Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

எபி 11:13 ன் உன்மையான அர்த்தம் என்ன?
எபி 11:13 ன் உன்மையான அர்த்தம் என்ன?

"இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்'”

தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணி ஆணையிட்டுக் கொடுத்த ஆசீர்வாதம் என்றால் என்ன?

இதைப் புரிந்து கொள்ள ஆதி. 22:16-18 மற்றும் கலா. 3:16 ஆகிய இந்த இரண்டு வார்த்தைகளையும் இணைத்து நீங்கள் பார்க்க வேண்டும்.

இதில் சொல்லப்பட்ட மூன்று பதங்களைக் கவனிக்க வேண்டும்

.

1.உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன்.

2. உன் சந்ததிக்குள் பூமியில் உள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.

3.என்பேரில் ஆணையிட்டேன்.



“உன் சந்ததி” என்று இந்த இடத்தில் சொல்லப்படுவது இயேசுவினுடைய சந்ததியைக் குறிப்பதாகும்.

இதுகுறித்து பவுல் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில்(3:16) தெளிவாக விளக்குகிறார்.

. “ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கென்று அநேகரைப் பற்றிச் சொல்லாமல், உன் சந்ததிக்கென்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே”

இவர்கள் கிறிஸ்துவின் மூலமாகப் பிறக்கும் ஒரு புதிய ஆவிக்குரிய சந்ததி.

ஆபிரகாமின் சந்ததியில் திரித்துவத்தின் இரண்டாவது பகுதியான தேவகுமாரன் மனிதனாகப் பிறந்தார்.

இதற்குப் பிறகுதான் ஆதி 17:8 ல் சொல்லப்பட்ட" நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார். வாக்குத்தத்தத்தை கவனித்து பார்க்க வேண்டும்.

இந்தக் கானான்தேசத்தை ஆபிரகாம். ஈசாக்கு, யாக்கோபு, மற்றும் அவனுடய பிள்ளைகள் யாரும் அவர்கள் இருக்கும் வரை சொந்தமாகக் கொள்ளவில்லை.

சுமார் 500 ஆண்டுகள் கழித்துதான் ஆபிரகாமுக்கு பின்வந்த சந்ததி கானான் தேசத்தைச் சொந்தமாக்கி கொண்டார்கள்

.

ஆனால் அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட முழு கானான் தேசத்தை அவர்கள் அடையவே இல்லை/

The Hebrew nation never occupied all the land that had been promised to it

எபி 11:13 என்பது எதைக் குறிப்பது என்றால் அவர்களுடைய சந்ததி பெறப் போகிற கானான் தேசத்தைப் பற்றியது அல்ல.

தேவன் தம்முடைய குமாரனை உலகத்திற்கு அனுப்பி அவர் தங்களுடைய வம்சத்தில் பிறப்பார். அதன் மூலம் உலகத்திற்கு மிகப்பெரிய இரட்சிப்பு வரும் என்பதை அவர்கள் தூரத்திலிருந்தே கண்டு அனைத்து அதை நம்பி விசுவாசத்தில் மரித்தார்கள்.

இது முழுக்க முழுக்க ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை குறிக்கிறது. இதைத்தான் இயேசுகிறிஸ்து யூதர்களுக்கு "உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.



மோசேயும் இந்த ஆசிர்வாதத்தை தான் இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்தில் உள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.

உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களை எதிர் நோக்கி அவைகளை தூரத்திலே கண்டு அணைத்து அவர்கள் விசுவாசத்தில் மரிக்கவில்லை.

இதுதான் இந்தப் பகுதியின் உண்மையான விளக்கம்

நம் தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த ஆவிக்குரிய ஆசிர்வாதத்தை உலக ஆசிர்வாதத்தோடு இணைத்துக் கொச்சை படுத்தக் கூடாது

Ref – 1.THE DAILY STUDY BIBLE- THE LETTER TO THE HEBREWS” BY W.BARCLAY

1. AN EXPOSITION OF HEBREWS- A.W.PINK

2. AN EXPOSITION OF THE EPISTLE TO THE HEBREWS-JOHN BROWN

Ezekiel shanmugavel