1சாமுவேல் புத்தகம் வேதபாடம் 8
சவுலை தேவன் நிராகரிக்க எது காரணமாயிற்று?
சவுலுடைய கீழ்ப்படியாமையா?
அல்லது யூதா குலத்தைக் குறித்த தேவனுடைய தெரிந்து கொள்ளுதலா?
யாக்கோபு தன்னுடைய 12 குழந்தைகளில் யூதாவை குறித்து சொல்லும்போது
"செங்கோல் யூதாவைவிட்டு நீங்காது" என்று தீர்க்கதரிசன உரைத்தார்.
Judah was the Kingly tribe.
ஆனால் தேவன் இஸ்ரவேல் ஜனங்களுடைய நிர்பந்தத்துக்காகச் சவுலை முதலில் தெரிந்தெடுத்தார்.
அவன் யூதா குலத்தைச் சேர்ந்தவன் அல்ல.
ஆனால் யூதா கோத்திரத்தில் இருந்துதான் உலகத்தின் இரட்சகர் பிறக்க வேண்டும் என்பது தேவனுடைய அனாதி திட்டம்.
அதே வேலையில்
சவுல் தன்னை ஆசாரியனாக நினைத்துச் சாமுவேல் தீர்க்கதரிசி வருவதற்கு முன்பாகவே கடவுளுக்குச் சர்வாங்க தகன பலியை செலுத்தினார்
13:12
ஆதலால்
சவுலூடைய ராஜ்யபாரம் நிலைநிற்கவில்லை. கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்.
காரணம் கர்த்தர் விதித்த கட்டளையைச் சவுல் கைக்கொள்ளவில்லை என்பதே
1 சாமுவேல் 13:14.
முதலில் கடவுள் அவனை அரசன் ஆக்கியது பின்பு அவனுடைய மீறுதலால் அவனை விலக்கியது பிறகு தாவீதை அரசனாக்கியது இவைகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கும்பொழுது எனக்குப் புரிந்தது.
கடவுள் மனிதனுக்கு கொடுத்த சுயாதீனம் (Liberty)மனிதனைக் குறித்த அவருடைய முன்னறிவிப்பு (His foreknowledge) அவருடைய தெரிந்து கொள்ளுதல்(Predestination), இறுதியாக அவருடைய இறையாண்மை (sovereignty).
இதே போல் தான் கடவுள் உலகத்தைப் படைத்து ஆதாம் ஏவாளை உருவாக்கினது அதற்குப் பிறகு அவர்களுடைய கீழ்படியாமை அதன் விளைவாக முழு மனுக்குலதிற்கும் அவருடைய குமாரன் மூலமாக இரட்சிப்பு இவைகள் அனைத்தையும் இனைத்துப் பார்க்க வேண்டும்.
இந்த எல்லா நிகழ்வுகளிலும் மேலோங்கி இருப்பது தேவனுடைய இறையாண்மையே.
யூதாஸை இயேசு கிறிஸ்து சீடராகத் தெரிந்து கொண்டது அவனவரை காட்டிக் கொடுத்தது அதன் விளைவாக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது அதன் விளைவாக உலகத்திற்கு கிடைத்த இரட்சிப்பு இவைகள் அனைத்தையும் ஒரே கோட்டில் இணைத்துப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
தேவனுடைய திட்டத்தில் அவருடைய முன்னறிவிப்பு, அவருடைய தெரிந்து கொள்ளுதல், அவருடைய இறையாண்மை இவைகளோடு மனிதனுக்கு அவர் கொடுத்த சுயாதீனம் இவைகள் அனைத்தும் இந்த உலகத்தில் செயலாற்றி கொண்டிருக்கிறது.
Free wiii
God's foreknowledge
God's election.
God's sovereignty.
These are the for fundamental principles of God's working in the world.
ezekiel shanmugavel