கடவுளை அவசரப்படுத்தக் கூடாது.
கடவுளை அவசரப்படுத்தக் கூடாது.
சாமுவேல் தீர்க்கதரிசியின் இறுதி நாட்களில் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை ஆளுகை செய்வதற்கு அரசன் வேண்டுமென்று கேட்டபொழுது அதற்குத் தேவன் சொன்ன பதில்
"அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத் தான் தள்ளினார்கள்."என்பதே
1 சாமுவேல் 8:7
யூத ஜனங்கள் கடவுளை நிராகரித்தது இதில் முதல் தடவை அல்ல.
மோசே சீனா மலையிலிருந்து இறங்கி வருவதற்கு காலதாமதமானபொழுது அவர்கள் ஆரோனை நோக்கி
" எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்.
யாத்திராகமம் 32:1
இதை முன்பே அறிந்துதான் தேவன்
" உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்."என்று சொல்லி இருந்தார்.
ஆதியாகமம் 17:6
யாக்கோபு தன்னுடைய 12 குழந்தைகளில் யூதாவை குறித்து சொல்லும்போது
"செங்கோல் யூதாவைவிட்டு நீங்காது" என்று தீர்க்கதரிசன உரைத்தார்.
Judah was the Kingly tribe.
அவர் யூத யூதா கோத்திரத்தில் பிறந்த தாவீதை யூதர்களின் அரசனாக்க முன்குறித்திருந்தார்.
ஆனால் யூத ஜனங்கள் தங்களுக்கு ஒரு அரசர் வேண்டும் அதுவும் உடனடியாக வேண்டும் என்று கேட்டபடியினால் சவலை தேவன் தேர்ந்தெடுத்தார். சவுலின் தெரிந்தெடுப்பு தேவனுடைய பரிபூரண சித்தம் அல்ல.
யூத ஜனங்கள் தங்களுக்கு ஒரு அரசனை தாரும் என்று கேட்டது தவறு அல்ல. தவறு எதுவென்றால் அதை உடனடியாகத் தரும்படியாகக் கேட்டதுதான்
இதைத்தான் பல நூற்றாண்டுகளுக்குப் பின்வந்தததத ஓசியா இதைப் பற்றி
இவ்வாறுஎழுதுகிறார்.
"எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை இரட்சிக்கும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே?
நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன்".
ஓசியா 13:10,11
நம்முடைய விருப்பங்களை இறைவனிடத்தில் கேட்பதில் தவறில்லை.
ஆனால் அந்த விருப்பங்கள் உடனடியாக நிறைவேற வேண்டுமென்று ஆண்டவரிடத்தில் போராடுவது, ஆண்டவரை நிர்பந்தம் பண்ணுவது, அதற்காக ஆண்டவர் கோபித்துக் கொள்வது போன்ற காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் தேவையற்ற குழப்பங்களை, இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.
தேவன் நமது ஜனங்களுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை என்னவென்றால் நாம் விரும்புகிற வழியிலேயே நாம் ஆவிக்குரிய ஓட்டத்தை ஓட அனுமதிப்பதுதான்.
"The greatest judgement the God can give us is to let us have our own way" W.W.Wirrdbe
இதுதான் நம்முடைய வாழ்க்கை சந்திக்கும் மிகப்பெரிய இழப்பு.
தேவனிடத்தில் போராடி போராடி நாம் பெற்றுக்கொள்ள விரும்பும் ஆசிர்வாதங்களை விட நம்முடைய விருப்பங்களை, ஆசைகளை அவருடைய கரத்தில் ஒப்புக் கொடுத்து அவர் அனுமதிக்கிற நேரத்தில் நாம் பெரும் ஆசீர்வாதங்கள் மிகச் சிறப்பானவை.
நம்முடைய தேவைகளை நம்மைவிட மிக நேர்த்தியாக, சரியாகப் புரிந்து கொண்டவர் கடவுள் மட்டுமே. அவர் கொடுக்கும் வரை நாம் காத்திருப்பது தான் நமக்கு நல்லது. கடவுளிடம் 'fast food' என்பதெல்லாம் கிடையாது சமைத்த நல்ல உணவைத்தான் அவர் நமக்கு தருவார்.
எசேக்கியேல் சண்முகவேல்