Extra luggage in our spiritual life.
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுக் கடந்து வந்தபிறகு அவர்கள் அதிக நாட்கள் தங்கிய இடம் சீனாய்மலை.
இந்த இடத்தில் ஏறக்குறைய ஒரு வருடம் தங்கினார்கள்.
இங்குதான் ஆசரிப்பு கூடாரம் உருவாக்கப்பட்டது. லேவியர் ஆசாரியர்களின் பணிகள் வரையறுக்கப்பட்டது.
வானத்திலிருந்து மன்னா பொழியப்பட்டு இஸ்ரவேல் ஜனங்கள் அதை உணவாகச் சாப்பிட்டார்கள்.
தேவனுடைய பாதுகாப்பில் சுகமாகத் தங்கினார்கள்.
இதற்குப் பிறகு அவர்கள் பிரயாணப்பட்டு போகிற நிகழ்வுகளைக் குறித்து எண்ணாகம புத்தகம் 10:11முதல்12:16ல் சொல்லப்பட்டுள்ளது.
இஸ்ரவேலர் எகிப்தை விட்டுப் புறப்பட்டபோது ஏறக்குறைய 20 லட்சம் பேர் சென்றனர்.
எகிப்தை விட்டுப் புறப்பட்ட மூன்றாவது நாளிலேயே தண்ணீருக்காக முறுமுறுத்த யூதர்கள் இப்பொழுது கானானை நோக்கிப் புறப்பட்ட மூன்றாவது நாளில் இறைச்சிக்காக முறுமுறுத்தார்கள்.
எகிப்தில் தாங்கள் உண்ட உணவைக் குறித்து இச்சை கொண்டார்கள்.
எகிப்தில் சாப்பிட்ட மீன், வெள்ளரிக்காய் வெள்ளைப் பூண்டு இவற்றை நினைத்து ஏங்கினார்கள்.
தேவன் வானத்திலிருந்து பொழிந்த மன்னாவை அலட்சியம் பண்ணி உணவுக்காகக் கூடார வாசலில் நின்று கதறினார்கள்.
இதற்குக் காரணம்
எகிப்திலிருந்து இவர்களோடு இணைந்து வந்த யூதர்கள் அல்லாத ஒரு கூட்டம்தான்.(A mixed multitude).
இவர்கள் எதற்காக யூதர்களோடு புறப்பட்டு வந்தார்கள் என்று நமக்குத் தெரியாது.
ஆனால் இவர்கள் இஸ்ரவேலருக்கு மிகப்பெரிய இடறலாகக் காணப்பட்டார்கள்.
எப்படி என்றால் ஆண்டவர் அவர்களுக்கு அளித்த மன்னாவின் மீது ஒரு வெறுப்பை உண்டாக்கியவர்கள் இவர்கள்தான்.
இதனால் யூதர்கள், தேவன் வானத்திலிருந்து பொழிந்த மன்னாவை அலட்சியம் பண்ணி உணவுக்காகக் கூடார வாசலில் நின்று கதறினார்கள்.
இதைப் பார்த்து மோசே ஆண்டவரிடம் "நான் இவர்களைப் பெற்றேனா? என்னைக் கொன்றுவிடும் இந்தப் பாரத்தை என்னால் சுமக்க முடியாது "என்று விரக்தியில் ஆண்டவரிடம் புலம்பியதை பார்க்கலாம்.
விரக்தியின் உச்ச கட்டத்திற்கே மோசே சென்று விட்டான்.
இதைப் பார்த்து ஆண்டவர் ஒரு காற்றை அனுப்பி கடலில் இருந்த காடை பறவைகளை அடித்து முகாம் முழுவதும் நிரப்பினார்.
அந்தக் காடைகளை யூதர்கள் விழுங்குவதற்கு முன்பாகக் கர்த்தருடைய கோபம் மூண்டு கொடிய கொள்ளை நோயினால் பாதிப்பு ஏற்பட்டது. .இவ்வளவு பெரிய பாதிப்புக்கு அடித்தளமிட்டவர்கள் யூதர்களோடு இணைந்து வந்த யூதர்கள் அல்லாத மக்கள்தான்.
இந்த நிகழ்வுகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் உணர்த்தும் பாடங்கள் என்ன?
1.இந்த நிகழ்வுகள்
நமதுஆண்டவர் களைகளைக் குறித்் ஓடும் மத்13:24-30,36-43 ல் சொன்ன வார்த்தைகளை நினைவுபடுத்துகிறது.
சபைகளில் எப்பொழுதுமே பயிர்களோடு களைகளையும் பிசாசு விதைத்து விடுவான்.
இந்தக் களைகளும் பயிர்களைப் போலவே காட்சியளிக்கும். இவர்களும் மனம் திரும்பிய விசுவாசிகளைப் போல எல்லா நிலைகளிலும்
காட்சியளிப்பார்கள்.
சமயம் வரும்போது பிசாசு இவர்களைப் பயன்படுத்துவான். இவர்கள் கள்ள சகோதரர்கள்
கலா2:4,2கொரி11:26.
இவர்கள் ஊழியக்காரர்களைப் போல் தோற்றமளிக்கும் போலியான ஊழியக்காரர்கள்.2கொரி 11:13.
இந்தக் களைகள் எப்பொழுதும் சபைகளில் காணப்படும்.
நாம் தான் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் விழிப்பாக இருக்க வேண்டும்.
2.இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய குறிப்பு.
எப்பொழுதுமே நம்முடைய ஆவிக்குரிய பயணத்தில் கர்த்தருக்கு சித்தம் இல்லாதவர்கள், தேவையில்லாதவர்கள் நம்மோடு பயணிக்கும்போது அவர்கள் பல நேரங்களில் நமக்கு இடறலாக மாறிவிடுவார்கள்.
நம்மைத் தேவனுடைய சித்தத்தை விட்டு வழி விலகச் செய்து விடுவார்கள்.
நம்மைக் கொண்டு கர்த்தர் கொண்டிருக்கும் சித்தத்தை செயல்படுத்த விடாமல் தடுத்து விடுவார்கள்.
சில நேரங்களில் பாவங்களுக்கு நேராக வழி நடத்துவார்கள்.
எனவே நம்மோடு ஆவிக்குரிய பயணத்தில் நம்மோடுபயணம் செய்வர்களை குறித்து நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
எல்லா மனிதர்களும் நமக்கு ஆவிக்குரிய உதவி செயபவர்கள் என்று எண்ணிவிட முடியாது.
அதில் களைகளும் இருக்கும்.
இதே போல் தான் ஆபிரகாம் கர்த்தருக்கு சித்தம் இல்லாமல் எகிப்துக்கு சென்றபோது பார்வோன் அளித்த வெகுமதியில் வந்த வேலைக்கார பெண் ஆகார் மூலமாகத் தேவை இல்லாத சந்ததி உருவாயிற்று.
எனவே நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் 'ஆண்டவரே என் வாழ்க்கையில் தேவையில்லாத நட்புகளை உறவுகளை, ஐக்கியங்களைஅகற்றி விடும்'என்று ஜெபிப்பது அவசியமான ஒன்று.
படிக்க யாத்12:38 எண்ணாகமம் 11வது அதிகாரம்
ஆதி12:15,16.
Ezekiel Shanmugavel