Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 சாமுவேல் புத்தகம் வேதபாடம் 6


சாமுவேல் தீர்க்கதரிசி ஏறக்குறைய 60 ஆண்டுகள் இஸ்ரேல் ஜனங்களை நியாயம் விசாரித்தார். சுமார் 500 ஆண்டுகள் நியாயாதிபதிகள் இஸ்ரவேல் ஜனங்களின் மேல் ஆவிக்குரிய அதிகாரத்தைச் செலுத்தினார்கள்.
சாமுவேல் தீர்க்கதரிசி தான் நியாயாதிபதிகளின் கடைசி நபர்.

அவருக்குப் பிறகு மன்னர் ஆட்சி முறை தொடங்கிவிட்டது. இஸ்ரேல் ஜனங்கள் தங்களை ஆளுகை செய்வதற்கு உலக மக்களைப் போலத் தங்களுக்கும் அரசாட்சி முறை வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
சாமுவேல் தாயின் பாலை மறந்த நாள் முதல் ஆசாரிப்பு கூடாரப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி இஸ்ரவேல் ஜனங்களை உண்மையும் உத்தமமுமாய் அவர்களுக்கு ஊழியம் செய்தார். ஒரு நிர்வாக அமைப்பு மாறுகின்ற அந்த வேளையில் தன் ஜனங்களை நோக்கி வைத்த அந்தக் கேள்விகள் மிகவும் ஆழமானவைகள்.

"இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண்செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்.
1 சாமுவேல் 12:3
ஒவ்வொரு தனிப்பட்ட விசுவாசியின் வாழ்க்கையிலும் தலைவர்கள் வாழ்க்கையிலும் இந்தச் சாட்சி முக்கியம்.
நாம் வாழ்ந்த ஆவிக்குரிய ஓட்டத்தை முடிக்கும் இறுதி காலத்தில் நாம் கடந்த வந்த பாதைகளை யோசிக்கும்பொழுது சாமுவேல் தீர்க்கதரிசியை போல மனநிறையுள்ள ஒரு சாட்சியை நாம் பெற வேண்டும்.

நான் எப்படி வாழ்ந்தோம், எப்படி நேர்மையாக இருந்தோம், எவ்வளவு பரிசுத்தமாக இருந்தும், எந்த அளவுக்கு நாம் கடவுளுக்கு நேர்மையாக ஊழியம் செய்தோம், எந்த அளவுக்குக் கையூட்டு வாங்காமல் நாம் அலுவலகத்தில் வேலை செய்தோம், எவ்வளவு தியாகம் இருந்தும், எந்த அளவுக்கு யாருக்கும் கெடுதல் செய்யாமல் இருந்தோம் என்பதற்கு
நம்முடைய மனசாட்சியே சரியான பதிலை நமக்குச் சொல்லும்.

நாம் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளைச் சாதிக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் நமது வாழ்க்கை தேவனுக்கு முன்பாக எப்படி இருந்தது என்பது தான் முக்கியம். இப்படிப்பட்ட மனநிறைவோடு நாம் நமது ஆவிக்குரிய ஓட்டத்தை முடிக்கத் தேவன் நமக்குக் கிருபை செய்ய வேண்டும். நம்மைக் கொண்டு ஆண்டவர் எவ்வளவு ஊழியங்களை செய்தார் என்பது முக்கியமில்லை. நாம் ஆண்டவருக்காக எப்படிப்பட்ட சாட்சி உள்ளவளாக வாழ்ந்தோம் என்பதே முக்கியம்.


நான் பாவம் செய்தேன் என்று என்னைக் குற்றம் சாட்டி நிரூபிக்க உங்களில் எவனால் முடியும்? (யோவா8:46) என்று இயேசு கிறிஸ்து சவால் விட்டது போல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சாமுவேல் தன் சாட்சியைக் குறித்து சவால் விட்டது நமக்கு ஒரு மிகப்பெரிய பாடம்.

நாம் வாழ்கின்ற காலத்தில் எவ்வளவு பாடுகள் கஷ்டங்கள் இருந்தாலும் நம்முடைய நேர்மையையும் பரிசுத்தத்தையும் உத்தமத்தையும் சமரசம் செய்து கொள்ள ஒருக்காலும் முயற்சிக்கக் கூடாது.

வணிக நிறுவனங்களில் ஒவ்வொரு நிதிஆண்டு முடிவிலும் Balance sheet தயாரிப்பார்கள்‌.
‌ தங்களுடைய நிறுவனத்திற்கு எவ்வளவு Assets இருக்கிறது எவ்வளவு Liability என்று கணக்கு பார்ப்பார்கள். அதுபோல நாமும் இப்படி ஆவிக்குரிய ஓட்டத்தின்கணக்கை பார்த்தால் நமக்கு நான் எத்தனை பேருக்கு Assets ஆக இருந்தோம் எத்தனை பேருக்குLiability ஆக இருந்தோம் என்று தெரியும்.
சாமுவேலை போல நம்முடைய ஆவிக்குரிய ஓட்டத்தை ஓட கர்த்தர் கிருபைநமக்குத் தருவாராக. ezekiel shanmugavel .