Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

ஏலியும் அவனுக்கு குமாரர்களும் இன்று சபைக்கு சொல்லும் பாடங்கள் என்ன?
1 சாமுவேல் புத்தகம்
வேத பாடம் 4

ஏலியும் அவனுக்கு குமாரர்களும் இன்று சபைக்கு சொல்லும் பாடங்கள் என்ன?

பிரதான ஆசாரியன் ஏலியின் வரலாறு,
ஆசரிப்புக் கூடாரத்தின் வரலாற்றில் முக்கியமான பகுதியாகும்.


அதுபோல் ஏலியின் குமாரர்களும் வரலாற்றிலிருந்து எந்தப் படிப்பினையும் கற்றுக் கொள்ளாதவர்கள்.

இதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

யார் இந்த எலி. !

ஆரோனின் முதல் இரண்டு குமாரர்கள் ஆசிரிப்புக் கூடார ஆரம்ப நிகழ்ச்சியில் கர்த்தர் அங்கீகரிக்காத வேறு ஒரு நெருப்பைக் கொண்டு வந்து கர்த்தருடைய சன்னிதானத்தில் தூபம் காட்ட முன்வந்தபடியினால் அவர்கள் கர்த்தரின் கர்த்தருடைய சன்னிதானத்தில் இருந்து புறப்பட்ட நெருப்பு அவர்களை அழித்தது.
அதற்குப் பிறகு பிரதான ஆசாரியர் பட்டம் ஆரோனின் மூன்றாவது குமாரனான
எலெயாசாருக்கு வழங்கப்பட்டது.
பின்பு ஏதோ ஒரு காரணத்துக்காக அந்த பதவி ஆரோனின் நான்காவது குமாரான இத்தாமார் குடும்பத்திற்கு சென்று விட்டது.
இந்தக் குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் இந்த ஏலி.

இந்த ஏலி நாதாப், அபியூ மரணத்தின் மூலமாக மூலமாக எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை.
அப்படி அறிந்திருந்தால் தன் பிள்ளைகளை கண்டித்து வளர்த்திருப்பான்
. தன் பிள்ளைகளை விட தேவனை அதிகமாக நேசிக்காத காரணத்தால் பிள்ளைகளை கண்டிக்கவில்லை..

இவனுடைய காலத்தில்தான் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி இஸ்ரவேல் ஜனங்களை விட்டு விட்டு புற இனத்தாரின் கைகளில் சிக்கிக் கொண்டது.
தேவ மகிமை இஸ்ரேல் ஜனங்களை விட்டு கடந்து சென்றது.

தன்னுடைய இந்தத் தவறுகளால் பிரதான ஆசாரிய பதவி மறுபடியுமாக‌ஆரோனின் மூன்றாவது மகனான எலெயாசார் வம்சத்திற்கு மறுபடியும் சென்றுவிட்டது.‌
இவன் செய்த தவறால் ஆசாரிய பட்டம் இன்னொரு சந்ததிக்கு சென்று விட்டது.

அடுத்தது ஏலியின் மகன்கள் செய்த தவறுகள் .

1 இவர்கள் ஏலியின் மகன்களாக இருந்தாலும் பிரதான ஆசாரியர்களாக நியமிக்கப்படவில்லை. ஆனால் இவர்கள் பிரதான ஆசாரியர்களின் உடைய மகன்களாக இருந்த காரணத்தினால் தங்களை பிரதான ஆசாரியர்களாக தங்களை எண்ணிக் கொண்டார்கள் ‌
2.
ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள். அவர்கள் கர்த்தரை அறியவில்லை.
1 சாமுவேல் 2:12.
3.
அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே தகாத உறவில் ஈடு விட்டார்கள்
1 சாமுவேல் 2:22

4. பலியிட்ட பொருள்களில் தேவனுக்குரியதை தங்களுக்கு என்று எடுத்துக் கொண்டார்கள்2:14

5. இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய காணிக்கையை அருவருக்கம்படியான அந்த சூழ்நிலை ஏற்படுத்தினார்கள்.

இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளும் காரியங்கள்.
1. ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை விட தேவனை அதிகமாக நேசிக்க வேண்டும். (குறிப்பாக ஊழியத்துக்கு அடுத்த காரியங்களில் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது)
2. ஊழியருடைய பிள்ளைகள் தங்களுடைய தகப்பன்கள் ஊழியக்காரர்களாக காணப்பட்டாலும் தாங்கள் தேவனால் அழைக்க பட்டால் ஒழிய மாமிசத்தில் அந்த அழைப்பு நிறைவேற்றக்கூடாது
3. ஊழியருடைய பிள்ளைகள் தேவனை அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.
4. தேவனுக்குரிய காரியங்களை மாமிசத்தில் தேவனுடைய பிள்ளைகள் அடைய முயற்சிக்கக் கூடாது.
.
5. ஊழியத்தில் உதவிக்காக வரும் பெண்களோடு எந்த விதத்திலும் ஊழியக்காரருடைய பிள்ளைகள் தவறான உறவு வைத்துக் கொள்ளக் கூடாது‌‌.

6. காணிக்கைகளையும் தசம பாவங்களையும் ஏன் ஆலயத்திற்கு கொடுக்கிறோம் என்கிற எண்ணத்தை ஊழியக்காரருடைய பிள்ளைகள் தங்களுடைய ஆடம்பரத்தினாலும் செயல்களினாலும் விசுவாசிகள் மத்தியில் உருவாக்கக் கூடாது.

7. ஊழியக்கார்களுடைய பிள்ளைகள் தேவனுக்கு அடுத்த காரியங்களில் பயபக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
*பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட சம்பவங்கள் அடிப்படையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களில் *ஏலியும் அவனுடைய பிள்ளைகளும் நமக்கு அளிக்கும் பாடமும் முக்கியமானது.* சபைகளில் வாரிசுகளை முதன்மைப்படுத்துபவர்கள் இந்த பாடத்தை புரிந்து கொண்டால் நல்லது.
எசேக்கியேல் சண்முகவேல்