Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

ஆபிரகாம் தெரியாத 7 வார்த்தைகள்
“ஆதாம் சகலவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்"

இன்றைக்கு 3500 வகையான பாலூட்டிகளும், 8600 வகை பறவைகளும் 5500 வகையான ஊர்வன, நீர்நில வாழ்வனவைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அப்படியென்றால் ஆதாம் இருந்த காலத்தில் இதைவிட எவ்வளவு அதிகமாக விடப் பாலூட்டிகளும் பறவைகளும் ஊர்வன நீர்நில வாழ்வனவைகளும் இருந்திருக்கவேண்டும்என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

அவைகள் அத்தனையையும் ஆதாம் அழைத்துப் பெயர்களைச் சூட்டினான்

இந்த மண்ணில் பிறந்த மிகப் பெரிய அறிவாளி ஆதாம்தான். மிகச் சிறந்த ஞாபக சக்தி உள்ளவன்

Adam had tremendous vocabulary.

ஆனால் அவனுக்குத் தெரியாத 7 வார்த்தைகள்
1 மரணம்
2 நிர்வாணம்
3 சாபம்
4 வருத்தம
5 முள்
6 வியர்வை
7 பட்டயம்.
இந்த 7 வார்த்தைகளையும் ஆதாம் தன் வீழ்ச்சிக்குப் பிறகு தான் அறிந்துகொண்டான்.

ஆனால் இரண்டாம் ஆதாம் இயேசு கிறிஸ்து சிலுவையில் இந்த 7 சாபங்களையும் நீக்கி விட்டார் கொலோ 2:14
இதைப் போல்தான் நம் அகராதியில் கூட நாம் மறுபடி பிறப்பதற்கு முன், மறுபடி பிறப்பதற்கு பின், என்று பிரித்துப் பார்த்தால் பல வார்த்தைகள் சேரலாம், அதன் அர்த்தங்கள் மாறலாம் சேரலாம்.
பல வார்த்தைகள் நம்முடைய அகராதியில் இல்லாமலே இருக்கலாம்.

தேவையில்லாத வார்த்தைகள் ஒழிந்து கொண்டிருக்கும்.

எதுவுமே மாறாமல் இருந்தால் அது மறு பிறப்பின் அனுபவம் அல்ல.
எசேக்கியல் சண்முகவேல்