ஆலயங்களில் காணப்படும் சிலைகளைவிட நம் உள்ளத்தில் காணப்படும் சிலைகளே நமக்கு மிகவும் ஆபத்தானவைகள்.
ஆலயங்களில் காணப்படும் சிலைகளைவிட நம் உள்ளத்தில் காணப்படும் சிலைகளே நமக்கு மிகவும் ஆபத்தானவைகள்.
ஆவிக்குரிய வாழ்க்கையை சீரழிப்பவைகள்.
கடவுளுக்குரிய இடத்தை எது ஆட்கொள்கிறதோ கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய கனத்தையும் மகிமையும் ஆராதனைகளையும் எவைகள் பறித்துக் கொள்கிறது அவைகளை சிலைகள்.
Idols in the heart are far more dangerous than idols in the temple.
கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய நேரத்தைக் கொடுக்காமல் அவருடைய வசனத்தைத் தியானிப்பதற்கு சரியான நேரத்தை ஒதுக்காமல் அதற்குப் பதிலாக அவருடைய ஊழியங்களில் ஈடுபடுவது கூட ஒரு சிலை வழிபாடு என்று நான் நம்புகிறேன்.
ஊழியங்கள் அவசியம். ஆனால் அவைகள் தேவன் நாம் வைத்திருக்கும் உறவையும் அவருடைய வசனத்தைத் தியானிப்பதற்கான நேரத்தையும்அவைகள் தட்டிப் பறித்து விடக் கூடாது.
நாம் அவருடைய ஊழியத்திற்காகச் செலவழிக்கும் நேரத்தைவிட அவரோடு உறவாடுவதற்காக நான் எடுத்துக் கொள்ள நேரங்கள் அதிக முக்கியமானவைகள்.
நான் அவரோடு செலவழிக்கும் நேரங்களில் அடிப்படையில் தான் நம்முடைய ஆவிக்குரிய தரம் வெளிப்படும்.
அதன் மூலமாக நம்முடைய பிரசங்கத்தில் எழுத்துக்களில் அவருடைய வார்த்தை வெளிப்படும். நம்முடைய அழைப்பிற்கு ஏற்றபடி நாம் நேரங்களை ஒதுக்க வேண்டும். குறிப்பாகப் போதிக்கிறவர்கள் எந்த அளவுக்குத் தேவனுடைய சமூகத்தில் காத்திருந்து அவருடைய வசனத்தைத் தியானிக்கிறார்களோ அந்த அளவுக்கு அவருடைய பிரசங்கத்தில் தேவனுடைய வல்லமை வெளிப்படும். இல்லாவிட்டால் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம்.
ஊழியம் என்பது ஒரு மந்திரப் பெட்டி அல்ல.
அனேக நேரங்களில் நம்முடைய ஊழியங்கள் கூட நம்மைக் காப்பாற்றாது அதே நேரத்தில் தேவனோடு நாம் வைத்திருக்கும் உறவு சரியான முறையில் இருக்கும் என்றால் அந்த உறவு நிச்சயம் நம்மைக் காப்பாற்றும்.
இந்தத் தவறை தான் அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்கள் செய்தார்கள். கர்த்தருடைய வழிகளின் நடவாமல் உடன்படிக்கைப் பெட்டி நம்மைக் காப்பாற்றும் என்று அதைப் போர்க்களத்துக்கு எடுத்துச் சென்றார்கள்.விளைவு வரலாற்றில் என்றைக்கும் இல்லாத வகையில் அது பிடிக்கப்பட்டு புற இனத்தார் கைகளில் சிக்கிக் கொண்டது.
ஊழியம் என்பது தேவன் தேவனுக்காக நாம் செய்யும் வேலை.
கடவுளோடு நாம் உறவாடும் நேரம் என்பது அவர் நமக்குள் செய்யும் ஊழியம்.
கடவுளோடு உறவாடும் நேரத்தைக் கடவுளுக்காகச் செய்யும் ஊழியங்கள் எடுத்துக் கொள்ளும்போது அது சிலை வழிபாடாக மாறிவிடுகிறது. பவுலடியார் கூறிய அந்த வார்த்தைகள் நமக்கு மிகப்பெரிய motivational word ஆக இருக்கிறது.
"நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் ".
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:4.
இது முழுஊழியக்காரர்களுக்கு மட்டுமல்ல மறுபடியும் பிறந்த ஊழியத்தில் ஆர்வம் உள்ள எல்லோருக்கும் பொருந்தும். எனவே இந்தச் சிலை வழிபாட்டைக் குறித்து எச்சரிக்கையாக இருப்போமாக.
எசேக்கியேல் சண்முகவேல்