Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

கடவுள் ஏன் யூத ஜனங்களுக்கு மன்னர் ஆட்சியை அனுமதிக்க தயங்கினார்?

மோசே மரித்தபிறகு இஸ்ரவேல் ஜனங்களை யோசுவாவும், அதற்குப் பிறகு நியாயாதிபதிகளும் வழிநடத்தினார்கள்.

இதுதான் அவர்களைக் குறித்த தேவனுடைய சித்தம்.
இந்த முறையின்படி கடவுளே அவருடைய காண முடியாத ராஜாவாக(invisible king)செயல்பட்டார்.

ஆனால் இந்த முறையை இஸ்ரவேல் ஜனங்கள் விரும்பவில்லை.
உலக மக்களின் ஆளுகையின் வழியில் அவர்கள் தங்களை வழிநடத்த அரசர்கள் ஆளுகின்ற முறையை விரும்பிக் கேட்டுக் கொண்டார்கள்.

இது கடவுளுக்கு வருத்தமாக இருந்தாலும் யூதர்கள் கேட்டுக்கொண்டபடி அதை அவர்களுக்கு அனுமதித்தார்.

கடவுள், அரசர்கள் ஆளுகின்ற முறையை அனுமதிக்காமல் இருந்ததற்கு வேறொரு காரணம் இருந்தது.

இதை 1சாமு 8:10-22
வரை உள்ள வசனங்களில் பார்க்கலாம்.
இன்றைய வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் மன்னர் ஆட்சி முறையை நடைமுறைப்படுத்துவதால் இஸ்ரவேல் அதிகமாக வரிகள் செலுத்த வேண்டியது இருக்கும்.

Establishment charges for establishing a dynasty.

அரசரைச் சார்ந்து அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் ராணுவத்திற்கும் உண்டாகக்கூடிய நிர்வாகச் செலவுகள் அனைத்தும் மக்களால் சரி செய்யப்பட வேண்டும். இது காலப்போக்கில்மிக அதிகமாகக் காணப்பட்டது. இது சாலமனுடைய ஆட்சி காலத்தில் உச்சத்தை தொட்டது.
மக்கள் வரி செலுத்த முடியாமல் விழி பிதுங்கினார்கள்.

கீழ்க்கண்ட வசனம் அது ஒரு உதாரணம்.

“உமது தகப்பன் எங்கள்மேல் பாரமான சுமையை வைத்தார். ஆனால் இப்பொழுது நீர் அவர் எங்கள்மேல் வைத்த கடினமான உழைப்பையும், பாரமான சுமையையும் இலகுவாக்கும். அப்பொழுது நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம்” என்றனர்.
1 இராஜாக்கள் 12:4.

கடவுள் இதையெல்லாம் முன் குறித்துதன் ஜனங்களை எச்சரித்த போதும் அதற்கு அவர்கள் செவிமடுக்கவில்லை.

ஒருவேளை இதனால் வரும் கஷ்டங்களை மன்னராட்சியை எங்களுக்குத் தாரும் என்று கேட்ட சந்ததியர் அதை அனுபவிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் பின்னால் வந்த சந்ததியார் அதை அனுபவித்து அரசனை நோக்கி நோக்கிக் கதறினார்கள்.

நம்முடைய வாழ்க்கையில் கூடத் தேவனுக்கு பிரியம் இல்லாத காரியங்களைப் போராடி பெற்றுக்கொள்ளும்போது அதனுடைய தீங்கை நாம் தற்போது உணராமல் இருக்கலாம் அதை உணரக்கூடிய காலம் ஒன்று உருவாகும். நம்முடைய சந்ததியார் அதை உணரலாம்.
அவர்கள் அந்தப் பாடுகளை அனுபவிக்கலாம்.
எனவே நமக்குத் தேவையான ஒரு காரியத்தை விரும்பிக் கேட்டு அதைத் தேவன் நிராகரிக்கும்பொழுது வேத வசனத்தின் மூலமாக அப்பொழுது தேவன் பேசும் எச்சரிப்புகளை நாம் புறம்பே தள்ளக் கூடாது.

அப்படி நாம் நிராகரித்தால் பல நேரங்களில் ஒருவேளை நாம் தப்பித்துக் கொள்வோம். ஆனால் நம்முடைய சந்ததி நிச்சயம் பாதிக்கப்படும்.
உதாரணமாக
நம்முடைய குடும்பக் கவுரவத்திற்காகத் தற்காலிக பலன்களுக்காக நாம் பிறந்த ஜாதிக்காக இனத்திற்காக நம்முடைய பிள்ளைகளுடைய படிப்பைக் குறித்தும் அவர்களுடைய திருமணத்தைக் குறித்தும் பிள்ளைகளை நிர்பந்தம் பண்ணி எடுக்கும் முடிவுகள்பின் நாட்களில் நம் பிள்ளைகள் தேவனுடைய சித்தத்தை பரிபூரணமாக நிறைவேற்ற முடியாமல் செய்துவிடும்
கடவுள் தாமே இதைப் பற்றிய புரிதலை நமக்குத் தருவாராக
‌ எனவே நம்முடைய விருப்பத்தைத் தேவனிடத்தில் கேட்கும்பொழுது பின் நாட்களில் அது நம்முடைய பிள்ளைகளைப் பாதிக்குமா என்கிற அடிப்படையில் நாம் எதையும் தேவனிடத்தில் கேட்க வேண்டும்.
பெற்றோர்களுடைய கடமை என்பது ஏதோ இந்த உலகத்திற்கு உரிய நன்மைகளை நம்முடைய பிள்ளைகளுக்கு அளிப்பது மட்டுமல்ல நம்முடைய குழந்தைகள் எதிர்காலத்தில் ஆவிக்குரிய சந்ததியாக வளர்வதற்கு நாம் வாழ்கின்ற இந்தக் காலத்திலே நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். Ezekiel Shanmugavel