சவுலுடைய ஆரம்ப வாழ்க்கை மிகவும் சிறப்பானது.
1.ஒரு தாழ்மை உள்ள மனிதனாகக் காணப்பட்டான்.
1சாமு9:21
2. தன்னை உலகத்திற்கு அடையாளம் காட்டாத நபராக இருந்தார் 1சாமு10:16
3. தான் அரசனாக அபிஷேகம் பண்ணப் பட்டபோதிலும் அந்தப் பொறுப்பை எடுப்பதற்கு தயங்கி தன்னை மறைத்துக் கொண்டான்.10:22.
இந்தக் குணங்கள் எதைக் காட்டுகிறதுது என்றால் அவன் இயற்கையிலேயே உலகத்திற்கு தன்னை அடையாளம் காட்ட விரும்பாதவனாகக் காணப்பட்டான்.
இவனுடைய வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும்பொழுது அரசனாக அபிஷேகம் பண்ண பட்டவுடனே
இறைவன் அவன் இருதயத்தை மாற்றினார்.
1 சாமுயேல் 10:9
காரணம்
கடவுளின் ஆவியானவர் வல்லமையுடன் அவன்மேல் இறங்கினார். அவன் வித்தியாசமான மனிதனாய் மாறினான்.
1 சாமுயேல் 10:6.
கடவுளின் ஆவியானவர் அவன்மேல் இறங்கின போதிலும் அவனுக்கு வேறொரு இருதயத்தை கடவுள் கொடுத்தபோதிலும் அவனுடைய குணநலன்கள் முற்றிலும் மாறவில்லை.
இறுதியில் அவன் தற்கொலை செய்து கொண்டான்.
காரணம் தேவன் சொன்ன வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவில்லை, தானே ஆசாரியனாகத் தன்னை காண்பித்துக் கொண்டான், தாவீது மேல் காரணம் இல்லாமல் பழிவாங்க முயற்சி செய்த காரியம். இப்படி அடுக்கடுக்காய் பாவங்களைத் தொடர்ந்து செய்து தேவன் தன்னை விட்டுக் கடந்து போனதை அறியாமல் பல ஆண்டுகள் வாழ்ந்தான்
இதில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
அவனிடத்தில் கடவுளுடைய ஆவியானவர் இறங்கிய நோக்கம் அவனுக்குத் தேவன் அளித்த ஊழியத்தை அல்லது பணியை நிறைவேற்றுவதற்காகத் தான்.
"He was God 's man officially. But he was not a true believer."William MacDonald
இது போன்ற பல நிகழ்வுகள் பழைய ஏற்பாட்டில் ஒரு சில மனிதர்கள் வாழ்க்கையில் நடைபெற்றுள்ளது.
யாத்31:3, எண்ணா11:17,25,நியா6:34,14:6,நெகோ9:20,ஏசை61:1,எசேக2:2,மீக3:8.
பழைய ஏற்பாட்டில் ஒரு சில நபர்கள்மேல் தேவனுடைய ஆவியானவர் இறங்கிய நோக்கம் அவர்கள் தேவன் அவர்களுக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றுவதற்காகத்தான்.
அந்தப் பணி முடிந்ததும் கடவுளின் ஆவியானவர் அவனை விட்டுக் கடந்து போய் விடுவார்.
ஆனால் புதிய ஏற்பாட்டில் அப்படி அல்ல.
நமக்குப் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்ட நோக்கம் அவருடைய ஊழியத்தை செய்வதற்காகவும் இயேசு கிறிஸ்துவை போல் நாம் மாறுவதற்காக அதற்கு வேண்டிய சகல கிருபைகளையும் பெற்றுக் கொள்வதற்காக.
நான் மறுபடியும் பிறந்த நாள் முதல் மரிக்கும் நாள்வரை பரிசுத்த ஆவியானவர் நம்மில் தங்கி நம்முடைய வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பார்.
இதுதான் பழைய ஏற்பாட்டில் கர்த்தருடைய ஆவியானவர் மனிதன் மேல் இறங்குவதற்கும் புதிய ஏற்பாட்டில் ஒரு மனிதன் ஆவியினால் பிறப்பதற்கும் உள்ள வித்தியாசம்.
பழைய ஏற்பாடு காலம் தேவனுடைய பிரமாணங்களில் காலம்.
புதிய ஏற்பாட்டு காலம் பரிசுத்த ஆவியானவரின் காலம்.
எசேக்கியேல் சண்முகவேல்