Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

Census
*603550-x*
*601730✓*

இஸ்ரவேல் மக்களின்முதல் குடிசன மதிப்பின் படி (Census)ராணுவத்தில் பணிபுரியக்கூடிய தகுதி வாய்ந்தவர்கள் 603550.

இவர்களில் காலேப் யோசுவாவை தவிர மற்ற அனைவரும் 38 வருட வனாந்தர வாழ்க்கையில் மரித்துப் போனார்கள்.

38 வருடங்களுக்குப் பிறகு
இரண்டாவது குடிசன மதிப்பில் ராணுவத்தில்‌ போர் புரிய தகுதி உள்ளவர்கள் 601730.

இந்த‌ 601730 நபர்கள் முதலில் சொல்லப்பட்ட 603550 பேர்களின்
சந்ததியார்.

இந்த 601730 பேர்கள் எகிப்து தேசத்திலே அடிமைகளாக வாழாதவர்கள்.
எகிப்தியர்களின் கொடுமைகளை, சித்திரவதைகளை, எந்த பாடுகளையும் சகிக்காத வர்கள். அவமானங்களை அனுபவிக்காதவர்கள்.
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானுக்கு செல்லும்படியான‌ நேரடி அழைப்பைப் பெறாதவர்கள்.
இவர்கள் வனாந்தரத்தில் பிறந்தவர்கள். ஆனால் பாலும் தேனும் ஓடுகிற கானானை சுதந்தரித்துக் கொண்டவர்கள்.

எகிப்து தேசத்திலே கஷ்டங்களையும் அவமானங்களையும் சகித்தவர்கள். கானானுக்குள் நுழைய முடியவில்லை. காரணம்,

1. வாக்குத்தத்தங்களை பெற்றிருந்தாலும் இவர்கள் விசுவாசம் இல்லாத சந்ததியார்.

தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிச்சயமாக கொடுப்பார்‌ என்கிற நம்பிக்கை ,விசுவாசம் இல்லாமல் வாழ்ந்தவர்கள்.

2.அடுத்தது தேவன் நம்மை நடத்துகிற வழியை அறியாதவர்கள்.
தேவன் நடத்துகிற வழியின் முடிவில் அவர்‌ தமது சித்தத்தை நிறைவேற்றுவார் என்பதை அறியாதவர்கள்.

இறுதியாக
வழுவிப் போகிற இதயம் உள்ளவர்கள். அதாவது கர்த்தருடைய கற்பனைகளை விட்டு விலகிப் போகிறார்கள்.
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

விசுவாசிகளாகிய‌ நாமும் கூட பரலோக அழைப்பைப் பெற்றிருந்தாலும்
1. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் விசுவாசம், நம்பிக்கை ஆகிய இரண்டும் நமக்கு வேண்டும்.
2.கர்த்தர் நடத்துகிற வழியை புரிந்து கொள்ளும் ஆவிக்குரிய பார்வை வேண்டும்.நம்முடைய வழிகள் வேறு.அவரது வழிகள் வேறு.

3. எந்த நிலையிலும் கர்த்தருடைய கற்பனைகளை விட்டு விலகாத மன உறுதி வேண்டும்.

வனாந்தரத்தில் மரித்த
603548 பேருடைய வாழ்க்கை, ஆவிக்குரிய வனாந்தர வாழ்க்கை, வாழும்‌ நமக்கு ஒரு மிகப்பெரிய பாடம்.
புதிய திராட்சை ரசத்தை புதிய துருத்தியில்தான் ஊற்ற வேண்டும்.
படிக்க 95 வது சங்கீதம்
.எண்ணாகமம் 1:24-46,26:51, லூக்கா 5:37.
எசேக்கியல் சண்முகவேல்