Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

யேகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டி
யேகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டி இஸ்ரவேல் ஜனங்களை ஏமாற்றியதா?
கீழ்க்கண்ட வசனங்களைக் கவனமாகப் படிக்கவும்.1சாமு4:3-10

பெலிஸ்தியர் இஸ்ரவேலரை எதிர்கொள்ளும்படி தங்கள் படையை அணிவகுத்தார்கள். யுத்தம் பெருத்தபோது இஸ்ரவேலர் பெலிஸ்தியரால் தோற்கடிக்கப்பட்டார்கள். யுத்தகளத்தில் ஏறக்குறைய நாலாயிரம் இஸ்ரவேலரை பெலிஸ்தியர் கொன்றார்கள்.

இஸ்ரவேல் ஜனங்களின் இராணுவ வீரர்கள் முகாம்களுக்குத் திரும்பியபோது இஸ்ரவேலின் முதியவர்கள், “ஏன் இன்று யெகோவா பெலிஸ்தியருக்கு முன் எங்களைத் தோல்வியடைச் செய்தார்? யேகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீலோவிலிருந்து கொண்டுவருவோம். அது எங்களுடன் இருந்தால் பகைவரிடமிருந்து அது நம்மைத் தப்புவிக்கும்” என்றார்கள்.
எனவே மக்கள் சீலோவுக்கு ஆட்களை அனுப்பினார்கள். அவர்கள் கேரூபீன்களுக்கு நடுவில் அரியணையில் அமர்ந்திருக்கும் சேனைகளின் யேகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்தார்கள்.

அங்கே ஏலியின் இரு மகன்களான ஓப்னியும், பினெகாசும் இறைவனுடைய உடன்படிக்கைப் பெட்டியோடு வந்தார்கள்.

யேகோவாவினுடைய உடன்படிக்கைப்பெட்டி முகாமுக்குள் வந்தவுடன் நிலம் அதிரத்தக்கதாக இஸ்ரவேல் மக்கள் பெரிய சத்தமிட்டு ஆர்ப்பரித்தார்கள்.

அதே வேளையில்
பெலிஸ்தியர் இஸ்ரவேலரை எதிர்கொள்ளும்படி தங்கள் படையை அணிவகுத்தார்கள். யுத்தம் பெருத்தபோது இஸ்ரவேலர் பெலிஸ்தியரால் தோற்கடிக்கப்பட்டார்கள். யுத்தகளத்தில் ஏறக்குறைய நாலாயிரம் இஸ்ரவேலரை பெலிஸ்தியர் கொன்றார்கள்.

1சாமு 4:3-10.
இஸ்ரவேல் ஜனங்கள் ஏன் உடன்படிக்கைப் பெட்டியைப் போர்க்களத்துக்கு கொண்டு வர வேண்டும்.
காரணம் இதற்கு முன்பு யோசுவாவும் மோசேயும் அந்தக் காரியத்தைச் செய்தார்கள். படிக்க எண்ணா10:33-36,யோசுவா 3,4 மற்றும் ஆறாவது அதிகாரங்கள்.
யோர்தான் நதியைக் கடப்பதற்கு முன்பாக ஆசாரியர்கள் உடன்படிக்கை பெட்டியை எடுத்துக்கொண்டு முன்னதாகச் சென்றார்கள். அதுபோல வனாந்தரத்தில் பயணம் செய்த போதெல்லாம் பயணத்தின் முன்பாக உடன்படிக்கை பெட்டி முன்னதாகச் சென்றது.
மோசேயும் யோசுவாவும் செய்த அதே காரியங்களை இப்பொழுது இஸ்ரவேல் ஜனங்களின் மூப்பர்கள் செய்தார்கள்.
உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச் சென்றது யாரென்றால் ஏலியின் இரண்டு குமாரர்கள்.
ஏலியன் இந்த இரண்டு குமாரர்கள் ஆலயத்தில் பெண்களோடு தவறான உறவில் ஈடுபட்டவர்கள்.
இஸ்ரேல் ஜனங்கள் கர்த்தருக்கு கொடுக்கின்ற காணிக்கையை வெறுக்கும்படியான எண்ணத்தை உருவாக்கியவர்கள்.
கர்த்தரை அறியாதவர்கள்.
இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியைச் சுமந்தால் தேவன் எப்படி வெற்றியைத் தம் ஜனங்களுக்கு அளிப்பார்.?
இந்தச் சிந்தனை மூப்பர்களுக்கு வரவில்லை. இதுதான் தோல்வியின் முதல் காரணம். மூப்பர்கள் ஏலியின் புத்திரர்கள் மோசேயும் அல்ல யோசுவாவும் அல்ல என்கிற அடிப்படை சிந்தனை கூட அறியாமல் இருந்தது தான்.

இங்கே நாம் சிந்திக்க வேண்டிய அனேக காரியங்கள் உண்டு.

1. கடவுளுடைய வழிகளைப் பின்பற்றாதவர்கள் தம்மை பயன்படுத்தத் தேவன் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். This is called"using God". கடவுள் நம்மைப் பயன்படுத்த வேண்டும். நாம் அவரைப் பயன்படுத்த ஒருபோதும்முயற்சிக்கக் கூடாது

2. தேவனுடைய ஜனங்களுக்குத் தேவன் எப்படிப்பட்டவர், எப்படிப்பட்ட ஜெபங்களுக்கு தேவன் பதில் கொடுப்பார் என்பதைப் பற்றிய மிகவும் அடிப்படையான புரிதல் அவசியம்.

3. தேவனுடைய பிள்ளைகளை நடத்துகிறவர்கள், அவர்களுக்கு வழிகாட்டுகிறவர்கள், இவர்களின் வாழ்க்கையின் அடிப்படையிலே இவர்களைப் பின்பற்றுகிற தேவ ஜனங்களின் வெற்றி அமைந்திருக்கிறது.
விசுவாசிகள் எல்லோரையும் பவுலாகவும் பேதுருவாகவும் மார்ட்டின் லூத்தராகவும் நினைப்பதுதான் இன்றைய சபையின் மிகப்பெரிய பிரச்சனை.

4. கர்த்தருக்கு பிரியம் இல்லாத, கர்த்தருடைய வழிகளில் நடவாத, பாவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தலைவர்களைப் பின்பற்றி நாமும் நடப்போமென்றால் நமக்கும் தோல்வி நிச்சயம்.

தலைவருடைய வாழ்க்கை நம்முடைய கண்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்திருந்தும் அவர்களை நம்பி தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து நடப்பவர்களை என்னவென்று சொல்வது. இவர்களுக்கு ஒரு ஐயோ என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

5.எப்படிப்பட்ட அழகான ஜெபங்களை நாம் ஏறெடுத்தாலும், எவ்வளவு உயர்வான தேவனுடைய வாக்குத்தத்தங்களை பயன்படுத்தி ஜெபித்தாலும், எவ்வளவு விசுவாசத்தோடு ஜெபிப்பதாகக் காட்டிக் கொண்டாலும் நம்முடைய வாழ்க்கை தேவனுக்கு பிரியமாகக் காணப்படாவிட்டால் நமக்குக் கிடைப்பது சுழியமே.
உடன்படிக்கை பெட்டி என்பது ஒரு மந்திர சொல் அல்ல.
தேவனுடைய சமூகத்தைப் பற்றிய புரிதல் அவர்களுக்குச் சரியாக இருந்திருக்குமென்றால் தேவனுடைய உடன்படிக்கை பெட்டி அவர்களை விட்டுக் கடந்து சென்று இருக்காது. நாமும் கூடத் தேவனுடைய சமூகம் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து அதற்குத் தகுந்தபடி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாவிட்டால் நாமும் நம்மிடத்தில் தேவ சமூகம் இருப்பதாகக் கருதி கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வோம்.
Ezekiel shanmugavel