நான் விரும்பும் மேய்ப்பர்.
1.எந்த மேய்ப்பர் தன் விசுவாசிகளை உண்மையாகவே தன் குடும்பமாக நினைக்கிறாரோ அவரே என் மேய்ப்பர்.
2.எந்த மேய்ப்பர் ஊழிய காரியங்களில் விசுவாசிகளுடைய ஆலோசனையைக் கருத்தில் கொள்வாரோ அவரே என் மேய்ப்பர்.
3.எந்த மேய்ப்பர் விசுவாசிகளைப் போலவே நானும் சபையில் ஒரு உறுப்பினர் என்று எண்ணுகிறாரோ அவரே என் மேய்ப்பர்.
4.எந்த மேய்ப்பர் நான் விசுவாசிகளைவிட ஒரு படி உயர்ந்தவன் என்று எண்ணத்தில் கூட நினைக்காமல் இருக்கிறாரோ அவரே என் மேய்ப்ர்.
5.எந்த மேய்ப்பர் சபை தன்னுடைய சொத்து அல்ல அது விசுவாசகளின் சொத்து என்று எண்ணுகிறாரோ அவரே என் மேய்ப்பர்.
6. எந்த மேய்ப்பர் தகுதியுள்ள விசுவாசிகளைத் தன் குடும்பத்தில் உள்ள நபர்களை எப்படி பயன்படுத்துகிறாரோ அவர்களைப் போல விசுவாசிகளையும் உழியத்தில் பயன்படுத்துகிறாரோ அவரே என் மேய்ப்பர்.
7. ஒரு மேய்ப்பர் எப்படி தகுதி இல்லாத விசுவாசிகளை ஊழியத்தில் நிராகரிக்கிறாரோ அதைப் போலத் தகுதி இல்லாத குடும்ப நபர்களையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் பயன்படுத்த மறுக்கிறாரோ அவரே என்று மேய்ப்பர்.
8. எந்த மேய்ப்பர் தன் சபையை இறுமாப்பாக ஆளுகை செய்யாமல் இருக்கிறாரோ அவரே என் மேய்ப்பர்.
9. எந்த மேய்ப்பர் தன்னுடைய ஆத்மாக்களுக்கு இறைவனிடத்தில் கணக்குக் கணக்கு கொடுப்பவராகத் தன்னை கருதுகிறாரோ அவரே என் மேய்பர்.
10. எந்த மேய்ப்பர் நான்தான் ஆத்துமாக்களுக்கு உத்திரவாதி என்று மிரட்டாமல் இருக்கிறாரோ அவரே என் மேய்ப்பர்.
இன்றைக்கு பெரும்பாலான பெந்தேகோஸ்து சபைகளில் போதகரின் ஆதீனத்தில் தான் சபைகள் இயங்குகின்றன. எனவே போதகரைப் பற்றிய சிந்தனை விசுவாசியில் உள்ளத்தில் மாற வேண்டும். வேதத்தின் அடிப்படையில் போதகர்கள் என்பவர் யார் விசுவாசிகள் என்பவர்கள் யார் என்ற சரியானசிந்தனை ஏற்பட்டாலொழிய இந்தச் சபைகளில் எழுப்புதல் என்பது வெறும் கனவே.எசேக்கியேல் சண்முகவேல்