பெருமை
பெருமை என்கிற ஆயுதம் சாத்தானுடைய கைகளில் உள்ள மிகவும் வல்லமையுள்ள ஒரு ஆயுதம்.
இந்த இந்தக் கருவியைக் கொண்டு எப்படிப்பட்ட ஆவிக்குரிய பெரிய மனிதர்களையும் சாத்தான் எளிதாக வென்று விடுவான்.
பெருமை என்பது தேவனுக்கு சேர வேண்டிய கனத்தையும் மகிமையும் தானே அடைய நினைப்பது.
பெருமை என்பது ஒரு போலியான பாதுகாப்பை நம்மில் உருவாக்கும்.
பெருமையினால் வீழ்ந்த முதல் நபர் யார் என்றால் சாத்தான் தான்.
ஏசை14:12-15.
தன்னுடைய இனத்தைக் குறித்தோ அழகைக் குறித்து தேவன் தனக்கு அளித்த கிருபைகளைக் குறித்தோ அல்லது எதைக் குறித்தும் மேன்மை பாராட்டக் கூடாது.
கடவுள் எதிர்த்து நிற்கிற பெருமையோடு நாம் கூட்டணி அமைத்து விடக் கூடாது. பெருமையினால் பாபேல் கோபுரம் விழுந்தது.
பெருமைதான் நாம் மேற்கொள்ள வேண்டிய இறுதி பகைவன்.
பெருமைகளிலே மிகவும் மோசமான பெருமை ஆவிக்குரிய பெருமைதான்.
தேவன் தன்னை பயன்படுத்திய காரியத்தைக் குறித்து, தனக்கு அளித்த கிருபைகளை குறித்து, தேவன் தனக்கு அளித்த உயர்வைக் குறித்து மனதிற்குள் மேன்மை பாராட்டாத ஆவிக்குரிய மனிதர்கள் இந்த உலகில் மிக மிகக் குறைவு.
பெருமை என்பது நம்முடனே 24 மணி நேரமும் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு மறைமுகமான, மறைந்து நின்று நம்மை விட்டுப் பிரியாத ஒரு ஆயுதம் என்பதை மறந்து விடக் கூடாது.
பெருமையுள்ள எவருக்கும், அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாய் இருந்தாலும் அவர்களுக்கு எதிராகத் தேவன் எதிர்த்து நிற்கிறார் என்கிற எச்சரிப்பை கவனத்தோடு பின்பற்ற வேண்டும்.
இறுதியாகப் பெருமையைக் குறித்து ஒரு சில வார்த்தைகள்
இந்தக் கருத்தை நான் எழுதுவதற்காக மிகவும் வருந்துகிறேன். முழுநேர பணியாளர்கள் மத்தியில் நான் விசுவாசிகளைவிட ஒருபடி உயர்ந்தவன் என்கிற பெருமையைபோல மிகவும் தந்திரமான ஆபத்தான வேறு ஒரு ஆவிக்குரிய பெருமையை கிறிஸ்தவ உலகத்தில் நான் பார்க்கவில்லை.இது ஒரு தேவனுடைய சரிமாகிய சபையில் சாத்தான் உருவாக்கும் பிரிவினையாகிய பெருமை.
Pride is one of Satan’s chief weapons in his battle against the Lord and His people.
Pride is the ground in which all the other sins grow, and the parent from which all the other sins come .William Barclay