துர் உபதேசங்களை முளையிலேயே கிள்ளியெறிய பவுலுடைய நிதானிக்கும் அறிவு நம்முடைய போதகர்களுக்குத் தேவை.
துர் உபதேசங்களை முளையிலேயே கிள்ளியெறிய பவுலுடைய நிதானிக்கும் அறிவு நம்முடைய போதகர்களுக்குத் தேவை.
பவுலடியார் தேவனுடைய மிகப் பெரிய அப்போஸ்தலர். 14 க்கும் மேலான சபைகளை உருவாக்கியவர் புதிய ஏற்பாட்டு நூல்களில் 13கடிதங்களில் அவர் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. அவர் எழுதிய கடிதங்களில் அநேகமாக எல்லா கடிதங்களும் மிகப் பெரிய நகரங்களில் உள்ள சபைக்குத்தான் எழுதினார். (கொலோசெ பட்டணத்தில் உள்ள சபையைத் தவிர) குறிப்பாக ரோமாபுரி எபேசிய போன்ற இடங்கள் சிறப்பு மிக்க நகரங்கள். ஆனால் கொலோசெ பட்டிணம் மிகச் சிறிய முக்கியத்துவம் இல்லாத ஒரு இடம்.
According to Lightfoot an English theologian says “Colosse was the the most unimportant town to which Paulever wrote a letter”
பவுலடியார் ஏன் ஒரு மிகச் சிறிய, முக்கியத்துவம் இல்லாத இடத்தில் உள்ள ஒரு சபைக்கு மிகச் சிறந்த, இயேசுவின் சிறப்பை, மேன்மையை புதிய ஏற்பாடு நூல்களிலே மிக அதிகமாக விளக்கிக் கூறுகின்ற ஒரு நிருபத்தை எழுத வேண்டும்?
அதுவும் தான் பார்க்காத, கட்டாத, சந்திக்காத ஒரு சபைக்கு எழுத வேண்டும்?(கொலோ 2:1)
இதற்குக் காரணம் அந்தக் கொலோசெ பட்டணத்தில் உள்ள சபையில் ஊடுருவிய துர் உபதேசமும் அதனால் கிறிஸ்தவத்திற்கு நேர்ந்த அபாயத்தைப் பவுல் நிதானித்து அறிந்த புரிதல்தான். கொலோசெ சபையில் பலவித துர் உபதேசங்கள் காணப்பட்டாலும் முக்கியமாக Gnosticism என்கிற உபதேசம் சபையை ஊடுருவிப் பாழாக்கியது
அதன்படி இயேசு கிறிஸ்து தரும் இரட்சிப்பைவிட மேலான ஒன்று தேவை என்றும், அதைப் பெற்றுக்கொள்ள தனிப்பட்ட ஒரு secret knowledge தேவை என்றும், இயேசு எல்லாவற்றையும் மேன்மை அடைந்தவர் இல்லை என்றும் போதிக்கிறது.
இந்த உபதேசத்தின் ஆபத்தை உணர்ந்துதான் பவுலடியார் கொலோசிய சபைக்கு இயேசு கிறிஸ்துவே மேலானவர் என்றும், அவர் போதுமானவர் என்றும், கடிதம் எழுதுகிறார். இப்படி கடிதம் எழுதிச் சபையை எச்சரித்துக் கொலோசெ சபையை மட்டுமல்ல முழுகிருஸ்துவத்தையும் காப்பாற்றினார்.
(.ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது. மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.” கொலோ 2:9.10)
நான் நிறுவாத சபைக்கேன் கடிதம் எழுத வேண்டும்? என்று எண்ணாமல் தனுக்குள்ள அப்போஸ்தல அதிகாரத்தைப் பயன் படுத்தி கடிதம் எழுதுகிறார்.
அன்றைக்கு அவர் அப்படி கடிதம் எழுதாமல் இருந்திருந்தால் கிறிஸ்துவத்தை காப்பாற்றியிருக்க முடியாது.
இன்றைக்கு சபையைப் பாழாக்குகின்ற அநேக உபதேசங்களை ஆரம்ப நிலையிலேயே சபை போதகர்கள், தலைவர்கள் வேதபண்டிதர்கள் நிதானித்துப் புரிந்து தடுத்திருந்தால் எவ்வளவு நலமாய் இருந்திருக்கும்.
ஆரோக்கியமான உபதேசங்களை போதிக்கும் தலைவர்களை வேத பண்டிதர்களை மிகப் பெரிய, வளர்ந்த சபைகள் புறக்கணித்து அவர்களைப் பயன்படுத்தத் தவறியதும் வருந்தத்தக்கது.
தவறான போதனைகளை நிதானித்துஅறியும் சபை தலைவர்களும், ஆரோக்கியமான உபதேசங்களை போதிக்கும் வேத பண்டிதர்களும் இன்றய தேவை.
செழிப்பின் சுவிசேஷத்தை பேசும் பிரசங்கிகளை பயன்படுத்தும் சபைகள் ஆரோக்கியமான உபதேசங்களை போதிக்கும் வேத பண்டிதர்களையும் பயன்படுத்த வேண்டும்.
It is the duty to the Body of Christ .It is very dangerous for the body of Christ to boycott the Bible teachers who preach sound doctrine
The church should not neglect the teaching ministry. and at the same time the church leaders should have the discerning
spirit to forewarn the unBiblical doctrine.
எசேக்கியேல் சண்முகம்