Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 சாமுவேல் புத்தகம்.வேதபாடம்7

70 பேருடன் எகிப்துக்கு சென்ற யாக்கோபின் குடும்பம் ஏறக்குறைய 400 ஆண்டுகள் அங்கே அடிமைகளாக வாழ்ந்தார்கள்.
அப்பொழுது அவர்கள் பலுகி பெருகினார்கள்.
அவர்கள் எகிப்தைவிட்டு கடக்கும்பொழுது அவர்களுடைய ஜனத்தொகை 20 லட்சம்  இருந்திருக்கும் என்று பல வேத அறிஞர்கள் சொல்லுகிறார்கள்.
அவர்கள்  கானானை நோக்கிப் பயணப்பட்டார்கள்.
அந்த ஜனங்களை மோசே 40 ஆண்டுகள் வழி நடத்தினார்.
அதற்குப் பிறகு யோசுவா 52 ஆண்டுகள் அவர்களை நியாயம் விசாரித்தார்.

பிறகு 500 ஆண்டுகள் பல்வேறு நியாயாதிபதிகள் இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்தார்கள்.

அவர்களின் கடைசி நியாயாதிபதி சாமுவேல்.
இந்தச் சாமுவேல் மட்டும் இஸ்ரவேல் ஜனங்களை ஏறக்குறைய 60 ஆண்டுகள் நியாயம் விசாரித்தார்.

இறுதியாக அவர்கள் மன்னர் ஆட்சியை விரும்பிக் கேட்டார்கள்.

சாமுவேல் தீர்க்கதரிசி கடைசியாக இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த செய்தி பல வகைகளில் சிறப்பானது அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
படிக்க 1 சாமு புத்தகம் 12 வது அதிகாரம்.
Farewell address of Samuel.

அவரது இறுதிப் பேச்சில் ஒரு முக்கிய காரியத்தைச் சாமுவேல் தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார்.

அதுதான் கர்த்தருடைய வழிகளைப் பின்பற்றுகிற காரியம்.

மோசே நடத்தினாலும், யோசுவா நடத்தினாலும், நியாயாதிபதிகள் நடத்தினாலும், அவர்களை உண்மையாக இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினவர் கடவுள் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

அவர்கள் பல்வேறு நேரங்களில் கர்த்தருக்கு பிரியம் இல்லாத காரியங்களைச் செய்து கர்த்தருக்கு கோபமூட்டினாலும்
கர்த்தர் அவர்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடவில்லை.
1 சாமுவேல் 12:22.

மேலும் இறுதியாக
சாமுவேல் ஜனங்களுக்குச் சொன்ன செய்தி
" இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள்."
1 சாமுவேல் 12:20.
.
ஒரு புதிய அமைப்புக்குள் அதாவது மன்னராட்சி முறைக்குள் இஸ்ரவேல் ஜனங்கள் செல்லப் போகிறார்கள். ஆனால்‌ அந்த அமைப்புக்குள்ளும் அவர்கள் ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து நடந்தால்தான்  பாதுகாப்பு.
வெறுமனே மன்னராட்சி அமைப்பு மட்டுமே அவர்களைப் பாதுகாக்காது.
எனவே தேவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்வதுதான் இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பாதுகாப்பு என்பது தான் அவருடைய இறுதி செய்தியின் சாராம்சம்‌.
இதை வைத்து இன்றைய சூழ்நிலையைப் பொருத்திப் பார்ப்போம் என்றால் நம் தேசத்தை ஆளுகின்றவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர்களை ஆளுகிறவர் தேவன். நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து அவருடைய வழிகளில் நடக்கும்போது கர்த்தருடைய பாதுகாப்பு.
நமக்குக் கிடைக்கும்.
இதுவரைக்கும் நம்முடைய வாழ்க்கையில் தேவன்
எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்து, கர்த்தருக்குப் பயந்து, நமது முழுஇருதயத்தோடும்
அவரைப் பின்பற்ற வேண்டும்
1 சாமுவேல் 12:24
இனி வருங்காலங்களில்‌ நம்முடைய தேசத்தில் அரசியலில்எத்தகைய அரசியல் மாற்றங்கள் வருமோ, பொருளாதாரத்தில் எத்தகைய வீழ்ச்சி ஏற்படுமோ, என்னென்ன பாதகங்கள் ஏற்படுமோ நம்முடைய மத சுதந்திரத்தில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படுமோ இவைகள் பற்றி எல்லாம் எல்லாம் நமக்குத் தெரியாது.
நாம் அதற்காக ஜெபிக்க வேண்டியது நம்முடைய கடமை.
அதே வேலையில் நாம் அவரை உண்மையாய் சேவித்து சாட்சியாக வாழ்ந்து உலக மக்கள் மத்தியில் அவருடைய நாமத்தை உயர்த்தும்போது நிச்சயமாக அவருடைய பாதுகாப்பு நம்மிடத்தில் இருக்கும்.
தவிர வேறு மாற்று வழி கிடையாது. நாம் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் அது அவர்களுக்குப் பாதுகாப்பு அல்ல. நம்முடைய ஒரே பாதுகாப்பு அவருடைய வழியில் நடந்து அவருடைய சித்தத்தை செய்வது மட்டுமே.
அதுபோலச் சபைகளில் இயக்கங்களில் கால சூழ்நிலைகளுக்கு ஏற்பப் பலவிதம் மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கும். ஆனால் அடிப்படைக் கொள்கை அவருக்குப் பிரியமாக வாழ வேண்டும் என்பதே.
கடவுளுடைய வார்த்தை, விசுவாசத்தின் அவசியம் அவருடைய குணாதிசயங்கள் ஒருபோதும் மாறாதது
எசேக்கியேல் சண்முகவேல்.
Methods are many, principles are few;
Methods always change, principles never do.W.W.Wiersbe.