
(1சாமுவேல் 2:34)
அதுமாத்திரம் அல்ல அவனுடைய சந்ததியும் அப்பத்திற்காகவும் பணத்திற்காகவும் கெஞ்சி நிற்கும் சூழ்நிலை ஏற் படும் என்று தேவன் எச்சரிக்கிறார்.
இத்தகைய எச்சரிப்பையும் தண்டனையும் ஏலி ஏன் பெற்றான், ஒரே ஒரு முக்கிய காரணம் தான்.
தன்னுடைய பிள்ளைகளை தன்னுடைய ஊழியத்தில் தலையிட்டு தேவனுடைய நாமத்தை கன வீனப் பண்ணின காரியத்தை கண்டிக்காமல் விட்ட காரணம் தான்.
தேவன் தங்கும் ஆசரிப்புக் கூடாரத்தை அவமாக்கியதும் தங்கள் இச்சைகளை நிறைவேற்றிய இடமாக மாற்றியதும்தான்.
Ministerial immorality வேதத்தில் இந்த இடத்தில் தான் முதல் முதல் வருகிறது.2: 22
கடவுள் தம்மை ஒருபோதும் பரிகாசம் பண்ண அனுமதிக்க மாட்டார்.
இதைப் போல, புதிய ஏற்பாட்டிலும் சபையின் ஆரம்ப காலங்களில், தேவனின் நேரடியான சந்திப்பு வெளிப்பட்டதை பார்க்கலாம்.
கிருபையின் காலமாக இருந்தாலும் அனனியா சப்பீ ராள் இவர்கள் அடைந்த தண்டனையை நாம் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். தேவனிடத்திலும் பரிசுத்த ஆவியினிட த்திலும் பொய் சொன்னதாக அவர்களைப் பற்றி பேதுரு குற்றம் சாட்டுகிறார் (அப்போ5:3,4)
சபையை கண்காணிப்பவர்கள்
வேறுவிதமாய் நடக்கும்போது அவர்களைக் குறித்து பவுல் சொன்ன வார்த்தைகளை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். (தீத்து.1:9-12 மற்றும்
1 தீமோ 3:4,5)
எனவே சபைத் தலைவர்கள் தங்கள் ஊழியங்களில் தம்முடைய பிள்ளைகளை முன்னிறுத்துவதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதில் கர்த்தருடைய சித்தத்தை செய்ய வேண்டும். தற்காலிக உலக நன்மைகளுக்காக சொத்துக்களை காப்பாற்றுவதற்காக தம்முடைய வாரிசுகளை முதன்மைப்படுத்தினால் நிச்சயமாக கர்த்தருடைய கோபாக்கினை யை சந்திக்க நேரிடும் என்பதை வேதம் உணர்த்துகிறது. ஏலியின் காரியத்தில் தேவன் பொறுமை காத்தார்.
சாமுவேலுக்கு தேவன் தம்முடைய வார்த்தையால் வெளிப்படுத்தும் வரை ஏலிக்கு வரவேண்டிய தண்டனையை நிறுத்தி வைத்திருந்தார், (3:21, மற்றும் 4:1)
ஒருவேளை நம்முடைய தீர்மானங்களை நிறைவேற்றுவ தற்காக பொறுமையாக இருக்கலாம். அந்த பொறுமையை கிறிஸ்தவ தலைவர்கள் தங்களுக்கு சாதகமாக கருதக்கூடாது.மற்ற தனிப்பட்ட பாவங்களை விட தேவன் கொடுத்த ஊழியங்களில் கடவுளுடைய ஆளுகை நிராகரித்து தங்கள் அளுகையை நிலை நிறுத்துவது என்பது மிகவும் ஆபத்தானது. எசேக்கியேல் சண்முகவேல்